இன்றய காலகட்டத்தில் கணித இடர்பாடானது மாணவர்கள் மத்தியில் மிகவும் அதிகமாகவே காணப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு கணித ஆசிரியரும் தன்னிடம் கணிதம் கற்கும் மாணவர்களுக்கு அதன் மீதான ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். இதன் மூலமாக கணித இடர்பாட்டினை குறைக்க முடியும்.
Table of Contents
கணித இடர்பாடு என்றால் என்ன
கணித இடர்பாடு என்பது யாதெனில் கணித பாடத்தில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களே கணித இடர்பாடாகும்.
அதாவது கணித பாடத்தை சரியாக விளங்கி கொள்ளாமை மேலும் கணித நுட்ப முறைகளை சரிவர விளங்கி கொள்ளாது இடர்படுகின்றனர். இவ்வாறாக காணப்படுவதே கணித இடர்பாடாகும். அதாவது கற்றலில் எய்தப்பட வேண்டிய தேர்ச்சியை அடைய முடியாது தத்தளிக்கும் நிலையாகும்.
கணித இடர்பாட்டிற்கான காரணங்கள்
பயம் காரணமாக கணித பாட அலகுகளில் இலக்கங்களில் இடமதிப்பு பற்றி அறிய முடியாததால் ஏனைய விடயங்களையும் கற்க தவறுகின்றனர். இதன் காரணமாக கணித இடர்பாடு ஏற்படுகின்றது.
கணித பாடத்தில் பல வழிமுறைகள், சூத்திரங்கள், தோற்றங்கள் போன்றவை அழுத்தமாக கூறப்பட்டுள்ளது. இதனால் பாடத்திட்டமானது கடுமையானது என அஞ்சி கற்க மறுக்கின்றனர்.
சரியான முறையில் ஆசிரியர் கற்பித்தலில் ஈடுபடாது செயற்படுகின்றனர். அதாவது ஆசிரியர்கள் கணித பாடத்தை கற்பித்து சரியாக அதனை புரிந்து கொண்டு செயற்படும் மாணவனையே சார்ந்திருக்கின்றனர். ஏனைய மாணவர்களை கவனிக்க தவறுகின்றனர். அதனால் மாணவர்களிடையே கணித இடர்பாடு தோன்றுகின்றது. மேலும் படப்புத்தகத்தை சேர்ந்தே ஆசிரியர்கள் காணப்படுகின்றனர்.
கணித இடர்பாட்டினை தடுப்பதற்கு போதுமான நேரத்தினை வழங்க வேண்டும். இதனுடாக கணித அலகுகளை புரிந்து கொள்ளமுடியாதவர்களால் அதனை இலகுவாக புரிந்து கொள்ளமுடியும்.
கணித இடர்பாட்டினை தவிர்ப்பதற்கு ஆசிரியர்கள் மேற்கொள்ளும் வழிமுறைகள்
மாணவர்களுக்கு ஏற்ற வகையில் கணிதத்தை கற்றுக்கொள்வதற்கு வழியினை ஏற்படுத்தி கொடுத்தல் வேண்டும். அதாவது ஆசிரியர்கள் சிறந்த முறையில் மாணவர்களை வழிகாட்ட வேண்டும்.
கணித கணக்கை முயற்சி செய்யும்போது ஒரு மாணவனின் திறனை நன்றாக புரிந்து கொண்டு ஆசிரியர் செயற்பட வேண்டும். இதனூடாக அம் மாணவன் சிறப்பாக கணிதத்தை கற்க முடியும்.
ஓர் கணித ஆசிரியரானவர் கணித பாடங்களுக்கு அப்பால் சென்று பிற விடயங்களையும் கற்பிக்க வேண்டும். மேலும் மாணவர்களுக்கு கணித சம்பந்தமான நகைச்சுவை, புதிர்கள் போன்றவற்றை கூறி மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
கணிதத்தின் முக்கியத்துவம்
இன்று அனைத்து துறைகளிலும் மிக முக்கியமான தொன்றாக கணிதமானது காணப்படுகின்றது. கணிதமானது தர்க்க ரீதியான சிந்தனை, யாதர்த்ததை நன்றாக புரிந்து கொள்வதற்கும் துணை புரிகின்றது.
கணிதத்தை சிறப்பாக கற்கும் ஒருவர் பல்வேறு அனுபவங்களை உருவாக்கி கொள்வதற்கு துணை புரிகின்றது. அதாவது சுற்று சூழலில் காணப்படுகின்ற பல விடயங்களை ஒப்பிடவும் அதன் ஒற்றுமை வேற்றுமைகளை கண்டறிந்து செயற்படவும் கணிதமானது வழியமைத்து தருகின்றது.
எந்தவொரு சிக்கலையும் மிகவும் துள்ளியமாக இணங்கண்டு தீர்ப்பதற்கும் இதனூடாக சிறந்த தீர்மானங்களை பெற்றுக்கொள்ளவும் கணிதமானது துணைபுரிகின்றது.
மேற்குறிப்பிட்ட வகையில் கணிதமானது அனைவருடைய வாழ்விலும் இன்றியமையாது ஒன்றாக காணப்படுவதோடு கணிதம் கற்பதற்கான ஒரு சிறந்த சூழல் காணப்பட வேண்டும். இதனூடாகவே சிறப்பாக கணிதத்தினை கற்றுக் கொள்ள முடியும்.
மேலும் கணிதத்தினை பாட அலகுகளின் ஊடாக மாத்திரமல்லாது இலகுவாக புரிந்து கொள்ளும் வகையில் செயற்பாட்டு வடிவில் கற்றுக் கொடுத்தல் வேண்டும்.
மாணவர்களின் கணித இடர்பாட்டிற்கான காரணங்களை கண்டறிந்து அதனை தீர்த்து வைப்பதோடு நின்று விடாமல் கணித பாடத்தில் தேர்ச்சியடைய வைப்பது அவசியமாகும்.
Read more: கருந்துளை என்றால் என்ன