Table of Contents
அறிமுகம்
இன்று உலகளாவிய ரீதியில் பல சமூகங்களிலும் பல்வேறுபட்ட கலாசாரங்கள் பேணப்பட்டு வருவதனைக் காண முடிகின்றது. ஒவ்வொருவரும் தமது கலாசாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயற்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
உலகம் முழுவதும் கலாச்சாரமானது வேறுபட்டுக் காணப்பட்ட போதிலும் நவீன உலகில் ஒரு கலாச்சாரம் பிற கலாச்சாரத்தில் ஊடுருவிக் காணப்படுவதும் வழக்கமான ஒன்றாகும்.
கலாச்சாரம் என்றால் என்ன
மதம், உணவு, நாம் என்ன உடுத்துகிறோம், எப்படி உடுத்துகிறோம், நமது மொழி, திருமணம், இசை என அனைத்தையும் உள்ளடக்கியது தான் கலாச்சாரமாகும். இது உலகம் முழுவதும் வேறுபட்டுக் காணப்படுகின்றது.
மேலும், கலாச்சாரம் என்பது மொழி, மதம், உணவு வகைகள், சமூகப் பழக்கவழக்கங்கள், இசை மற்றும் கலைகளை உள்ளடக்கிய ஒரு குறிப்பிட்ட குழுவினரின் பண்புகள் மற்றும் அறிவு எனலாம்.
சமூகமயமாக்கல் மூலம் கற்றுக் கொள்ளப்படும் நடத்தைகள் மற்றும் தொடர்புகளின் பகிரப்பட்ட வடிவங்கள், அறிவாற்றல் கட்டமைப்புகள் மற்றும் புரிதல் கலாச்சாரமாகும்.
மேற்கத்திய கலாச்சாரம்
“மேற்கத்திய கலாச்சாரம்” என்பது ஐரோப்பிய நாடுகளின் கலாச்சாரத்தையும், அமெரிக்கா போன்ற ஐரோப்பிய குடியேற்றத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் கலாச்சாரத்தையும் வரையறுக்கின்றது.
மேற்கத்திய கலாச்சாரத்தின் வேர்கள் கிரேக்க-ரோமன் சகாப்தத்தின் (கி.மு. நான்காம் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டுகள்) மற்றும் 14 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்துவத்தின் எழுச்சியின் பாரம்பரிய காலகட்டத்திலும் உள்ளன.
மேற்கத்திய கலாச்சாரத்தின் பிற இயக்கிகளில் லத்தீன், செல்டிக், ஜெர்மானிய மற்றும் ஹெலனிக் இன மற்றும் மொழியியல் குழுக்களும் அடங்கும். இன்று, மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கங்கள் உலகின் எல்லா நாடுகளிலும் காணப்படுகின்றன.
கிழக்குக் கலாச்சாரம்
கிழக்கு கலாச்சாரம் என்பது பொதுவாக தூர கிழக்கு ஆசியா சீனா, ஜப்பான், வியட்நாம், வட கொரியா மற்றும் தென் கொரியா உட்பட மற்றும் இந்திய துணைக்கண்டத்தில் உள்ள நாடுகளின் சமூக நெறிமுறைகளைக் குறிக்கிறது.
மேற்கு நாடுகளைப் போலவே, கிழக்கு கலாச்சாரமும் அதன் ஆரம்பகால வளர்ச்சியின் போது மதத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்து மதம் இந்தியாவில் கலாச்சாரத்தின் முக்கிய உந்துதலாக மாறியது. அதே நேரத்தில் பௌத்தம் சீனா மற்றும் ஜப்பானில் தொடர்ந்து செல்வாக்கு செலுத்தியது. இந்த பகுதிகளில் ஏற்கனவே இருந்த கலாச்சார கருத்துக்கள் மதத்தையும் பாதித்தன.
தமிழர் கலாச்சாரம்
காலத்தால் மிகப் பழமையான கலாச்சாரமாக தமிழர் கலாச்சாரம் காணப்படுகின்றது. தமிழர்கள் பண்பாட்டுக் கூறுகளாக காதல், வீரம், ஈகை, விருந்தோம்பல், கொடை, கற்புடமை, நட்பு, உலக ஒருமைப்பாடு போன்றன காணப்படுகின்றன.
மனித இனம் எப்படி வாழ வேண்டும் என்பதைவிட எப்படி வாழக்கூடாது என்று வாழ்வியலைக் கற்றுக் கொடுத்த தமிழரின் கலாச்சார அடிச்சுவடுகள் இன்றும் உலகம் முழுவதிலும் தடம்பதித்திருக்கின்றது என்றால் அதுமிகையல்ல.
எனவே சமூகம் சிறந்து விளங்க வேண்டுமெனில் நல்ல கலாச்சாரம் பேணப்பட வேண்டும். கலாச்சாரம் பேணப்படும் போதுதான் ஒழுக்கமான வாழ்க்கை வாழ முடியும்.
You May Also Like : |
---|
சமூக நல்லிணக்கம் கட்டுரை |
தமிழ்நாட்டின் பெருமைகள் கட்டுரை |