காடுகளின் பயன்கள் கட்டுரை

Kadukalin Payangal In Tamil Katturai

காடுகளின் பயன்கள் கட்டுரை: உலகில் மனிதன் மட்டுமல்ல எந்தவொரு உயிரினங்கள் வாழ வேண்டுமானாலும் காடுகள் வாழ வேண்டும் காடுகளை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரினதும் தலையாய கடமை.

இந்த பதிவில் “காடுகளின் பயன்கள் கட்டுரை” (Kadukalin Payangal In Tamil Katturai) காண்போம்.

காடுகளின் பயன்கள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. காடுகளின் பரம்பல்
  3. காடுகளின் தொழிற்பாடு
  4. காடுகளின் பயன்கள்
  5. காடழிப்பும் பூகோள வெப்பமயமாதலும்
  6. முடிவுரை

முன்னுரை

21 ஆம் நூற்றாண்டில் மனிதன் தொடமுடியாத உயரங்களை தொட்டுவிட்டான் ஆனால் பூமியையும் அங்குள்ள இயற்கையையும் பாதுகாக்கவோ மீள உருவாக்கவோ மனிதனால் முடியவில்லை.

இயற்கையின் வரமாக பல்லாயிர கணக்கான ஆண்டுகளாக மனிதன் சுவாசிக்க தேவையான ஒட்சிசனை பூமிக்கு வெளிவிடுகின்ற தாவரங்கள் அடங்கிய இயற்கையான சூழல் தொகுதியே காடுகளாகும்.

இக்காடுகள் மனித தலையீடுகளின்றி பூமியில் தோன்றிய வரப்பிரசதமாகும் இவை தான் சூழலை குளிர்விக்கின்றன மழையை பொழிவிக்கின்றன தரைக்கீழ் நீரை பிடித்து வைக்கின்றன அருவிகளை ஆறுகளை உருவாக்கி விவசாயத்தை பாதுகாக்கின்றன.

மனிதனுக்கு நிழலையும் தந்து பல்லாயிர கணக்கான விலங்குகள் பூச்சிகள் பறவைகள் மீன்களுக்கும் வாழ்விடமாக விளங்குகின்றன அந்தளவுக்கு பசும் போர்வையாக இக்காடுகளே எம்மை இரட்சிக்கின்றன என்பது விஞ்ஞான ரீதியான உண்மையாகும்.

ஆனால் மனிதர்களில் சிலர் இதை புரிந்து கொள்ளாது காடுகளை அழித்த வண்ணமே உள்ளனர். இந்த கட்டுரையில் காடுகளின் பயன்கள்பற்றி பார்க்கலாம்.

காடுகளின் பரம்பல்

உலகினுடைய காடுகளின் பரம்பலானது புவியியல் அமைவிட ரீதியாக அயனமழைக்காடுகள், ஊசியிலைகாடுகள், சவன்னாக்களும் புல்வெளிகளும் என வகைப்படுத்தபடுகிறது.

இவற்றில் அயனமழைக்காடுகள் மத்தியகோட்டை அண்டி காணப்படும் காடுகளாகும் இவை என்றும் பசுமையான அதிக உயிர் பல்வகைமையை கொண்ட காடுகளாகும். இங்குள்ள தாவரங்கள் பெறுமதி மிக்கனவாக உள்ளதால் அதிகம் மனிதனால் அழிக்கப்பட்டும் வருகின்றன.

உதாரணமாக அமேசன் மழைக்காடுகள் கொங்கோ மழைக்காடுகள் இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மழைக்காடுகள் தென்கிழக்காசியாவின் இந்தோனேசியா பிலிப்பைன்ஸ் லாவோஸ் போன்றவற்றில் அயன மழைக்காடுகளை காணமுடியும்.

மேலும் இடைவெப்பவலய நாடுகளான ஜரோப்பா வடஅமரிக்கா கனடா ஆகிய நாடுகளில் ஊசியிலை ஆபிரிக்கா ஆர்ஜென்ரினா அவுஸ்ரேலியா போன்ற நாடுகளில் சவன்னா புல்வெளிகளும் பரம்பியுள்ளன.

இக்காடுகள் வெவ்வேறான சிறப்பியல்புகளை கொண்டு காணப்படுகின்றன.

காடுகளின் தொழிற்பாடு

காடுகள் இயற்கையாகவே உருவாகின்றன காடுகளில் வாழ்கின்ற பறவைகள் தாவரங்களில் உள்ள பழங்களை உண்டு அவற்றின் விதைகளை எச்சமாக போடுவதனாலும் வெடித்து காற்றிலும் பரவி காடுகள் இயற்கையாகவே தம்மை தகவமைத்து கொள்கின்றன.

