மனித நாகரிகத்தில் ஆடையில் தொடங்கிய ஒப்பனை இன்று பல்வேறு வகையில் வளர்ந்துள்ளது.
உலகிலேயே முதன்முதலில் உதட்டுச்சாயம் (Lipstick) தயாரித்துப் பயன்படுத்தியவர்கள் இந்தியர்கள் ஆவார்கள். கி.மு. 3300 ஆம் ஆண்டுகளிலேயே இன்றைய பஞ்சாப் பகுதியில் வாழ்ந்த மக்கள் உதட்டுச்சாயம் பயன்படுத்தியிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. பின்னர், எகிப்து, அரேபியா, ஐரோப்பா, அமெரிக்க நாடுகளில் பரவின.
அதேபோல் கண் மை பூசும் வழக்கத்தை முதன்முதலில் ஆரம்பித்தது எகிப்தியர்கள். இவ்வாறு பழங்காலம் தொட்டே ஒப்பனை மனித வாழ்வியலில் கலந்துள்ளது.
இன்று நிச்சயதார்த்தம், சீமந்தம், பிறந்த நாள், மஞ்சள் நீராட்டு விழா, சிறப்பு விழாக்கள் போன்றவற்றிற்கு போகும் முன் ஒப்பனை என்று எல்லாவற்றிற்கும் ஒப்பனை செய்து கொள்கின்றார்கள்.
ஆனால் ஒப்பனையானது தமிழர் வாழ்வியலில் பழங்காலம் தொட்டே உள்ளது என்பதனை சங்க இலக்கியங்கள் தெளிவுபடுத்துகின்றன.
குறிப்பாக சிலப்பதிகாரத்தில் மாதவி தன்னை அழகுபடுத்திக் கொள்வது பற்றி இளங்கோவடிகள் விபரித்துக் கூறியுள்ளார்.
“பத்துத் துவரினும் ஐந்து விரையினும்
முப்பத்திரு வகை ஓமாலிகையிலும் ஊறின,
நன்னீருரைத்த நெய்வாசம் நாறிருங் கூந்தல்
நலம்பெற வாட்டிப் புகையிற் புலர்த்திய
பூமென் கூந்தலை வகைதொறு மான்மதக் கொழுஞ் சேறூட்டி”
அதாவது தன்னுடைய கரிய கூந்தலைப் பத்து வகையான மூலிகைகள். ஐந்து வகையான விரைகள் நன்னாரி, கஸ்தூரி வேர், தமாலம், வகுளம் போன்ற 32 வகை ஓமாலிகளும் ஊற வைத்த நன்னீரிலே கூந்தலை நனைத்தாள்.
பின்னர் அகிற்புகையில் கூந்தலை உலர்த்தினாள். அதில் கஸ்தூரிக் குழம்பைப் பூசினாள் என விவரித்துள்ளார்.
இதன் மூலம் பழங்காலத்திலும் ஒப்பனை இருந்துள்ளது என்பதனை அறிய முடிகின்றது.
Table of Contents
ஒப்பனை என்றால் என்ன
ஒப்பனை (Makeup) என்பது அலங்கரிக்கப்பட்ட நிலையாகும். அலங்கரித்தல் என்ற பொருள் என்றாலும் வழக்கில் பெண்கள் செய்து கொள்ளும் அலங்காரத்தையும் நாடக நடிகர்கள் செய்து கொள்ளும் அலங்காரத்தையுமே குறிக்கிறது.
ஒப்பனை என்பது சமூகத்தின் மத்தியில் மிகவும் பிரபல்யமாக உள்ளது குறிப்பாக பெண்கள் மத்தியில் ஒப்பனை தனிச்சிறப்பிடம் வருகின்றது.
ஒப்பனைப் பொருட்கள்
இன்று எண்ணில் அடங்காத ஒப்பனைப் பொருட்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. அவை அனைத்துமே சருமத்திற்கு ஏற்றதா என்றால் அது கேள்விக்குறியே! ஒப்பனைப் பொருட்கள் மனித ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கின்றன.
எனவே, நம்பகமான நிலைமைகள் மற்றும் தரங்களின் கீழ் ஒப்பனை தயாரிப்புகளை தயாரிப்பது அவசியம். திறமையான மற்றும் நம்பகமான பொருட்களின் உற்பத்தியை உறுதி செய்வது அவசியமானதாகும்.
தரமற்ற ஒப்பனைப் பொருட்களை பாவிக்கும்போது பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். குறிப்பாக எரிச்சல், தோல் அழற்சி, தோல் தடிப்புகள், தோலில் சிறு துளையிடும் தோல்கள், கொப்புளங்கள் மற்றும் தோலின் வீக்கம், காலாவதியான லிப்ஸ்டிகால் உதடு வீக்கம், அரிப்பு மற்றும் உதடு ஒவ்வாமை ஆகியவற்றை ஏற்படுத்தும்.
காலாவதியான ஒப்பனைப் பொருட்களை பயன்படுத்த கூடாது. ஒப்பனை பொருளினுடைய தரத்தை உறுதி செய்து கொண்டதன் பின்னர் பயன்படுத்துவது சிறந்தது. முடிந்தவரை செயற்கை ஒப்பனைப் பொருட்களைத் தவிர்த்து இயற்கைப் பொருட்களைக் கொண்டு ஒப்பனை செய்து கொள்வது சிறந்ததாகும்.
Read more: ஒப்பனை வேறு சொல்