இந்த பதிவில் விளக்கெண்ணெய் என்றும் அழைக்கப்படும் “ஆமணக்கு எண்ணெய் பயன்கள்” பற்றி பார்க்கலாம்.
தாவரங்களில் பலகோடி வகைகள் உள்ளன. எனினும் அவற்றில் சிலவே உணவாகப் பயன்படுத்தப்படுகின்றன. வேறு சில தாவரங்கள் மருத்துவ மூலிகையானப் பயன்படுகின்றன.
இத்தகைய சில தாவரங்களிலிருந்து எண்ணெய் வகை தயாரிக்க முடிகிறது. அவ்வாறு சிறந்த மருத்துவ குணங்களை கொண்ட எண்ணெய் தான் ஆமணக்கு எண்ணெயாகும்.
இது விளக்கெண்ணெய் என்றும் அழைக்கப்படுகிறது. இது பல ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆமணக்கு விதையிலிருந்து ஆமணக்கு எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.
ஆமணக்கு எண்ணெய் பயன்கள் (Amanakku Oil Uses In Tamil)
1.கீல்வாதம், மூட்டுவலி, முழங்கால் வலி போன்றவற்றைக் குணப்படுத்த உதவும் – ஆமணக்கு இலையை ஆமணக்கு ஆமணக்கெண்ணையிலேயே லேசாக வதக்கி மூட்டுக்களில், வீக்கம் அல்லது வலிக்கும் இடங்களுக்கு ஒத்தடம் கொடுத்து வந்தால் வலி நீங்கும், வீக்கமும் குறையும்.
2. பெண்களுக்கு பிரசவத்தின் பின் பால்கட்டி கொண்டாலோ அல்லது சரியாக பால் சுரக்கவில்லை என்றாலோ ஆமணக்கு இலையை விளக்கெண்ணெயில் வதக்கி ஒத்தடம் கொடுத்தால் சரியாகும்.
3. வயிறு தொடர்பான கோளாறுகளை சரி செய்யும் – சாதாரண வயிற்றுப் பிரச்சனை தொடக்கம் பெரும் பிரச்சினையை தீர்க்க வல்லது. வயிறு சார்ந்த பிரச்சினைகளான வாந்தி, குமட்டல், வயிற்று வலி, செரிமானக் கோளாறு முதல் பெரும் வயிறு சார்ந்த பிரச்சினைகளான வயிற்றுப்போக்கு, சிறுநீர்க்கற்கள் போன்றவற்றையும் ஆமணக்கெண்ணெய் குணப்படுத்தும்.
4. மார்பக காம்புகளில் ஏற்படும் வெடிப்புகள் மற்றும் புண்கள் குணமாக ஆமணக்கு எண்ணெய் பயன்படுகின்றது – தூய்மையான மெல்லிய பருத்தித் துணியினை ஆமணக்கு எண்ணெயில் ஊற வைத்து அதை பாதிக்கப்பட்ட இடத்தில் பத்துப்போட்டு வர வேண்டும்.
5. கோழைக்கட்டு, இரைப்பு, இருமல், சளி போன்றவற்றை குணப்படுத்தும் – இயற்கையான விளக்கெண்ணெய் இரண்டு அல்லது மூன்று பல் பூண்டு, ஒரு தேக்கரண்டி மிளகாய் பொடி 3 முதல் 4 தேக்கரண்டி யூகலிப்டஸ் எண்ணெய் ஆகியவற்றை கலந்து அந்த கலவையை மார்பு பகுதியில் தடவி வந்தால் இருமல், சளி குணமாகும்.
6. உடல் எடை குறைக்க உதவுகிறது – ஆமணக்கு எண்ணெய் இரண்டு முதல் மூன்று தேக்கரண்டி உணவாக அல்லது உணவுடன் சேர்த்து உட்கொண்டால் உடல் எடை குறையும்.
7. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் – ஆமணக்கு எண்ணெயில் நிறைந்திருக்கும் பண்புகள் இரத்த ஓட்டத்தை சீர் செய்து தைமஸ் சுரப்பியின் ஆரோக்கியத்தை
மேம்படுத்தும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நிணநீர் வடிகால் உறுப்புக்களின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகின்றது.
8. உதடுகளில் ஏற்படும் வெடிப்பினை மற்றும் விரிசலை சீர்செய்ய உதவுகிறது – ஆமணக்கு எண்ணெயை உதடுகளில் தேய்த்து சிறிது நேரம் ஊறவிட்டு அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து லிப் பாம் (Lip Balm) பயன்படுத்திக் கொள்ளலாம்.
9. கண்களிலுள்ள கருவளையங்களைப் போக்கும் – இரவில் தூங்கும் முன்பு ஆமணக்கு எண்ணெயை கண்களுக்கு கீழே கருவளையம் உள்ள இடத்தில் அரை நிமிடம் வட்ட வடிவ இயக்கத்தில் மசாஜ் செய்து அப்படியே விட்டு பின் காலையில் நன்கு கழுவி விட வேண்டும்.
10. சீரற்ற உணவுமுறை, கடினமான சுற்றுச்சூழல் நிலைமைகள் அதிகப்படியான மெலனின் உற்பத்தி போன்றவற்றால் சருமத்தில் நிறம் குன்றி நிறமூட்டல் பிரச்சினை ஏற்படலாம். இதனைத் தடுக்க உதவும். காலை எழுந்தவுடன் அல்லது தூங்கச் செல்லும் முன்பு சருமத்தை நன்கு சுத்தம் செய்து ஒரு துணியால் ஈரத்தை துடைத்து விடவும் பின் ஆமணக்கு எண்ணெயை முகத்தில் பூசி மசாஜ் செய்து 20 நிமிடம் கழித்து கழுவினால் பிரச்சினை சரியாகும்.
11. தோல் அலர்ஜி, தழும்புகள், எரிச்சலடைந்த சருமம் ஆகியவற்றை குணப்படுத்த உதவுகின்றது. உடலில் ஏற்படும் தழும்புகளில் தினமும் பூசி வந்தால் தழும்புகள் நீங்கும்.
12. முதுமை தோற்றம், தோல் சுருக்கங்கள் முதலானவற்றை தடுக்க உதவுகின்றது. ஆமணக்கு எண்ணெய் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளதால் இறந்த செல்களுடன் போராடி அவற்றை நீக்கி உடலை இளமையாக வைத்துக்கொள்ள உதவுகின்றது.
You May Also Like :