இந்த பதிவில் “இட ஒதுக்கீடு வாயிலாக சமூக நீதி கட்டுரை” பதிவை காணலாம்.
சமூக நீதி என்பது தனிநபருக்கும் சமூகத்திற்கும் இடையேயுள்ள சமமான நியாயமான உறவை குறிக்கின்றது.
Table of Contents
இட ஒதுக்கீடு வாயிலாக சமூக நீதி கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- இட ஒதுக்கீடு
- இந்தியாவில் இட ஒதுக்கீடு
- தமிழ் நாட்டில் இட ஒதுக்கீடு
- இட ஒதுக்கீட்டின் பயன்கள்
- முடிவுரை
முன்னுரை
சமூக நீதி என்பது தனிநபருக்கும் சமூகத்திற்கும் இடையேயுள்ள சமமான நியாயமான உறவை குறிக்கின்றது. பொதுவாக பொருளாதாரப் பரவல், தனிப்பட்ட வாய்ப்புக்கள் மற்றும் சமூகத்தில் அனைவருக்கும் உள்ள செல்வாக்கின் அளவின் மூலம் இதனை கணிக்கலாம்.
உலகமெங்கும் சமூக நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என்ற விடயத்தை நினைவுபடுத்த ஆண்டு தோறும் பெப்ரவரி 20 ஆம் நாள் சமூக நீதிக்கான உலக நாளாக கடைப்பிடிக்கப்படுகின்றது.
இட ஒதுக்கீடு
சமுதாயத்தில் அழுத்தப்பட்ட சமூகங்களை சார்ந்த மக்களுக்கு கல்வி மற்றும் வேலை நிலைகளில் ஓரளவு இடங்களை ஒதுக்கி சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கான செயற்பாடே இட ஒதுக்கீடு ஆகும்.
இவ்வாறு அழுத்தப்பட்ட மக்கள் இனம், சாதி, மொழி, பால், வசிப்பிடம், பொருளாதார சூழல், உடல் ஊனம் ஆகிய விடயங்களின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டுக்கு பரிந்துரை செய்யப்படுபவர்களாக உள்ளனர்.
சில நாடுகளில் இன மத பேராதிக்கத்தின் தாக்கத்தினை குறைப்பதற்காகவும் இட ஒதுக்கீடுகள் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் ஏற்படுத்தப்படுகின்றன.
இந்தியாவில் இட ஒதுக்கீடு
இந்தியாவில் மன்னர் ஆட்சிக்கு பின் ஆங்கிலேய காலணித்துவத்தில் பிராமணர்களின் செல்வாக்கு உயர்ந்து பெரும்பான்மையான வாய்ப்புக்களை அவர்கள் மட்டுமே அனுபவித்தனர்.
அலெக்சாண்டர் கேட்ரூ எனும் ஆங்கில அதிகாரி பிராமணர் அல்லாதவர்களும் கல்வி, தரமான வேலை, நிலவுரிமை, அரசியல் உரிமை, சமூக பங்கேற்பு என்பவற்றறை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை முதன் முதலில் வரவேற்றார்.
பிற்பட்ட காலங்களில் தந்தை பெரியார் போன்றோரின் போராட்டங்களினால் அக்கால காங்கிரஸ் அரசினால் இட ஒதுக்கீட்டுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டு இன்று வரை தொடரப்படுகின்றது.
தமிழ் நாட்டில் இட ஒதுக்கீடு
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புக்களில் பொதுப் பிரிவினருக்கு, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு, பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியருக்கு, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு, பட்டியல் சாதியினருக்கு, பட்டியல் பழங்குடியினருக்கு என குறிப்பிட்ட சதவிகித அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு மக்கள் மத்தியில் சமூக நீதி நிலை நாட்டப்படுகின்றது.
இட ஒதுக்கீட்டின் பயன்கள்
இட ஒதுக்கீட்டினால் பொருளாதாரப் பின்னடைவுள்ள சமூகத்தினர் பயனடைகின்றனர். படித்த மாணவர்களின் கல்வித்தரம் அதிகரிக்கின்றது. உதாரணமாக அண்ணா பல்கலையில் பயின்று அதீத வெற்றியடையும் எண்ணற்ற மாணவர்கள் இட ஒதுக்கீட்டில் பயின்றவர்கள் ஆவர்.
இதனால் பின்தங்கிய அவர்களின் வாழ்க்கை தரம் உயர்கின்றது. தேவையான கல்வித் தகுதி படைத்த பார்வை இல்லாதவர்கள், காது கேளாதவர்கள், உடல் ஊனமுற்றவர்களுக்கு இந்திய அரசு மற்றும் பொதுத்துறை வேலைவாய்ப்பு வழங்கப்படுகின்றது.
முடிவுரை
இட ஒதுக்கீடானது காலகாலமாக தாழ்த்தப்பட்ட சமூகங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நாட்டு மக்களாகிய அவர்களுக்கு சமூக நீதியை வழங்கும் வகையிலான நடவடிக்கையாகும்.
மிக முக்கியமாக சமூக நலன் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய சமூகத்தினருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அரசின் எண்ணங்களும் செயல்களும் உள்ளதை காணமுடிகின்றமை இட ஒதுக்கீடு வாயிலாக சமூக நீதியை உணர்த்துகின்றது.
You May Also Like : |
---|
சமூகம் என்றால் என்ன |
சமூக நல்லிணக்கம் கட்டுரை |