ஊரக வளர்ச்சி துறை என்றால் என்ன

uraga valarchi thurai

தமிழகமானது கிராம மக்களாட்சி முறைமைக்கு தொன்மையான வரலாற்றைக் கொண்ட மாநிலமாகும். இங்கு காலம் காலமாகக் கிராமங்கள் தோறும் மக்களாட்சி முறை சீரும் சிறப்போடும் நடைபெற்று வந்துள்ளமையை நமக்குச் சரித்திரம் விளக்குகின்றது.

சுதந்திரத்திற்குப் பின்பு தமிழகமானது உள்ளுராட்சி முறைகளில் நம்பிக்கை வைத்து அதனைச் செயல்ப்படுத்துவதிலும், வலுப்படுத்துவதிலும் முன்னிலை வகித்த மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகின்றது.

தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டம் 1958 ஆனது சிறப்பான வகையில் உருவாக்கப்பட்டு ஒரு முன்னோடியான பஞ்சாயத்துச் சட்டமாக விளங்கியது எனலாம்.

அதுபோல் தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டம் 1994 செயற்பாட்டிற்கு வந்த பின்பு தமிழகத்தின் நிர்வாகம் பரவலாக்கப்பட்டுள்ளதையும் அதன் மூலம் 12524 கிராமப் பஞ்சாயத்துக்கள், 385 ஊராட்சி ஒன்றியங்கள்,

30 மாவட்டப் பஞ்சாயத்துக்கள் எனக் கிராமப் பஞ்சாயத்து அமைப்புக்களும், 559 நகர் பஞ்சாயத்துக்கள், 150 நகராட்சிகள், 10 மாநகராட்சிகள் என நகர்ப்பஞ்சாயத்து அமைப்புக்களும் ஏற்படுத்தப்பட்டு ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பிரதிநிதிகள் அதில் அங்கம் வகித்து வருகின்றனர்.

தமிழக அரசு உள்ளாட்சி நிர்வாக மேம்பாட்டிற்கு சிறப்பான பல முயற்சிகளை எடுத்துவருகின்றது.

ஊரக வளர்ச்சி துறை என்றால் என்ன

தமிழ்நாடு அரசு 1994இல் இயற்றிய பஞ்சாத்துச் சட்டத்தின்படி தமிழக அரசின் கீழ் இயங்கும் துறையாக ஊரக வளர்ச்சித் துறை காணப்படுகின்றது.

ஊரக வளர்ச்சி துறையின் பணிகள்

மக்கள் நலத்தைப் பேணுகின்ற மாநிலமான தமிழகத்தில் அரசின் முயற்சிகள் அனைத்தும். ஊரகப் பகுதிகளில் வாழும் மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் முன்னேற்றத்தை நோக்கியே அமைந்துள்ளன.

மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதன் பொருட்டு சுத்தமான குடிநீரை வழங்குதல், தெருவிளக்கு, தரமான சாலைகளை அமைத்தல் மற்றும் பராமரித்தல் துப்பரவுப் பணிகள் உள்ளிட்ட அடிப்படைப் பணிகள், பள்ளிக் கட்டிடங்கள் கட்டுதல், அவற்றில் குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் மற்றும் அதனைப் பராமரித்தல் போன்றவற்றை ஊரக வளர்ச்சித் துறை மற்றும் ஊராட்சித் துறை மேற்கொண்டு வருகின்றது.

தேசப்பிதா காந்தியின் எண்ணம்

உலகிலேயே மிகப் பெரிய மக்களாட்சி தேசம் இந்திய தேசமாகும். மக்களாட்சித் தத்துவமானது இந்தப் பாரத மண்ணிற்குப் புதியதல்ல. தொன்றுதொட்டு மக்களாட்சித் தத்துவம் இந்திய தேசத்தில் வேரூண்றிச் செயற்பட்டு வந்துள்ளது.

ஒவ்வொரு கிராமமும் மக்களாட்சித் தத்துவத்தைச் செயற்படுத்தும் அடிப்படை அமைப்பாக இயங்கி வந்துள்ளன. ஊர் நிர்வாகம், நிதி நிர்வாகம், வளர்ச்சிப் பணிகள் என சகல அம்சங்களும் கொண்ட கிராம நிர்வாகம் மக்களாட்சி வழியில் இயங்கி வந்துள்ளன.

உத்திமேரூர் கல்வெட்டுக்கள் சோழர் காலத்தில் செயற்பட்டு வந்த கிராம நிர்வாகம் பற்றியும், தேர்தல் முறைகள் பற்றியும் தெளிவுபடுத்துகின்றன. மக்களாட்சிப் பாரம்பரியத்தைக் கொண்ட நமது தேசத்தை அதன் சாரம் சிறிதும் குறையாமல் சிறந்த தேசமாக உருவாக்கம் செய்ய வேண்டுமென்பது காந்தியடிகளின் எண்ணமாக இருந்தது.

“இத்தேசத்தில் உள்ள ஒவ்வொரு குக்கிராமமும் ஒரு மக்களாட்சி அரசாக விளங்க வேண்டும். அந்தந்த ஊருக்குத் தேவையான பொருள் அங்கேயே உற்பத்தி செய்து நுகரப்படுதலோடு தேவையான நிதி நிர்வாகம் வளர்ப் பயிற்சிகள் அனைத்தும் உள்ளூர் அளவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படக்கூடிய ஒரு தன்னிறைவுக் கிராமம் அமைதல் வேண்டும்” என்று கனவு கண்டார்.

எனவே இந்திய தேசத்தில் அடித்தள ஜனநாயகம் வலுவானதாகவும், அதிக அதிகாரம் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார். அந்த வகையில் சுதந்திரம் பெற்று 45 ஆண்டுக்குப் பின்னர் மக்களாட்சித் தத்துவம் பரவலாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

Read more: ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

பொருளாதார வளர்ச்சி என்றால் என்ன