எல்லா மதங்களிலும் உபவாச விரதம் அல்லது உண்ணா நோன்பு சிறந்ததாக சொல்லப்படுகின்றது.
இந்துக்கள் ஏகாதசி போன்ற குறிப்பிட்ட தினத்திலோ, வெள்ளிக்கிழமை போன்ற குறிப்பிட்ட கிழமைகளிலும் சில விசேஷ நாட்களிலோ சாப்பிடாமல் உபவாசம் இருக்கிறார்கள்.
இஸ்லாமியர்கள் ரம்ஜான் காலத்தில் உண்ணா நோன்பு இருக்கிறார்கள். அது அவர்களுக்கு கடமையாக்கப்பட்டிருக்கிறது.
கிறிஸ்தவர்களும் உபவாசம் இருந்து ஜெபிப்பதை விசேஷமானதாக எண்ணுகிறார்கள். எனவே உபவாசம் என்பது மதம், இனம் கடந்து அனைத்து தரப்பினரிடத்திலும் சிறப்பு பெற்றிருப்பது தெளிவாகிறது.
உபவாசம் என்றால் என்ன
உபவாசம் என்னும் சொல் உண்ணும் உணவை சுருக்குதல் அல்லது விடுத்தல் என பொருள்படும். உபவாசம், நோன்பு என்பன விரதத்துடன் தொடர்புடைய சொற்களாகும். உபவாசம் என்னும் சொல் இறைவனின் அருகே வசித்தல் என்ற பொருளைத் தரும்.
மேலும் ஒரு தினம் அல்லது பல தினங்கள் உணவை விடுத்து இறை தியானத்தில் இருக்கும் நிலையே உபவாசம் ஆகும்.
சிலர் இறையருளை பெறவும் தங்கள் விருப்பங்களை பூர்த்தி செய்து கொள்ளவும், புலன்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் உபவாசம் இருக்கின்றார்கள். சிலர் புலன்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் மனவலிமையை மேம்படுத்திக் கொள்ளவும் உபவாசம் இருக்கின்றார்கள்.
உபவாசத்தின் வகைகள்
பொதுவாக உபவாசத்தினை மூன்று பிரிவுகளாக பிரித்து நோக்குகின்றது. அவையாவன,
- சாதாரணமானது :
இவ்வகையின் போது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உணவு எடுப்பதில்லை, அதாவது நீர்வகையான உணவுவகைகளும் அருந்துவதில்லை.
- பகுதி நேரமானது :
இவ்வகையின் போது உணவானது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, அத்துடன் சில வகையான உணவுகள் ஏற்றுக்கொள்ளப்படும்.
- முற்று முழுதானது :
இவ்வகையின் போது உடலுக்குள் எந்த வகையிலும் அதாவது நீராகரமோ அன்றி உணவு வகைளோ உட்கொள்வதில்லை.
உபவாசத்தின் நன்மைகள்
- நமது நேரமும், சக்தியும் உணவை தயாரிப்பதிலும், பெறுவதிலும், உண்பதிலும், செரிப்பதிலுமே அதிகம் செலவாகிறது. சில வகை உணவுகள் நம் மூளையை மந்தமாக்கி நம்மை சஞ்சலப்படுத்துகின்றன. எனவே தான் சில நாட்களில் நம் நேரத்தையும், சக்தியையும் அதிகம் வீணாகாமல் தவிர்க்க எளிதில் செரிக்க கூடிய உணவை உட்கொண்டோ அல்லது உணவை முற்றிலும் தவிர்த்தோ உண்ணாவிரதம் இருக்கின்றோம். இதனால் நேரமும் சக்தியும் சேமிக்கப்படுகின்றன.
- புத்தி கூர்மையாகிறது.
- மனம் தூய்மையாகி ஒருமுகப்படுகிறது.
- ஆசைகளும், விருப்பங்களும் கீழ் நிலையில் இருந்து விலகி உன்னதமானவயாக மாறுகின்றன.
Read more: தியானம் என்றால் என்ன