முகலாய பேரரசின் வெற்றிகரமான ஒரு தளபதியாக அக்பர் காணப்பட்டார். இவர் முகலாய பேரரசு முழுவதும் ஒரு மையப்படுத்தப்பட்ட அரசை நிறுவி ஆட்சி செய்தார். அக்பருடை ஆட்சியானது மத மற்றும் காலாச்சார ரீதியாக வேறுபட்டிருந்த பேரரசில் அமைதி மற்றும் ஒழுங்கை பேண பல கொள்கைகளை பின்பற்றினார்.
Table of Contents
அக்பர்
முகலாய பேரரசை ஆட்சி செய்த மன்னர்களுல் மிகவும் புகழ் பெற்ற மன்னரே அக்பர் ஆவார். இவர் போர்வீரர் மற்றும் கலைஞாரகவும் திகழ்ந்தார். இம்மன்னர் இசை, இலக்கியம் கட்டிடகலையில் ஆர்வம் மிக்கவராகவும் காணப்பட்டார்.
இவருடைய முழுப்பெயர் ஜலாலுத்தீன் முஹம்மது அக்பர் ஆகும். இவர் அமரக்கோட்டை எனும் இடத்தில் 15.10.1542 இல் பிறந்தார். இவர் சிறப்பான பல கொள்கைகளை வகுத்து செயற்பட்டு வந்தார் இதனுடாக இவரது ஆட்சி சிறப்புற்று விளங்கியது.
அக்பரின் சமயக் கொள்கை
அக்பரினுடைய சமயக் கொள்கையானது சிறப்பாக காணப்பட்டதோடு அக்பர் ஓர் வைதீக முஸ்லிமாக காணப்பட்டார். மேலும் இவர் சூபி தத்துவங்கள் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாகவே இவர் இணக்கமான போக்கை மேற்கெண்டார்.
ஏனைய மதம் தொடர்பான கோட்பாடுகளில் ஆர்வம் உடையவர்களுக்கு அமைதி எனும் தத்துவத்தை பரப்பினார். இவர் இபாதத் கனா எனும் வழிபாட்டு தலத்தை நிறுவினார். பல சமய நல் விடயங்களை மேற்கொண்டார்.
அக்பரானவர் ஒரு மிதவாதியாக செயற்பட்டார். ஏனெனில் இம் மன்னருடைய ஆசிரியர் சேக். முபாறக் ஆனவர் ஒரு மிதவாதியாகவே காணப்பட்டார்.
இவரது சமயக் கொள்கையில் தவறுபடா எனும் ஆணையினை பிரகடனப்படுத்தினார். இதனூடாக இவர் சமயத் தலைவராகவும் அரசராகவும் சிறப்புற விளங்கினார்.
இவரது மதக்கொள்கையானது சகிப்புத்தன்மை உடையதாகக் காணப்பட்டதோடு தேசிய மதத்தை உருவாக்குவதனை நோக்கமாக கொண்டதாகும்.
இவர் 1582இல் தீன் இலாஹி என்ற மதத்தினை உருவாக்கினார். இவர் உருவாக்கிய கொள்கையை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தவில்லை. இவர் சிறந்த சமயக் கொள்கையை அனைவரிடத்திலும் ஏற்படுத்தினார்.
அக்பரின் இராஜபுத்திர கொள்கை
அக்பர் உருவாக்கிய மற்றுமொரு கொள்கையாக இராஜபுத்திர கொள்கை அமைந்துள்ளது. இவர் இந்து மக்களுடைய நல்லெண்ணத்தை பெறுவதனை நேக்காகக் கொண்டு பல முயற்சிகளை மேற்கொண்டார். அந்த வகையில் முஸ்லிம் அல்லாதவர்களின் மீது விதிக்கப்பட்டிருந்த ஜிஸ்யா எனும் வரியை நீக்கினார்.
போர்க்கைதிகளை அடிமையாக்கும் முறைமையினையும் இல்லாது ஒழித்தார். மேலும் விதவைகள் பின்பற்றிய உடன் கட்டை ஏறுதல் முறைமையினையும் இல்லாது செய்ததனூடாக இவரது இராஜபுத்திர கொள்கை சிறந்ததாக காணப்பட்டது.
இவருடைய இராஜபுத்திர கொள்கையானது அரச குடும்பங்களோடு திருமண உறவை பேணல், அரச சபையில் உயர்ந்த பதவிகளில் அவர்களை அமர்த்துதல் போன்றவற்றை உள்ளடக்கியதாகும்.
மேலும் இந்து பெண்களையும் இவர் மணந்தார் என்ற போதிலும் மதம் மாற்றம் செய்ய இவர்களை கோரவில்லை. இவர் சிறந்த மத சகிப்புத்தன்மை உடையவராகக் காணப்பட்டார்.
அக்பரின் ஆட்சி சிறப்புக்கள்
அக்பர் ஒரு சிறந்த போர் வீரராக காணப்பட்டதோடு ஒரு சிறந்த தளபதியாகவும் காணப்பட்டார். மேலும் இவர் புத்திசாலியான ஒரு பேரரசராக திகழ்ந்தார். அக்பர் செர்ஸா பரம்பரையினரான சிக்கந்தர்சாவை தோற்கடிக்க எண்ணி பஞ்சாபில் சிக்கந்தர்சாவின் படையினரோடு போரிட்டு வெற்றி பெற்றார்.
அகமது நகரை ஆண்ட சாந்த் பீவியைத் தோற்கடித்து அந்நகரை தனது பேரரசுடன் இணைத்து கொண்டார். மேலும் பீரார், காத்தேஸ் போன்ற இடங்களையும் கைப்பற்றினார்.
மதசகிப்புத்தன்மையினை பேணக்கூடியவராகவும் சிறந்த தளபதியாகவும் அக்பர் செயற்பட்டார். மேலும் மொஹலாய பேரரசின் சிறந்த மன்னராக இவர் காணப்பட்டார்.
Read More: சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு