காதினால் கேட்டு உணரக்கூடிய தூரமான ஒரு விடயமே ஓசையாகும். இந்த ஓசையானது செய்யுளின் கூறுகளாக காணப்படுகின்றது என தொல்காப்பியம் என்ற நூல் கூறுகின்றது.
செய்யுள்கள் அல்லது பாக்கள், அவற்றின் சீர்களுக்கு இடையேயுள்ள தளைகளின் தன்மையையொட்டி, வெவ்வேறு விதமான ஓசைகளை உடையனவாக இருக்கின்றன.
முக்கியமாக இவ்வோசை வேறுபாட்டின் அடிப்படையிலேயே பாவகைகள் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுகின்றன. இவ்வாறான ஓசையே இசை என்ற அற்புதம் உலகில் வளம் வருவதற்கு காரணமாக காணப்படுகின்றது.
இவ்வாறான சிறப்புடைய ஓசையின் வேறு பெயர்களாவன,
Table of Contents
ஓசை வேறு சொல்
- ஒலி
- சத்தம்
- அரவம்
- சப்தம்
- இரைச்சல்
ஓசையின் வகைகள்
ஓசையின் வகைகள் 100 என அபிதான சிந்தாமணி கூறுகின்றது. ஆனால் அவற்றில் செப்பலோசை, அகவலோசை, துள்ளலோசை, தூங்கலோசை இந்நான்கு ஓசைகளும் முக்கியமானவையாக காணப்படுகின்றன.
ஓசை இல்லை எனில் இசை என்பதில்லை இவ்வாறான சிறப்புக்களைக் கொண்டதே ஓசையாகும்.
Read more: மின்னோட்டம் என்றால் என்ன