நமது சமையலறையில் பயன்படுத்தப்படும் முக்கிய மசாலாப் பொருட்களில் இலவங்கப்பட்டையும் ஒன்றாகக் காணப்படுகின்றது. இது ஆதிகாலத்திலிருந்தே மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த பதிவில் இலவங்கப்பட்டை பயன்கள் பற்றி பார்க்கலாம்.
வட இந்திய உணவுகளில் குறிப்பாக பிரியாணி உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. கருவாப்பட்டை எனவும் அழைக்கப்படுகின்றது.
இலவங்கப்பட்டையானது இலவங்க மரத்தின் தண்டுகளை வெட்டுவதன் மூலம் உள்பட்டை பிரிக்கப்பட்டு அவை காய்ந்ததும் இலவங்கப்பட்டை சுருளாக மற்றும் குச்சிகளாக உடைக்கப்பட்டு பின் விற்பனைக்கு வருகின்றது.
அதிக வாசனையைக் கொண்டதாகக் காணப்படுவதால் உணவுடன் சேர்க்கும் போது உணவுக்கு சுவை கொடுப்பது மட்டுமல்லாது ஏராளமான நன்மைகளையும் கொடுக்கின்றது.
இலவங்கப்பட்டை பயன்கள்
1. வயிற்றில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்கும். குறிப்பாக வயிற்றுப் பொருமல், அஜீரணம், நெஞ்செரிச்சல், வயிற்று வலி போன்ற அனைத்திற்கும் நிவாரணம் தரும்.
2. இலவங்கப் பட்டையில் உள்ள பினால் என்ற வேதிப்பொருளானது வாய்த் துர்நாற்றத்தை போக்கக் கூடியது.
3. தலைச்சுற்றலை தடுக்கும். இலவங்கத்தினுடைய மனம் மற்றும் தசையை இறுக்கும் குணத்தால் கபத்தை வெளியேற்றும். மற்றும் வாந்தியை தடுக்கும்.
4. இருமல் ஏற்படும் போது தற்காலிக மருந்தாக இலவங்கம் பயன்படுத்தப்படுகின்றது.
5. நீரிழிவு உள்ளவர்கள் இலவங்கப்பட்டையை அப்படியே உட்கொள்ளலாம்.
6. இலவங்கப்பட்டையை நேரடியாக உட்கொள்ளும் போது ஏராளமான நன்மை கிடைக்கின்றன. மூட்டு வலியை போக்கச் சிறந்ததாகும். இலவங்கம் 90% மூட்டுவலியை போக்கும் திறன் கொண்டது. காலை எழுந்தவுடன் மூட்டுகளில் உள்ள இறுக்கத்தை நீக்கி மூட்டுகளை எளிதில் இயங்கச் செய்கின்றன என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
7. தேவையற்ற கொழுப்பைக் குறைப்பதில் இலவங்கம் சிறப்பாக செயல்படுகின்றது. இது கொலஸ்ட்ரால் அளவை குறைப்பது சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. இலவங்கத்தை க்ரீன் டீயுடன் சேர்த்து உட்கொள்ளும் போது சிறந்த பயனளிக்கின்றது.
8. இன்சுலின் தடுப்பாற்றலை போக்குகின்றது. இன்சுலினை உடல் எளிதாக கிரகித்து உபயோகித்த பயன்படுகின்றது. இயற்கையான இன்சுலின் உற்பத்திக்கும் உதவுகிறது.
9. நோய் எதிர்ப்பாற்றலைத் தூண்டுகின்றது.
10. ஜீரண சக்தியை சீராக்கும்.
11. உடல் எடை மற்றும் சக்தி இழப்பைக் கட்டுப்படுத்தக்கூடியது. பசியை தூண்டக்கூடியது.
12. மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது. இலவங்கப்பட்டையை நீரில் கொதிக்க வைத்து குடித்தால் மூளையின் செயல்பாடு அதிகரிக்கும்.
13. இரத்தப் புற்றுநோய், குடற்புற்றுநோய், தசைப்புற்று போன்ற நோய்களை இலவங்கப்பட்டை மருத்துவம் மூலம் குறைக்கலாம்.
14. இலவங்கப்பட்டை வெப்பம் தரும் நறுமணப் பொருளாக உள்ளதால் பட்டையை சளி மற்றும் ப்ளு காய்ச்சலின் போது மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றது.
15. ஆரோக்கியம் மட்டுமின்றி அழகும் இலவங்கப்கட்டை பயன்படுத்தப்படுகின்றது. உச்சந்தலையில் உபயோகித்தால் பொடுகுத்தொல்லை நீங்கும். நல்ல சருமத்தைப் பெறவும் சரும நிறத்தையும் பாதுகாத்துக் கொள்ளவும் உதவுகின்றது.
16. பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மைப் பிரச்சனைக்கு தீர்வாக பயன்படுத்தப்படுகின்றது. ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சினையால் கருப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகின்றன. எனவே இதனைத் தடுக்க இலவங்கப்பட்டை தினமும் உட்கொண்டு வந்தால் நன்மை கிடைக்கும்.
17. மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியைப் போக்க இலவங்கப்பட்டை உதவுகிறது.
18. பல் வலியைத் தடுக்கப் பயன்படுத்தப்படுகின்றது. பல் வலி மற்றும் பல் ஈறுகளில் உள்ள வீக்கங்களைக் குறைக்கக்கூடியது.
You May Also Like: