குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வதையே குரு பெயர்ச்சி எனலாம். அந்த வகையில் துலாம் ராசியிலேயே களத்திர குருவானது காணப்படுகின்றது.
Table of Contents
களத்திர குரு என்றால் என்ன
களத்திர குரு என்பது குரு பகவான் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்து நேரடியாக ராசியை பார்க்கும் செயன்முறையே களத்திர குரு எனப்படும். அதாவது 12 ராசிகளில் அதிக பலனை கொண்டமைந்தது துலாம் ராசியாகும். இதன் குரு பெயர்ச்சியே களத்திர குரு ஆகும்.
களத்திர குரு பெயர்ச்சியின் பலன்கள்
களத்திர குரு துலாம் ராசியினை உடையவர்களுக்கு பல நல்ல காரியங்கள் வாழ்வில் நடந்தேறும். அந்த வகையில் இந்த குரு பார்வை கிடைத்தாலே வாழ்க்கை பொன்னாக ஜொலிக்கும்.
குரு பெயர்ச்சினை உடையவர்களது வாழ்வில் திருமண யோகம் கை கூடி வருவதோடு சிறந்த முறையில் திருமணம் நடந்தேறும். குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும் களத்திர குரு பெயர்ச்சியை உடையவர்களது வாழ்வில் குழந்தை பாக்கியமானது சிறப்பாக காணப்படும்.
பண ரீதியில் செல்வாக்கு பெற்று இவர்கள் காணப்படுவார்கள். மேலும் இவர்கள் பதவிகளில் பதவியுயர்வு ஏற்பட்டு சிறப்பாக தனது வேலைகளில் ஈடுபட துணை புரிகின்றது.
குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி அமைதியாக வாழ இந்த குரு பெயர்ச்சியானது துணை செய்கின்றது. மேலும் மரியாதைகள் அதிகரித்து காணப்படுவதோடு சக ஊழியர்களும் மதித்து நடப்பார்கள்.
களத்திர தோஷம்
களத்திர தோஷம் என்பது ஜாதகத்தில் லக்னம், சந்திரன் மற்றும் சுக்கிரன் இவர்கள் இருக்கும் இடத்திலிருந்து 1, 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது போன்ற கிரகங்கள் இருப்பதாலோ அல்லது ஒன்றுடன் ஒன்று சேர்ந்தாலே அது களத்திர தோஷம் எனப்படும்.
களத்திர தோஷம் ஏற்பட முன் ஜென்மத்தில் செய்த கர்ம வினைகளே காரணம் ஆகும். முன் ஜென்மத்தில் செய்த தீய செயல்களை பொறுத்தே களத்திர தோஷமானது இடம் பெறுகின்றது.
களத்திர தோஷத்தில் இருப்பவர்களுக்கு திருமணம் தாமதமாக இடம் பெறும் சில சந்தர்ப்பங்களில் திருமணம் நடைபெறாமலும் காணப்படும். அவ்வாறு திருமணம் இடம் பெற்றாலும் திருமண வாழ்வில் பிரச்சினைகளையே எதிர் கொள்வார்கள். இருவருக்குமிடையில் பரஸ்பரம் மற்றும் புரிந்துணர்வு காணப்படாது.
களத்திர தோஷத்தினையுடையவர்களுடைய வீட்டில் மக்கள் பூஜைகள் செய்தால் நற்பலன்கள் ஏற்படும் களத்திர தோஷத்தினை போக்குவதற்கு குருவின் ஆதிக்கம் நிறைந்த கோயிலிற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபடுவதன் மூலம் பல நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும்.
களத்திர தோஷமும் திருமண யோகமும்
ஜாதக ரீதியில் கிரக தோஷம் காணப்படுவது என்பது இயல்பாகும். அதாவது முன் ஜென்மத்தில் செய்த பாவத்தின் விளைவாக இந்த தோஷமானது இடம்பெறுகின்றது. இதனூடாக திருமண வாழ்க்கையானது தடைப்பட்டு கொண்டே இருக்கும்.
சிலரது வாழ்வில் நீண்டகாலமாக திருமணம் நடைபெறாமலே காணப்படுகிறது. இவ்வாறு காணப்படுபவர்கள் ஜோதிடர்களிடம் ஜாதகத்தை காண்பித்து இந்த தோஷத்தினை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
குருபலம் நிறைந்த தலங்கள் மற்றும் ஆதிக்கம் நிறைந்த திருத்தலங்களிற்கு சென்று வழிபாடுகளை மேற்கொள்வதன் மூலம் திருமண யோகம் கைகூடும். இந்த தோஷத்தினை போக்குவதற்கான பல்வேறு வழிமுறைகளை மேற்கொள்வதன் ஊடாக திருமணயோகம் கூடிவருவதோடு விரைவில் திருமணமும் நடைபெறும்.
Read More: கருங்காலி மாலை யார் அணியலாம்