கல்வி புரட்சி கட்டுரை

kalvi puratchi katturai in tamil

இந்த பதிவில் சமூகத்தின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றும் “கல்வி புரட்சி கட்டுரை” பதிவை காணலாம்.

கல்வியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மாற்றங்களால் கல்வித்துறையானது பாரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளது.

கல்வி புரட்சி கட்டுரை

கல்வி புரட்சி கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • காமராஜர் கல்வியில் மேற்கொண்ட புரட்சிகள்
  • ஆரம்ப மற்றும் நவீன கல்வி முறைகள்
  • கல்வியின் இன்றைய வளர்ச்சிகள்
  • கல்வியால் உயர்ந்தவர்கள்
  • முடிவுரை

முன்னுரை

“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு” என்று கூறினார் திருவள்ளுவர். மனிதர்களிற்கு கண்கள் எந்தளவிற்கு முக்கியம் வாய்ந்தனவோ அதேபோல் எண்ணும் எழுத்தும் மிகவும் அவசியமானவை என்பதே அதன் பொருளாகும்.

அத்தகைய சிறப்பு வாய்ந்த கல்வியை சிறுவயது தொடக்கம் கற்றுக் கொள்வதற்கு மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

கல்வியானது அனைவரிற்கும் கிடைக்கப் பெறுவதற்கும் கல்வியை கற்பதனோடினைந்த ஏனைய வசதிகளை அனைத்து மாணவர்களும் பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதனை வலியுறுத்தி புரட்சி புரிந்த மகான்களுள் காமராஜரும் ஒருவராவார்.

கல்வியில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகளையும் ஆரம்ப மற்றும் நவீன கல்வி முறைகளிற்கிடையேயான வேறுபாடுகளையும் அறிந்து கொள்வது அவசியமாகும்.

காமராஜர் கல்வியில் மேற்கொண்ட புரட்சிகள்

கல்வியின் புரட்சிக்காலம் என குறிப்பிடப்படுவது காமராஜர் ஆட்சிக்காலம் ஆகும். குருகுலக் கல்வி முறையை ஒழித்து அனைத்து மாணவர்களும் கல்வி கற்பதற்குரிய சூழலை உருவாக்கித் தந்தவர் அவரே.

கிராமப் புறங்களில் வாழும் ஏழை மாணவர்களும் கல்வியைப் பெற்றுக் கொள்ளும் வகையில் இலவசக் கல்வியையும் இலவச மதிய உணவுத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார்.

இதனால் 1957 காலப்பகுதியில் பத்தொன்பது இலட்சமாக இருந்த மாணவர் எண்ணிக்கை நாற்பது இலட்சமாக அதிகரித்தது. இது தமிழக கல்வித்துறையில் மிகப் பெரிய புரட்சியாகக் கருதப்பட்டது.

அதுமட்டுமின்றி ஒரு பள்ளிக் கூடத்திலிருந்து ஒரு மைல் தூரத்தில் அமையுமாறு இன்னொரு பள்ளி அமைக்கப்பட்டு அதிகளவான ஆரம்ப கல்வி பாடசாலைகளை தொடக்கி வைத்தார்.

ஆரம்ப மற்றும் நவீன கல்விமுறை

இந்தியாவின் கல்விப் புரட்சியானது இன்று நேற்று உருவான ஒன்றல்ல மாறாக புராதன காலத்திலிருந்தே கல்வியில் சிறந்து விளங்கிய நாடாகும். நாலந்த மற்றும் தக்சீலம் ஆகிய பல்கலைக்கழகங்களை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.

ஆரம்பத்தில் காணப்பட்ட குருகுலக் கல்விமுறை ஒழிக்கப்பட்டு அனைத்து மாணவர்களிற்கும் தாய்மொழி மூலமான கட்டாயக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்போது இந்தியாவை பொறுத்த வரை அரசு மற்றும் தனியார் துறைகளால் கல்வியானது வழங்கப்படுகின்றது.

கல்வியின் இன்றைய வளர்ச்சிகள்

அதிகரித்த தொழில்நுட்ப பயன்பாட்டினால் இணைய வழியில் வீடுகளிலிருந்தே கல்வி கற்கும் வகையில் வகதிகள் அறிமுகப்படுத்துப்பட்டுள்ளன.

பாடப்புத்தகங்கள் மற்றும் அப்பியாசக் கொப்பிகளுடன் இரண்டறக் கலந்த மாணவர்களின் வாழ்க்கை முறைமையானது கணனிகள் மற்றும் தொலைபேசி வழியிலான கல்வியாக மாற்றப்பட்டுள்ளன.

உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாட்டிலும் சென்று கற்கக்கூடிய வசதிகளும் காணப்படுகின்றன.

கல்வியால் உயர்ந்தவர்கள்

கல்வியால் சாதனை படைத்தவர்கள் பலரைக் குறிப்பிடலாம். கூகுள் நிறுவனத்தின் தயாரிப்புத் துறையில் தலைமை பொறுப்பை வகிக்கும் சுந்தர் பிச்சை இதற்கு சிறந்த உதாரணமாக விளங்குகின்றார்.

நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து தனது கல்வித் திறமையாலும் தொழில்நுட்ப அறிவினாலும் வாழ்வின் உயர்நிலையை அடைந்த அவரின் ஆண்டு வருமானம் பல கோடி ரூபாய்களாகும்.

மேலும் டாக்டர் அப்துல் கலாம், கல்பனா சௌலா, மருத்துவத்துறையில் தேர்ச்சி பெற்ற முதல் ஆசிய மற்றும் இந்தியப் பெண்ணான ஆனந்திபாய் ஜோஷி போன்றோரைக் குறிப்பிடலாம்.

முடிவுரை

கல்வியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மாற்றங்களால் கல்வித்துறையானது பாரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. உலக ரீதியில் மாணவர்கள் சாதனை புரிவதற்கான உத்வேகத்தை கல்வியானது வழங்கியுள்ளது.

இணைய மற்றும் கணனி சேவையை கிராமப் புறங்களிலுள்ள பாடசாலைகளிலும் அறிமுகப்படுத்துவதன் மூலம் அனைத்து மாணவர்களும் கல்வியின் பயனைப் பெற்றுக் கொள்ளலாம்.

You May Also Like :
இளமையில் கல்வி கட்டுரை
கல்வி வளர்ச்சி கட்டுரை