Table of Contents
ஏறுதழுவுதல் அறிமுகம்
வீரத்திற்கும், விளைச்சலுக்கும், செழிப்பிற்கும், செல்வத்திற்கும் தமிழர்களால் அடையாளப்படுத்தப்படுபவை மாடுகள் ஆகும்.
முல்லை மற்றும் மருத நிலங்களில் இருந்து தமிழர்தம் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்து பண்பாடாகியுள்ளது ஏறுதழுவுதல் என்றால் அதுமிகையல்ல.
திமில் கொண்ட காளைகளைத் திமிர் கொண்டு கண்ணியர் கரம் பற்ற காளையோடு மல்லுக்கட்டும் இளம் காளையர் கூட்டம் தமிழர் கூட்டமாகும்.
ஏறுதழுவுதல் என்றால் என்ன
ஏறுதழுவுதல் என்பது தமிழர்களின் மரபுவழி வீர விளையபட்டுக்களில் ஒன்றாகும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது அல்லது கொம்புகளைப் பிடித்து வீழ்த்துவதாக இவ்விளையாட்டு காணப்படுகின்றது.
ஏறுதழுவுதல் வேறு பெயர்கள் யாவை
ஏறு தழுவுதல், மாடு பிடித்தல், மாடு அணைத்தல், மாடு விடுதல், மஞ்சுவிரட்டு, வேலி மஞ்சுவிரட்டு, காளை விரட்டு, பொல்லெருது பிடித்தல், ஜல்லிக்கட்டு என பல பெயர்களால் அழைக்கப்படுகின்றது.
இன்றைய காலங்களில் “ஜல்லிக்கட்டு” எனப் பரவலாக அழைக்கப்படுகின்றது.
ஏறுதழுவுதல் பற்றி குறிப்பிடும் சங்க இலக்கியம்
கூடிக் கொல்லுகின்ற காளையின் கொம்புகளுக்கு அஞ்சும் இளைஞர்களை மறுபிறவியில் கூட ஆயர் மகள் திருமணம் செய்யமாட்டாள் என்கின்றது கலித்தொகை.
“கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்”
என்கின்ற வரிகள் மூலம் அதனை நன்கறியலாம்.
மேலும், மாமன் மகளை மணக்க மாடுகளை அடக்கிய மாதவன் ஏழு காளைகளை அடக்கி தன் மாமன் மகளான நப்பின்னை என்னும் பெண்ணை திருமணம் செய்துகொண்ட மாயோன் என காளையை அடக்கும் மாவீரனை அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து வைத்தனர் என்று சங்க இலக்கியமான கலித்தொகை கூறுகின்றது.
பழந்தமிழர் வாழ்க்கை காதலையும், வீரத்தையும் அடிப்படையாகக் கொண்டது. முல்லை நிலப் பெண்கள் பருவம் எய்தியது தம்மிடமுள்ள காளைக் கன்றை அவள் பொருட்டு ஊட்டமிக்க உணவு கொடுத்து வளர்ப்பர் என்றும் அது காளைப் பருவம் எய்திய நிலையில் அதனை அடக்கும் வீரனுக்கு அப்பெண்ணை மனம் செய்து வைப்பர் என்றும் கூறப்படுகின்றது.
பல நிற காளைகளை சுட்டிக்காட்டி அதனை அடக்குபவர்களையே பெண்கள் விரும்புவர் என்பது சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவை கூத்தின் கொளு பாடல் தெளிவுபடுத்துகின்றது. அதாவது
“காரி கதனஞ்சான் பாய்ந்தானைக் காமுறுவில்
வேரி மலர்க் கோதை யாள்”
எனக் கூறிப்பிடப்படுகின்றது.
ஏறுதழுவுதல் வீரனை மணந்த ஒரு ஆயர் மகள் நெய், மோர் முதலிய பொருட்களை விற்று வர வீதியில் செல்லும் போது கணவன் ஏறு தழுவி வென்றவன் என்று மற்றவர்கள் பேசும் சொற்களை கேட்டு மகிழ்ந்து அப்புகழுரையே தாம் பெறும் சிறந்த செல்வம் எனப் பெருமை கருதினர் அக்காலப் பெண்கள் என கலித்தொகை பாடல் தெளிவுபடுத்துகின்றது.
“கழுவொடு கடுபடை கருக்கிய
தோற்கண் ணிமிழிசை
மண்டை அறியொடு தூக்கி”
என்ற வரிகள் அதனைத் தெளிவுபடுத்துகின்றன.
உலகமே எம்மைத் திரும்பிப் பார்த்தது ஊறுதழுவுதல் என்னும் போராட்டத்தில். தமிழர்களின் பற்று உணர்வு மீட்கப்பட்டது.
ஸ்பெயின் நாட்டின் தேசிய விளையாட்டாக காளையை அடக்குதல் காணப்பட்டாலும் காளையை அடக்கும் போது ஆயுதங்கள், இரும்பாலான ஈட்டிகள் போன்றவற்றைப் பயன்படுத்துகின்றனர்.
ஆனால் தமிழர்களின் சிறப்பையும், வீரத்தையும் பறைசாற்றும் ஏறுதழுவுதலானது முற்றிலும் மாறுபட்டதாகும்.
ஏறு தழுவுதலை நிகழ்த்தும்போது எவ்வித ஆயுதங்களையும் பயன்படுத்தக் கூடாது என்பதும் ஏறுதழுவுதலுக்கு முன் காளை மாடுகளுக்கு உணவளித்து அம் மாடுகளை வணங்கி அதன் பின்பே விளையாட்டுத் தொடங்குவர் என்பதும் அன்பின் வெளிப்பாடாய் வீரத்தை பறைசாற்றுகின்றது.
இதுவே தமிழர்களின் தலைசிறந்த நெறியாகும். நூற்றாண்டுகள் கடந்தும் தமிழர்களின் அடையாளமாய் ஏறுதழுவுதல் திகழ்கின்றது.
You May Also Like : |
---|
உழவர் திருநாள் கட்டுரை |
மாட்டுப் பொங்கல் கட்டுரை |