அபிவிருத்தி என்றால் என்ன

abiviruthi in tamil

அபிவிருத்தியானது கால ரீதியாக மாற்றமடையக் கூடியது. 20 ஆம் நூற்றாண்டில் முன்னரைப் பகுதியில் ஒரு நாட்டினுடைய பொருளாதார ரீதியிலான அபிவிருத்திதான் அபிவிருத்தியாகக் கருதப்பட்டது.

அதாவது ஆரம்ப காலத்தில் பொருளாதாரக் குறிகாட்டிகளை அடிப்படையாகக் கொண்டு அபிவிருத்தி என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

அந்தவகையில் ஆரம்ப காலத்தில் அபிவிருத்தியை அளவீடு செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட குறிகாட்டிகளாக மொத்தத் தேசிய உற்பத்தி, தலா வருமானம் போன்றவற்றின் மூலமாக அபிவிருத்தி அளவீடு செய்யப்பட்டது.

இக்குறிகாட்டிகள் யாவும் பொருளாதாரக் குறிகாட்டிகளாகவே காணப்பட்டது. அந்த வகையில் ஆரம்பகாலத்தில் பொருளாதார அபிவிருத்தியாக மட்டுமே காணப்பட்டது.

பிற்பட்ட காலத்தில் பரந்துபட்ட எண்ணக்கருவாக வளர்ந்தது. அதாவது 20 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் அபிவிருத்தி என்பது பௌதீக மற்றும் பொருளாதார குறிகாட்டிகள் மட்டுமன்றி மனித அபிவிருத்திக்கு அவசியமான பல்வேறுபட்ட கூறுகளையும் அடிப்படையாகக் கொண்டிருந்தது.

20 ஆம் நூற்றாண்டில் பின்னரைப் பகுதியில் அபிவிருத்தி என்ற கருத்தைப் பெறுவதற்குப் பயன்படுத்தப்பட்ட குறிகாட்டிகளாக சிசுமரண வீதம், பிரசவ மரண வீதம், எழுத்தறிவு வீதம்,பிறப்பின் போது எதிர்பார்க்கப்படும் ஆயுள் எதிர்பார்ப்பு, தகவல் தொடர்பாடல் வசதிகள், சுகாதார வசதிகள், கல்விக்கான சந்தர்ப்பம், அரசியல் தீர்வினை எடுக்கக் கூடிய சுதந்திரம், பொருட்கள் சேவைகளைக் கொள்வனவு செய்யும் சக்தி, வருமான வேறுபாடு போன்ற குறிகாட்டிகள் பயன்படுத்தப்பட்டது.

அண்மைக்காலத்தில் அபிவிருத்தி என்பது பொருளாதார அபிவிருத்தி மட்டுமல்ல சமூகப் பொருளாதார அரசியல் ரீதியான பல்வேறுபட்ட காரணிகளை ஒன்றிணைத்த தன்மையினை அவதானிக்க முடிகின்றது.

அபிவிருத்தி என்றால் என்ன

அபிவிருத்தி என்றால் என்ன என்பதற்கு பல அறிஞர்களும் நிறுவனங்களும் வரைவிலக்கணம் கூறியுள்ளன. “நாட்டில் பொருளாதார அபிவிருத்தியோடு சமூக அபிவிருத்தியும் ஏற்பட வேண்டும்” என அபிவிருத்தி பற்றி 1978 ஆம் ஆண்டு யுனெஸ்கோ பிரகடனம் குறிப்பிட்டுள்ளது.

டட்லி சியர்ஸ் என்பவர் “யாதேனும் நாட்டில் வறுமை ஒழித்து, தொழில் வாய்ப்புக்கள் அதிகரித்து, வருமானம் பிரிந்து செல்வதில் ஏற்றத்தாழ்வு நீங்குமாயின் அதுவே அபிவிருத்தி” எனக் கூறியுள்ளார்.

எனவே அபிவிருத்தி என்பது ஒரு நாட்டின் சனத்தொகை, சமூக கலாசார, ஒழுக்கம் ஆகிய காரணிகளுடன் தொடர்புபடுத்தப்படுகின்ற தொடர்ச்சியான செயன்முறை அபிவிருத்தி எனக் கொள்ள முடியும்.

மனிதவள அபிவிருத்தியில் கல்வியின் முக்கியத்துவம்

மனிதவள அபிவிருத்தி என்பதன் மூலம் கருதப்படுவது நபர்களின் ஆற்றல், திறன்கள், வல்லமை ஆகியவையினை இனங்கண்டு அவற்றினைப் பயில்வதும், குணநலத்தினை மேம்படுத்துவதும் அதன் மூலம் பூரண ஆளமையினை உழைக்கும் வளமாக மாற்றுவதுமாகும்.

நாம் வாழும் பூமியில் உயர்குல சக்தியாக மனிதன் இருக்கின்றான். இன்றைய உலகில் பண்பாட்டுச் சுற்றாடலை முழுமையாகக் கட்டுப்படுத்துவது மனிதனே. மனிதனின் நுண்ணறிவுத் திறனின் ஊடாகப் பௌதீக சுற்றாடலில் உள்ள வளங்களினை பயன்படுத்தி புத்தாக்கங்களையும், உற்பத்திகளையும் மேற்கொள்கின்றான்.

எனவே எதிர்காலத்திற்கான பேண்தகு உலகினை நிர்மாணிக்கின்ற மனித உடல் உள ரீதியாக வலுப்படுத்தப்படல் என்பது மிக முக்கியமானதாகும்.

தொழில்நுட்ப அடிப்படையில் மிகவும் உயர் நிலையினை அடைந்துள்ள உலகிலுள்ள எல்லாப் பிரஜைகளுக்கும் குறித்த திறன்களை பெற்றுக் கொடுத்தல் மனிதனது கடமையாகக் காணப்படுகின்றது.

இதன் மூலமே பூரணமான ஆளுமைக் கட்டியெழுப்ப முடியும். அந்த ஆளுமையில் தொழிநுட்பத் திறன்கள், விழுமியங்கள், நன்னெறிகள், மனப்பாங்குகள், மனிதநேயங்கள் போன்றன வளர்க்கப்பட வேண்டும்.

Read more: மது குடிப்பதால் ஏற்படும் தீமைகள்

மேலாண்மை என்றால் என்ன