வியக்கத்தக்க நன்மைகளை கொண்டுள்ள “முருங்கை கீரை நன்மைகள்” பற்றி இதில் காணலாம்.
நம் முன்னோர்கள் தங்களது உடல் நலத்தில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தனர். இதனால் இயற்கை தாவரங்கள் மற்றும் மூலிகை வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டனர். அவ்வகையில் பயன்படுத்தப்பட்ட தாவரங்களில் முருங்கையும் ஒன்றாகும்.
வீட்டில் ஒரு முருங்கை மரம் வளர்த்து வந்தால் ஏராளமான நன்மைகளைப் பெற முடியும். முருங்கைக் கீரையானது அனைத்து இடங்களிலும் அனைத்துக் காலங்களிலும் கிடைக்கக் கூடியது ஆகும்.
ஏனைய கீரைகளை விட அதிக அளவு புரதச் சத்தும் ஏனைய சத்துக்களையும் கொண்டுள்ளமை முருங்கைக் கீரைக்கே உரித்தான சிறப்பம்சமாகும்.
முருங்கை கீரை நன்மைகள்
1.முருங்கைக்கீரையானது 300 வகையான நோய்கள் வராமல் தடுக்கவும், 67 வகையான நோய்களைக் குணப்படுத்தவும் உதவுவதாக ஆயுர்வேதம் குறிப்பிடுகின்றது. மேலும் முருங்கைக் கீரையில் 90 வகையான சத்துக்களும், 46 வகையான மருத்துவ குணங்களும் இருப்பதாகவும் ஆய்வுக்குறிப்புகள் குறிப்பிடுகின்றன.
2. முருங்கைக் கீரை சத்துப் பற்றாக்குறையை குணப்படுத்த உதவுகின்றது. கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் போன்றோருக்கு ஆரோக்கியமான உணவாக பரிந்துரைக்கப்படுகிறது.
3. இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்துகிறது. முருங்கைக்கீரையில் ஏனைய தாவர உணவுகளில் இருப்பதை விட 25 மடங்கு இரும்புச்சத்து உள்ளது.
இதனால் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அதிகப்படுத்தும். செயற்கையில் உட்கொள்ளும் மருந்து மாத்திரைகளில் கிடைக்கும் இரும்புச் சத்துக்களை விட இயற்கையாக அமைந்துள்ள இரும்புச்சத்தானது உடலில் எளிதில் கிரகித்துக் கொள்ளும்.
4. உடல் சூட்டைத் தணிப்பதற்கும் மலச்சிக்கலை நீக்கவும் முருங்கைக் கீரை உதவுகின்றது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் இப்பிரச்சனைகள் தீரும்.
5. இரத்த சோகையைக் குணப்படுத்தும் – முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும்.
6. பற்களின் உறுதி மற்றும் முடிவளர்ச்சி, வயிற்றுப்புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய நோய்களுக்கு முருங்கைக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகின்றது.
7. தாய்ப் பால் சுரப்பதற்கு முருங்கைக் கீரை உதவுகிறது. முருங்கைக் கீரையை கொண்டு செய்யப்படும் பதார்த்தத்தை சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.
8. சுவாசக் கோளாறுகளை தீர்க்க கூடியது – ஆஸ்துமா, மார்புச் சளி போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை கீரை சூப் செய்து குடித்து வந்தால் விரைவில் குணப்படுத்த முடியும்.
9. மலட்டுத் தன்மையை அகற்றும் – ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கைக் கீரையை வேக வைத்து சமைத்து சாப்பிட்டு வந்தால் மலட்டுத் தன்மை நீங்கும்.
10. உடம்பு வலியைக் குறைக்கும் – முருங்கைக் கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால் கை, கால், உடம்பு வலிகள் தீரும்.
11. முருங்கைக் கீரையிலுள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ் உடல் பருமன், இதய நோய்கள், ஆர்த்தரைடீஸ், கல்லீரல் நோய், தோல்நோய், ஜீரணக்கோளாறு முதலானவற்றைக் குணப்படுத்த உதவுகின்றது.
12. மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது – முருங்கை இலையில் உள்ள வைட்டமின்-E, வைட்டமின்-C ஆகியன நினைவுத்திறன், மூளை வளர்ச்சி முதலானவற்றை மேம்படுத்துகின்றன.
You May Also Like: