வரலாற்று நெடுங்கிலும் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு வந்திருக்கின்றனர் என்பது கசப்பான உண்மையாகும். இதனைவிடவும் கொடுமையாக இருவிரல் பரிசோதனை விளங்குகின்றது. இது பெண்களைப் பாகுபடுத்துவதோடு, இழிவுபடுத்தவும் செய்யும் ஒரு வழிமுறையாகவும் உள்ளது.
பெண்களின் கன்னித்தன்மையை பரிசோதிக்கும் கன்னித்தன்மை பரிசோதனையை தடை செய்ய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனாலும் சில இடங்களில் இன்றும் பரிசோதனை நடைமுறையில் தான் உள்ளது.
கருப்பை வாய்ப்பைக்குள் உள்ள கன்னித்திரை திசுப்பை உடற்பயிற்சி நடனம் மற்றும் காரணமே இல்லாமல் கூட விலகக்கூடும். அவ்வாறு இருக்க இதனைக் கொண்டு கன்னித்தன்மையை அறிவது முட்டாள்தனமானது என்கின்றது உலக சுகாதார அமைப்பு.
ஹைமன் (கன்னித்திரை) என்பது ஒரு பெண்ணுக்கு எப்போது வேண்டுமானாலும் கிழியக்கூடும். உதாரணத்துக்கு சைக்கிள் அதிகம் ஓட்டுவது, நன்கு விளையாடுவது அல்லது விபத்து ஏற்படுவது என எப்போது வேண்டுமானாலும் அது நிகழலாம்.
ஹைமன் (கன்னித்திரை) கிழிவதை வைத்து, அவர் பாலியல் உறவில் இருந்திருக்கிறாரா இல்லையா என நிர்ணயிப்பது மருத்துவத்துக்குட்படாத, அறிவியலுக்கு அப்பாற்பட்ட விஷயம் ஆகும்.
Table of Contents
இரு விரல் பரிசோதனை என்றால் என்ன
பெண்ணின் கருப்பைவாய்ப் பகுதியை மருத்துவர்கள் இரு விரல்களைக் கொண்டு ஆராய்வர்.
அதன்முடிவில் Hymen (v) ஹைமன் (கன்னித்திரை) கிழிந்திருப்பதை வைத்து அப்பெண் கன்னித்தன்மை உள்ளவரா இல்லையா (பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டவரா இல்லையா) என்பதை பற்றி அறியப்படுவது தான் இரு விரல் பரிசோதனை ஆகும்.
இந்தியாவில் இரு விரல் பரிசோதனை
இந்தியாவின் பல மாநிலங்களில் திருமணமான பிறகு பெண்ணிற்கு ஹைமன் சவ்வு (கன்னித்திரை) இல்லையென்றால், அப்பெண்ணை கொடூரமாக நடத்தும் சூழ்நிலை உள்ளது என்பது வருத்தத்திற்குரியதாகும்.
இந்த இரு விரல் பரிசோதனை முறையால் உடல் ரீதியான வலி, மன ரீதியான வலி ஏற்படும். மேலும், இது விஞ்ஞானபூர்வமற்ற ஒன்றாக உள்ளது.
இரு விரல்களைக் கொண்டு மேற்கொள்ளப்படும் கன்னித்தன்மை பரிசோதனை முறையானது முழுக்க முழுக்க அறிவியலுக்கு எதிரானது அதனாலேயே பாலியல் ரீதியான வன்புணர்வுகளுக்கு ஆளான பெண்களின் கன்னித்தன்மையை இந்த முறை மூலம் பரிசோதிப்பது அவர்களின் தனிமனித உரிமையை மீறும் செயல் என 2013 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்தது.
அதனைத் தொடர்ந்து மத்திய அரசு பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களின் பரிசோதனையில் இருந்து கன்னித்தன்மைப் பரிசோதனையை நீக்கி நெறிமுறைகளை வெளியிட்டது.
இந்த பரிசோதனையை தடை செய்ய உலக சுகாதார நிறுவனம் கூறிய போதும் இந்தியாவின் மருத்துவ பாட புத்தகத்தில் தொடர்ந்து இருந்து வந்தது. இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் முதன் முதலில் மருத்துவ பாடத்தில் இருந்து நீக்கப்பட்டது.
இரு விரல் பரிசோதனையானது சட்டத்திற்கு எதிரான ஒன்று. சட்டத்தில் குடிமக்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் எனக் கூறப்படுகின்றது. இந்த பரிசோதனையின் மூலம் பெண்கள் கண்ணியத்துடன் நடத்தப்படுகிறார்கள் என்பது கேள்விக்குறியாக்கப்படுகின்றது.
பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் உள்ள இந்தியா போன்ற ஒரு நாட்டில் இருவிரல் பரிசோதனை அரங்கேறி வருவது மிகவும் மோசமான விடயமாக பார்க்கப்படுகிறது. எனவே பாலின சமத்துவம் காத்து, சட்டத்தை மதிப்போமாக.
Read more: துத்தி இலையின் பயன்கள்