இரண்டு பில்லியன் மக்கள் காடுகளை நம்பியே தமது வாழ்க்கையினை நடாத்துகின்றனர் காடுகள் வளிமண்டலத்தில் காணப்படும் காபனீரொட்சைட்டை அகத்துறிஞ்சி ஒட்சிசனை வெளிவிடுகின்றது.

உதாரணமாக பூமிக்கு தேவையான 20 சதவதீமான ஒட்சிசனை அமேசன் காடுகள் உற்பத்தி செய்கின்றன அண்மைக்காலங்களாக வளிமண்டலத்தில் பச்சைவீட்டு வாயுக்களின் சதவீதம் அதிகரித்துவர காரணம் காடுகள் அழிவடைவதாகும்.

காடுகள் தரைக்கீழ் நீர்வளத்தை பாதுகாப்பதுடன் அருவிகள் நீர்ஊற்றுக்கள் என்பவற்றை உருவாக்குகின்றன. காடுகளின் மூலம் வெளிவிடப்படும் நீராவியே வளிமண்டலத்தில் ஒடுங்கி மழையாகவும் பெய்கிறது.

காடுகளே ஆகப்பெரிய உயிர்பெருந்திணிவு உணவு சங்கிலி, உணவு வலை என்பவற்றை கட்டமைத்து சூழல் சமநிலையை பேணுகின்றன.

காடுகளின் பயன்கள்

காடுகளின் எண்ணற்ற பயன்களை பூமிக்கும் பூமியில் வாழும் மக்களுக்கும் வழங்கி ஒரு கவசமாக தொழிற்படுகிறது காடுகளை பூமியின் நுரையீரல் என்று சிறப்பித்து கூறுவார்கள்.

நாம் சுவாசிக்க சுத்தமான காற்றையும் நாம் குடிக்க சுத்தமான நீரையும் நாம் உண்ண காய்கறிகள் கிழங்குகள் உணவையும் நாம் வாழ தேவையான வீடுகளை உருவாக்க தளபாடங்களையும் மருந்து மூலிகைகளையும் மனதை மகிழ்விக்கும் அழகான சூழலையும் இக்காடுகளே தருகின்றன.

இவ்வாறு காடுகளின் பயன்களை கூறிக்கொண்டே செல்லலாம்.

காடழிப்பும் பூகோள வெப்பமயமாதலும்

இன்று காடுகள் வேகமாக அழிக்கப்படுகின்றன அபிவிருத்தி நகராக்கம் எனும் போர்வையில் மனிதன் காடுகளை அழித்து வருவதானது யானை தன் தலையில் மண்ணை அள்ளி போடுவதற்கு ஒப்பானதாகும்.

காடுகளை அழிப்பதனால் விளைவுகள் பாரதூரமானதாக இருக்கும் காடழிப்பதனால் வளிமண்டலத்தில் காபனீரொட்சைட் அதிகரிக்கும் இதனால் வளமண்டல வெப்பநிலை உயர்வடையும்.

இதனால் நாம் வாழும் புவியின் வெப்பநிலை உயர்வடைவதனால் பூமியில் காலநிலை மாற்றம் பாலைவனமாதல் கடல்மட்டம் உயர்வடைதல் போன்ற பாரிய பிரச்சனைகள் தோன்றி வருகின்றமையால் மனித வாழ்க்கை சவால் மிக்கதாக அண்மைக்காலங்களில் மாறி வருவதை கண்கூடு காண முடிகிறது.

முடிவுரை

காடுகள் மிகவும் முக்கியமானவை அவை பாதுகாக்க பட வேண்டியவை இவற்றிலேயே மனித வாழ்க்கை தங்கியுள்ளது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். இன்று பல்வேறு நாடுகள் சூழல் ஆர்வம் கொண்ட நிறுவனங்கள் காடுகளை பாதுகாக்க முன்வருகின்றன.

காடுகளை பாதுகாக்கும் முகமாக சர்வதேச காடுகள் தினம் மார்ச் 21 உலகளவில் ஜக்கியநாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது ஆகவே காடுகள் பாதுகாக்க படவேண்டியதன் அவசியத்தை உணர்ந்து நாம் அனைவரும் இணைந்து காடுகளை பாதுகாப்போம்.

அடுத்த தலை முறை வாழ காடுகளை வாழ வைப்போம்.

You May Also Like:

எனது கனவு நூலகம் கட்டுரை

எனது கனவு பள்ளி கட்டுரை