கல்வியானது ஒரு மனிதனை இவ்வுலகில் முழுமை அடையச் செய்து அவனை வாழ்வில் உயர செய்கின்ற அழிவில்லா செல்வமாகும்.
Table of Contents
கற்றார் பெருமை கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- கற்றோரின் சிறப்பு
- கல்வியால் உயர்ந்தவர்கள்
- அப்துல் கலாம்
- கல்பனா சவ்லா
- சாக்கிரட்டீஸ்
- அறிஞர் அண்ணா
- கல்வியின் முக்கியத்துவம்
- முடிவுரை
முன்னுரை
இன்றைய உலகில் இன்றியமையாத ஒரு அத்தியாவசிய விடயமாக திகழ்வது கல்வியே ஆகும். எந்த ஒரு சமூகத்தினரும் கல்வியை கற்பதில் இருந்து விலகி செல்வது என்பது இன்றைய நவீன உலகில் மிகவும் அரிதான ஒரு விடயமாகவே காணப்படுகிறது.
ஏனெனில் கல்வியின் சிறப்பும், அதனைக் கற்று சிறப்புர வாழ்ந்தவர்களின் பெருமைகளையும் அனைத்து சமூகங்களும் புரிந்துள்ளன.
இதன் காரணமாகவே இன்று கல்வியானது மனிதனின் முக்கிய தேவையாக காணப்படுகிறது. இக்கட்டுரையில் கல்வியின் சிறப்பு பற்றிய கற்றோரின் சிறப்புகள் பற்றியும் நோக்குவோம்.
கற்றோரின் சிறப்பு
“மன்னனு மாசறக் கற்றோனுஞ் சீர்தூக்கின்
மன்னனிற் கற்றோன் சிறப்புடையன்-மன்னற்குத்
தன்தேச மல்லாற் சிறப்பில்லை கற்றோற்குச்
சென்றவிட மெல்லாம் சிறப்பு.”
என்ற பாடலினூடாக மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனின் கற்றோன் சிறப்புடையன் மன்னற்குத் தன்தேசம் அல்லால் சிறப்பு இல்லை கற்றோற்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.
அதாவது மன்னனையும் மாசு போகக் கற்றவனையும் சீர்தூக்கிப் பார்த்தால் மன்னனைக் காட்டிலும் கற்றவன் சிற்றப்புடையவன். எப்படி என்றால், மன்னனுக்கு அவனது ஆட்சிக்கு உட்பட்ட நாட்டில் மட்டுமே சிறப்பு. கற்றவனுக்கோ அவன் சென்ற இடத்திலெல்லாம் சிறப்பு என்று கூறப்படுகிறது.
கற்றோரிடம் காணப்படும் கல்வி செல்வத்தை பிறருக்கு வழங்க வழங்க அந்த செல்வமானது அதிகரித்துக் கொண்டே செல்வதனால் கற்றோர் எப்போதும் மேன்மை அடைகின்றனர்.
கல்வியால் உயர்ந்தவர்கள்
கல்வியை சிறப்பான முறையில் கற்று நமது வாழ்க்கையில் உயர்வடைந்து நாட்டிற்கான பல சாதனைகளைப் படைத்தவர்கள் பலர். அவர்களுள் அம்பேத்கர், அப்துல் கலாம், அறிஞர் அண்ணா, கல்பனா சாவ்லா, சுந்தர் பிச்சை போன்ற குறிப்பிடத்தக்கவர்களாவர்.
அப்துல் கலாம்
சிறுவயதில் இருந்தே கல்வி மேல் கொண்ட ஆர்வம் தான் அவரை விஞ்ஞானியாக உருவாக்கி, உலகம் கொண்டாடும் மனிதராக மாற்றியது.
கல்பனா சவ்லா
விண்வெளிக்குப் பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவர் கல்பனா சவ்லா ஆவார். பல பெண்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கின்றார். ஒரு சாதாரணப் பள்ளியில் படித்து பலர் வியக்கும்படி வாழ்ந்து காட்டினார்.
சாக்கிரட்டீஸ்
உலகின் முதலாவது தத்துவஞானியாக போற்றப்படுகின்ற சாக்கிரட்டீஸ், அவர் நஞ்சூட்டப்படும் வரை புத்தகங்களை படித்துக் கொண்டுதான் இருந்திருக்கின்றார். அவர் கற்ற கல்விதான் அவரை அறிவியலாளராக மாற்றியது.
அறிஞர் அண்ணா
பல இன்னல்களுக்கு மத்தியில் கல்வி கற்று நாட்டின் முதலமைச்சராக சிறப்புற ஆட்சி செய்தவர்.
கல்வியின் முக்கியத்துவம்
ஒருவன் எவ்வளவு கடினபட்டாலும் கல்வியை சரியான முறையில் பெற்றுவிட வேண்டும் என்பதனை ஒளவையார் “பிச்சை புகினும் கற்கை நன்றே” என்று வலியுறுத்துகின்றார். இதன் மூலம் ஆதிகாலம் தொட்டே கல்வியின் முக்கியத்துவம் வெளிப்படுவதை அறியலாம்.
நாட்டின் அபிவிருத்தியை முன்னோக்கிக் கொண்டு செல்லவும், வறுமையைப் போக்கவும் கல்வி மிகமிக முக்கியமானதாகும். உலகை மாற்றக்கூடிய சக்தி கல்விக்கு உண்டு.
நல்லவை, தீயவை என பிரித்தறிந்து வாழ்வில் நலம் பெற கல்வி முக்கியமானதாகும். பிறர் நம்மை மதிப்பதற்கும் கல்வி என்பது மிக முக்கியமானதொன்றாகும்.
முடிவுரை
அழியாத சிறந்த செல்வமாக காணப்படுகின்ற கல்வியானது ஒருவரின் வாழ்வை உயர்த்துவதற்கு உறுதுணையாக அமைகின்றது.
நாட்டில் காணப்படுகின்ற மிகச்சிறந்த தலைவர்கள் பல சிறந்த முறையில் கல்வியை கற்று உயர்ந்தவர்களே. கல்வி கற்பதன் மூலம் சிறந்த சமூகத்தை உருவாக்க முடிகிறது.
You May Also Like :