விழிப்பான இந்தியா செழிப்பான இந்தியா கட்டுரை

vizhippu india sezhipana india katturai

இந்த பதிவில் “விழிப்பான இந்தியா செழிப்பான இந்தியா கட்டுரை” பதிவை காணலாம்.

பொறுப்புள்ள ஒவ்வொரு இந்திய குடிமக்களுடைய கூட்டு முயற்சியினால் தான் செழிப்பான இந்தியாவினை உருவாக்க முடியும்.

விழிப்பான இந்தியா செழிப்பான இந்தியா கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. வேற்றுமையில் ஒற்றுமை
  3. தனிமனித விழிப்புணர்வு அவசியம்
  4. நாட்டின் வெளிப்படை தன்மை
  5. நேர்மையின் அவசியம்
  6. அரசியலில் வேண்டும் விழிப்புணர்வு
  7. முடிவுரை

முன்னுரை

“ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே… சான்றோனாக்குதல் தந்தைக்கு கடனே.. வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே.. நன்னடை நல்கல் வேந்தற்கு கடனே..!” என்ற பொன்முடியாரின் வாங்கிற்கிணங்க நாம் எமது கடமைகளை செவ்வனவே செய்வதன் மூலமாக செழிப்பான இந்தியாவை உருவாக்குவது ஒவ்வொரு இந்தியர்களதும் கடமையாகும்.

நமது நாட்டில் நிலவும் சீரற்ற நிலைப்பாட்டை மேம்படுத்த விழிப்புடன் செயல்பட வேண்டிய நிலை இன்று காணப்படுகிறது. வளமான இந்தியாவை உருவாக்குவதற்கான வழிமுறைகளை இக்கட்டுரையில் காண்போம்.

வேற்றுமையில் ஒற்றுமை

வேற்றுமையிலும் ஒற்றுமை பாராட்டும் நம் தேசத்தில் மதத்தின் பெயரால் நம்மை பிரித்தாளும் சூழ்ச்சி மேற்கொள்வோரை நாம் புறம் தள்ள வேண்டும். மாநிலங்களாக நாம் பிரிந்திருந்தாலும் இந்தியர்களாக ஒன்றுபட வேண்டும்.

தியாகத்துடன் சுதந்திரத்தை பெற்று தந்த நமது முன்னோர்கள் காட்டிய வழியில் பயணிக்க வேண்டும். அவ்வாறு பயணித்தால் மறைந்த டாக்டர் ஐயா அப்துல்கலாம் கூறியதனை போலவே இந்திய தேசம் ஒருநாள் வல்லரசாக மாறும் என்பதில் ஐயமில்லை.

தனிமனித விழப்புணர்வின் அவசியம்

நோயாளிகளை குணப்படுத்த வேண்டுமாயின் முதலில் மருத்துவர்கள் ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டும் என்பதனை போல மற்றவர்களின் தவறுகளை கண்டு கோபம் அடைகின்ற நாம் முதலில் தவறுகள் செய்யாது இருக்க வேண்டும்.

மகாத்மா காந்தி அடிகள் கூறியதை போலவே மாற்றம் என்பது நம்மில் இருந்து துவங்க வேண்டும். அப்போது தான் நமது இந்தியா மாற்றமடையும் ஆகவே தனி மனித விழிப்புணர்வு என்பது நம் அனைவருக்கும் அவசியமாகும்.

நாட்டின் வெளிப்படை தன்மை

ஒளிவு மறைவற்ற அரசாங்கமே ஊழலற்ற அரசாங்கமாக இருக்கும். சமகாலங்களாக எமது நாட்டில் அதிக ஊழல் சம்பவங்கள் அறியப்படுகிறது. சர்வதேச அளவில் ஊழல் நாடுகளின் பட்டியலில் இந்தியா உயர் இடத்தில் இருப்பது வேதனைக்குரியது.

இந்தியாவில் சில அரசியல் தலைவர்கள் அதிகாரம் மிகுந்த தலைவர்கள் தமது சுய லாபங்களுக்காக தமது அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்கின்றனர்.

நாட்டின் வரவு செலவு போன்ற விடயங்களை மறைக்கின்றனர். இதுபோல் அல்லாமல் வெளிப்படையான நல்ல அரசாங்கம் அமைவது இந்தியாவை வளர்ச்சியடைய செய்யும்.

நேர்மையின் அவசியம்

பொது வாழ்வில் நேர்மை மிகவும் அவசியமாகும். அரசதுறையில் பணியாற்றும் கீழ்நிலை ஊழியர்களிலிருந்து அமைச்சர்கள் வரை நேர்மையாக இருப்பார்களேயானால் எமது தேசம் வளர்ச்சி அடையும் இந்த விடயத்தில் சமரசமே இருக்க கூடாது.

இல்லாவிடில் ஊழல் எங்கும் பரவி விடும் இதனால் நாடு பல துறைகளிலும் மோசமான பாதிப்புக்களை எதிர் கொள்ள நேரிடும்.

மக்களின் பிரதிநிதிகளான அதிகாரிகள் மக்களுக்கு விசுவாசமுடையவர்களாக இருக்க வேண்டும் அப்போது தான் எமது இந்தியா செழிப்பான நாடாக உருவாகும்.

அரசியலில் விழிப்புணர்வு

“அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார் அஃதறி கல்லா தவர்” என்பதனை போல அறிவுடைய மக்களாக நாம் இருக்க வேண்டும்.

ஒரு நாட்டின் ஆட்சியாளர்களை தீர்மானிப்பது அரசியல் ஆகும். ஊழலும் கையூட்டும் நாட்டை எவ்வாறு சீரழிக்கும் என்பதனை யாவரும் அறிவர். எனவே நாம் இவற்றை முற்றாக அழித்தாக வேண்டும்.

அரசியலில் உள்ள நேர்மையற்றவர்களை நாம் அறிந்து அவர்களை புறக்கணிக்க வேண்டும். இந்த நேர்மையற்ற செயல்களை ஒழிக்க நினைக்கும் ஆட்சியாளர்களை நாம் தெரிவு செய்வதனால் இந்தியா வளர்சி பெற வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது.

முடிவரை

இந்தியாவில் இடம்பெறுகின்ற இவ்வாறான தவறான நிகழ்வுகள் தான் இந்தியாவை இன்னும் வளர்ச்சி அடைய விடாமல் தடுத்து கொண்டிருக்கிறது.

இது ஆரோக்கியமானதன்று நமது முன்னோர்கள் கண்ட கனவுகளை நாம் நிறைவேற்ற வேண்டுமானால் ஒற்றுமையாகவும் விழிப்பாகவும் நடந்து கொள்ள வேண்டும்.

பொறுப்புள்ள ஒவ்வொரு இந்திய குடிமக்களுடைய கூட்டு முயற்சியினால் தான் செழிப்பான இந்தியாவினை உருவாக்க முடியும் என்பதனை நாம் சிந்தித்து செயலாற்றுவோம்.

You May Also Like :

விடுதலை போரில் பகத்சிங் கட்டுரை

தேர்தல் விழிப்புணர்வு கட்டுரை