நாம் வாழும் சமூகமானது திருமணமாகி ஒரு வருடத்திற்கு மேல் குழந்தை இல்லை என்றால் பெண்களையே பெரிதும் குறை கூறுகின்றது. இரண்டு அல்லது, மூன்று வருடங்கள் காத்திருந்து ஆண்கள் வேறு திருமணம் செய்கின்ற நிலைமையும் இந்த சமூகத்தில் உள்ளது. ஆனால் மனைவியிடம் மட்டும் குறை இருப்பதில்லை. அது கணவரிடமும் இருக்கலாம்.
அவ்வாறு கணவனிடம் மலட்டுத்தன்மை இருக்குமாயின் மறு திருமணம் என்பது பயனற்றதாகின்றது.
ஆண் மலட்டுத்தன்மையை சரி செய்யவில்லை என்றால் கண்டிப்பாக எத்தனை பெண்களை திருமணம் செய்தாலும் வாரிசைப் பெற முடியாது. காரணம் ஆண்களுக்கு எத்தகைய பிரச்சினை உள்ளது என்பதை கண்டறிந்து அதற்கான தீர்வு முறை அவசியமாகும்.
எல்லா ஆண்களுக்கும் ஒரே அளவிலான எண்ணிக்கையில் விந்தணுக்கள் இருப்பதில்லை. ஆண்களின் வயது, தேக ஆரோக்கியம் போன்றவற்றால் ஒவ்வொரு ஆணுக்கும் ஒவ்வொரு மாதிரியாக விந்தணு எண்ணிக்கை மாறுபடும்.
எனினும் சராசரியாக விந்தணு எண்ணிக்கையிலும் குறைவாக (உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட மதிப்பீட்டு அளவு – ஒரு மில்லி லிட்டருக்கு 15 மில்லியன் உயிரணுக்கள்) இருப்பின் விந்தணு குறைபாடு பிரச்சனை இருப்பதாக கருதப்படுகின்றது.
விந்தணு குறைபாட்டை மூன்று வகையில் நோக்கலாம். அதாவது,
லேசான விந்தணுக் குறைபாட்டுப் பிரச்சனை: இது 10 தொடக்கம் 15 மில்லியன் அளவில் இருக்கும்.
மிதமான விந்தணு குறைபாடு பிரச்சனை: ஐந்து விளக்கம் 10 மில்லியன் அளவில் இருக்கும்
தீவிர விந்தணு குறைபாடு பிரச்சனை: 0 -5 மில்லியன் அளவில் இருக்கும். முற்றிலுமாக விந்தணு குறைபாடு இருப்பது அசூஸ்பெர்மியா என்று கூறப்படுகிறது.
Table of Contents
விந்தணுக் குறைபாட்டுக்கான காரணங்கள்
பொதுவாக இயற்கையின் படைப்பில் 19 வயது ஆண்களுக்கு கிழமையில் Testosterone ஹார்மோன் அதிகமாக இருக்கும். இதன் அறிகுறியே முகப்பரு தோன்றல், துருதுரு என வேகமாக இருப்பர், மீசை, தாடி நன்கு வளரும். எனவே பொதுவாக 26 வயது முதல் 35 வயது வரை ஆண்மைத்தன்மை அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் திருமணம் செய்யாமல் கால தாமதமாகித் திருமணம் செய்தால் விந்தணு குறைபாடு ஏற்படுகின்றது.
மன அழுத்தம், ஆண்களின் விதைகளில் ஏற்படும் வெரிகோஸிஸ் எனும் நரம்பு சுருட்டு பிரச்சனை, விந்து வெளியேறுவதில் சிக்கல், விந்து வரும் குழாய்களில் தொற்று, ஹார்மோன் பிரச்சனை, மதுப்பழக்கம், போதைப் பொருட்களின் பாவனை, தூக்கமின்மை ஆரோக்கியமற்ற உணவு, பல பெண்களுடன் தொடர்பின் காரணமாக அதிக புணர்ச்சியால் அதிக விந்தணுக்களை இழத்தல் போன்ற பல காரணங்களினால் விந்தணு குறைபாடு ஏற்படுகின்றது.
புற்றுநோய், ஆயுட்காலம் குறைதல் போன்றவற்றுடன் தொடர்புடையது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். மேலும் சுற்றுச்சூழல் வாழ்க்கை முறையில் உலகளாவிய நெருக்கடி போன்றவையும் காரணமாகும்.
விந்தணு குறைபாடு அறிகுறிகள்
- சோர்வு
- நிம்மதியற்ற துக்கங்கள்
- நாள்பட்ட வியாதி
- குழந்தையின்மை
- விதைப்பை சிறியதாக இருத்தல்
- விதைப்பையில் கட்டி அல்லது வீக்கம்
- உடல் மற்றும் மன ரீதியாக உறவில் நாட்டம் இல்லை
- உடலுறவின் போது வலி
- தாடி, மீசை, மார்பு பகுதியில் முடி வளர்ச்சி குறைவு அல்லது இன்மை
Read More: வயிற்று புண் குணமடைய உணவு