கணினி பற்றிய கட்டுரை

Kanini Patri Katturai In Tamil

இந்த பதிவில் “கணினி பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

இன்று பல வேலைகளை எளிதாக செய்ய உதவும் கணினி தொழில்நுட்பத்தின் உச்ச கண்டுபிடிப்பாக மக்களால் பார்க்கப்படுகின்றது.

கணினி பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. கணினியின் வரலாறு
  3. கணினியின் தோற்றம்
  4. கணினியின் வகைகள்
  5. கணினியின் பயன்கள்
  6. முடிவுரை

முன்னுரை

இன்றைய அறிவியல் வளர்ச்சியால் உலகம் ஒரு குடையின் கீழ் வந்துவிட்டது. தகவல் தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய மாற்றம் மனித குலத்தைப் புதிய உலகிற்கு கொண்டு சென்றுள்ளது.

ஓரிடத்தில் நடைபெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் இன்னோர் இடத்தில் இருந்து அறிவதற்கு தகவல் தொடர்பு சாதனங்கள் முக்கியம் பெறுகின்றன. இவற்றில் கணினியின் பங்கு அளப்பரியதாகும்.

கணினியின் தோற்றம்⸴ வளர்ச்சி⸴ அதன் பயன் போன்ற பல விடயங்களைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

கணினியின் வரலாறு

ENIAC [Electronic Numerical Integrator and Computer] என்ற கணினி தான் உலகின் முதல் பொது பயன்பாட்டுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. இது 1946 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது தற்போதுள்ள கணினிகள் போல் அல்ல மிகப் பிரமாண்டமானதாகும்.

அமெரிக்க ராணுவ பீரங்கி குண்டுகள் செல்லும் பாதையைக் கணிப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும். இது 27000 கிலோ கிராமுக்கு மேல் எடை கொண்டதாகும். தரவுச் செயலாக்க சுமார் 18 ஆயிரம் வெற்றிட குழாய்களை பயன்படுத்தப்பட்டுள்ளது.

கணினியின் தோற்றம்

ஆரம்பத்தில் கணக்கிடுவதற்காக எளிதான மணிச்சட்டம் உருவாக்கப்பட்டது. கணினி உருவாக இதுவே அடித்தளமாய் அமைந்தது. பிளேஸ் பாஸ்கல் என்னும் பாரிஸ் நகரை சேர்ந்த அறிஞர் கணக்கிடும் கருவியை கண்டறிந்தார்.

கிபி 1833 சார்லஸ் பாபேஜ் எனும் இங்கிலாந்து அறிஞர் கணினியை முதலில் வடிவமைத்தார். மின்னியல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி காரணமாக எண்ணிலக்க கணினியைக் கண்டறிய தூண்டியது.

இதுவே ஹார்வார்டு மார்க்1 எனப்படுகின்றது. தற்காலத்தில் மடிக்கணினி கையடக்க கணினி என பல கணினிகள் தோற்றம் பெற்றுள்ளன.

கணினியின் வகைகள்

கணினிகள் பல அளவுகளிலும் திறன்களிலும் தயாரிக்கப்படுகின்றன. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக கணணியில் பல புதுமையான அமைப்புகள் தோன்றியுள்ளன.

இன்று கணினி பல வகைகளில் காணப்படுகின்றது. மேசைக் கணினி⸴ மடிக்கணினி⸴ கையடக்கக் கணினி⸴ பணி நிலையக் கணினி போன்றன இவற்றுள் அடங்கும்.

கணினியின் பயன்கள்

அன்றாட வாழ்வில் இன்றியமையாத சாதனமாக கணினி பயன்பாட்டில் உள்ளது. வணிகம், அறிவியல்⸴ கல்வி⸴ மருத்துவம்⸴ தொலைத்தொடர்பு⸴ விண்வெளி⸴ பாதுகாப்பு என பல துறைகளுக்கும் கணினி பயன்படுகின்றது.

வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்த பயன்படுகின்றது. கணினி வழியாக தேவைப்படும் அனைத்து தகவல்களையும் நமக்கு அளிக்கின்றது. உடனுக்குடன் தகவல்களை அறிந்து கொள்ளவும்⸴ தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும் உதவுகிறது.

அலுவலகங்களில் தேவையான முக்கிய விபரங்களைச் சேர்த்து வைக்கவும்⸴ பாதுகாக்கவும் துணைபுரிகின்றது. நல்ல பொழுதுபோக்குச் சாதனமாகவும் கணினிகள் பயன்படுகின்றன.

முடிவுரை

கணினி அறிவியலின் அற்புதமான படைப்பாகும். மனித வாழ்க்கையிலும் அன்றாடத் தேவைகளிலும் மிக அவசியமான ஒன்றாக மாறியுள்ளது.

கணினி பற்றியும் அதன் இயக்கத்தை பற்றியும் அறிந்து அதனைச் சரியான வழியில் பயன்படுத்தினால் அதன் முழுப் பயனையும் அடையலாம்.

You May Also Like :

தமிழ் மொழியின் வரிவடிவ வளர்ச்சி

விருந்தோம்பல் பற்றிய கட்டுரை