கருந்துளை என்றால் என்ன

karundhulai endral enna

உலக அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் ஒன்று சேர்ந்து கருந்துளை என்பது ஒன்று உள்ளது என்று கண்டுபிடித்தனர்.உலகிலுள்ள எல்லா விடயங்களுக்கும் ஆரம்பம் என்ற ஒன்று இருக்கும் போது முடிவு என்பதும் உண்டு.

இதேபோல் நட்சத்திரங்களுக்கும் ஆரம்பமும் முடிவும் உண்டு. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் உலகத்திற்கும் ஆரம்பமும் முடிவும் உண்டு. இதே போல் நட்சத்திரங்களுக்கு முடிவின் போது அது கருந்துளையாக மாறி இறந்து போகும்.

கருந்துளை என்றால் என்ன

கருந்துளை என்பது விண்வெளியில் இருக்கும் துளை போன்ற வடிவம் அல்லது கரும் பகுதியாகும்.

விஞ்ஞானிகளின் கருத்துப்படி கருந்துளை பகுதியானது விண்வெளியில் காணப்படும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு ஈர்ப்பு சக்தி கொண்ட ஒரு பகுதியாகும்.

கருந்துளை(BLACK HOLE) என்பது மிகப்பெரிய அண்ட வெளியில் மற்றும் விண்வெளியில் காணப்படும் சக்தி வாய்ந்த கண்ணுக்கு தெரியாத வெற்றிடமாகும். இந்த கருந்துளை அதிக ஈர்ப்பு விசை கொண்டது. எந்த அளவுக்கு என்றால், இதனை கடந்து செல்லும் எந்த ஒரு ஒளியாக இருந்தாலும் அதைகூட தனக்குள் ஈர்த்துக் கொள்ளும் அளவிற்கு சக்திவாய்ந்தது. இது ஒரு சூரியனையே தனக்குள் ஈர்த்து கொள்ளும் அளவிற்கு சக்தி வாய்ந்தது.

கருந்துளை உருவாக்கம்

பொதுவாக ஐதரசன் அணுக்கள் அதன் சொந்த ஈர்ப்பு சக்தியினால் புகை வடிவமாக ஒன்று சேர்ந்து நட்சத்திரமாக மாற்றமடைகின்றது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் மத்திய பகுதியில் ஆக்சிஜன் அணுக்கள் உடைக்கப்பட்டு ஹீலியம் அணுக்களாக மாற்றமடைகின்றது.

இச் செயற்பாட்டினால் மிகப் பெரிய அளவிலான சக்தி விண்வெளியில் வெளிவிடப்படுகின்றது. இவ்வாறு வெளிவிடப்படும் சக்தியானது ஒருவகை கதிர் வீச்சாக மாற்றப்பட்டு அங்குள்ள ஈர்ப்பு விசைக்கு எதிராகவும் செயல்படும்.

இந்த ஈர்ப்பு விசையும், கதிர்வீச்சும் நடுநிலையாக இருக்கும் போது நட்சத்திரம் நிலையானதாக காணப்படும்.

ஒருவேளை இவ்வாறு உருவாக்கப்படும் நட்சத்திரம் சூரியனை விட அளவில் பெரியதாக இருக்கும் பட்சத்தில் நட்சத்திரத்தின் மத்தியில் உருவாகும் அதிகளவிலான வெப்பத்தினாலும் அமுக்கத்தினாலும் அங்குள்ள கூறுகள் ஒன்றிணைந்து இரும்பாக மாற்றமடையும்.

இவ்வாறு நடைபெறும் நிகழ்வினால் இரும்பு உருவாகினால் அங்கு சக்தி வெளிவிடுவது நிறுத்தப்படும். இதனால் உருவாக்கப்படும் இரும்பானது அதன் உச்சபட்ச அளவை அடையும் வரை அளவில் விரிவடைந்து கொண்டு வரும்.

இதனால் நட்சத்திரத்திலிருந்து ஈர்ப்பு விசையும், கதிர்வீச்சின் சமநிலையும் குழப்பப்படும். பல ஆண்டுகள் நடைபெற்று வரும் செயற்பாட்டினால் நட்சத்திரத்தின் மத்திய பகுதி வெடிக்க ஆரம்பிக்கும்.

அவ்வாறு வெடிக்கத் தொடங்கும் நட்சத்திரம் ஒன்று இறந்து நியூட்ரான் நட்சத்திரமாக மாற்றமடையும் அல்லது நட்சத்திரத்தின் மத்திய பகுதி உடைக்கப்பட்டு கருந்துளையாக மாற்றமடையும்.

கருந்துளையின் ரகசியங்கள்

வெற்றுக் கண்களால் காண முடியாது. பூமியிலிருந்து ஒரு பொருள் வெளியில் செல்ல வேண்டும் எனில் 7Km/s அளவில் செல்ல வேண்டும்.

ஆனால் கருந்துளையில் இருந்து ஒரு பொருள் வெளியில் கிளம்பி வர வேண்டுமெனில் கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் செல்ல வேண்டும்.

ஐன்ஸ்டீன் கோட்பாட்டின்படி இப்பூமியில் எந்தவொரு பொருளும் ஒளியை விட வேகமாகப் போக முடியாது. எனவே ஒளி கூட தப்பித்து வர முடியாத நிலை உள்ளது. இவ்வாறு ஒளி வரமுடியாத காரணத்தால் தான் அது கறுப்பாக உள்ளது.

கருந்துளையானது ஒளியைக் கூட வளைக்க கூடிய மிகவும் சக்தி வாய்ந்ததாகும். கருந்துளையில் ஒருபக்கம் ஒளி நன்றாக வெளிச்சமாகத் தெரியும்.

மறுபக்கம் சிறிது இருட்டாக இருக்கும். காரணம் ஒரு பக்கம் ஒளி எம்மை நோக்கி வருகின்றது. மற்றைய பக்கம் நம்மை விட்டு ஒளி தூரமாக செல்வதே ஆகும்.

Read more: சூரிய கிரகணம் என்றால் என்ன

சந்திர கிரகணம் என்றால் என்ன