தமிழ் இலக்கணத்தின் முதற்பிரிவான எழுத்திலக்கணத்தைப் பன்னிரண்டு வகையாகப் பிரித்து அவற்றை 5 இயல்களில் நன்னூல் விளக்குகிறது. நன்னூல்படி, எழுத்தியலில் குறிப்பிடப்படும் பன்னிரு கூறுகளில் ஒன்றாக மாத்திரையும் விளங்குகின்றது.
மாத்திரையானது வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது. அதாவது ‘மாத்திரை’ என்றால் “ஒலி இமைக்கும் நேரம்” அல்லது “கைநொடி நேரம்” என்பர் இலக்கண நூலார்.
எழுத்துகளின் மாத்திரை இரண்டிற்கு மேல் இல்லை என்பது இலக்கண நூலார் கருத்து. அதற்கு மேல் மாத்திரை பெற வேண்டுமெனில் அது அளபெடையாகச் செய்யுளில் வரும்.
Table of Contents
மாத்திரை என்றால் என்ன
ஒரு சொல்லை ஒலிப்பதற்கு நாம் எடுத்துக்கொள்ளும் கால அளவு மாத்திரை எனப்படும்.
“கண் இமை நொடி என அவ்வே மாத்திரை நுண்ணிதின் உயர்ந்தோர் கண்டவாறே” என்கிறது தொல்காப்பியம். “இயல்பெழு மாந்தர் இமை நொடி மாத்திரை” என்கிறது நன்னூல்.
மனிதர்கள் இயல்பாகக் கண் இமைப்பதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறோமோ அதுதான் மாத்திரையின் கால அளவு ஆகும்.
“உள்ளல் காலே ஊன்றல் அரையே” என்கிறது ஒரு பாடல் வரி அதாவது நினைப்பதற்கு உரிய காலம் கால் மாத்திரை. நினைத்தது மனதில் பதியும் காலம் அரை மாத்திரை ஆகும்.
எழுத்துகள் பெறும் மாத்திரை
- மெய் – 1/2 மாத்திரை
- ஆய்தம் – 1/2 மாத்திரை
- உயிரளபெடை – (1/2 + 2) மாத்திரை
- ஒற்றளபெடை – (1/2 + 2) மாத்திரை
- குற்றியலுகரம் – 1/2 மாத்திரை
- குற்றியலிகரம் – 1/2 மாத்திரை
- ஐகாரக்குறுக்கம் மொழி முதலில் – 1/2 மாத்திரை
- மொழி, இடை, கடை – 1 மாத்திரை
- ஒளகாரக் குறுக்கம் மொழி முதல் மட்டும் – 1
- மகரக் குறுக்கம் – 1/4 மாத்திரை
- ஆய்தக் குறுக்கம் – 1/4 மாத்திரை
அளபெடை என்பது
ஒரு செய்யுளில் ஓசை குறையும் இடங்களில் அந்த ஓசையை நிறைவு செய்வதற்காக எழுத்துக்கள் நீண்டு ஒலிப்பதே அளபடை ஆகும்.
உயிரளபெடை உயிரெழுத்துகளில் நெட்டெழுத்துகள் ஏழும், தமக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து நீண்டு ஒலிப்பதற்கு உயிரளபெடை என்று பெயர்.
உயிரளபெடை மாத்திரை அளவு மூன்று. மொழி முதல், இடை, கடை ஆகிய மூன்று இடங்களிலும் உயிர்நெடில் அளபெடுக்கும்.
எடுத்துக்காட்டாக:
ஓஒதல் வேண்டும் – முதல்
கெடுப்பதூஉம் கெட்டார்க்கு – இடை
நல்ல படாஅ பறை – கடை
ஒற்றளபெடை
உயிர் எழுத்துக்கள் அளபெடுப்பதைப் போலவே மெய் எழுத்துக்களும் அளபெடுக்கும். மெய்யெழுத்துக்கள் அளபெடுக்கும் போது அதற்கு அடையாளமாக அதே மெய் எழுத்து எழுதப்படும்.
ஒற்றளபெடை சொல்லின் இடையிலும், இறுதியிலும் மட்டுமே அளபெடுக்கும். ஒரு மெய்யெழுத்து அரை மாத்திரை நேரம் ஒலிக்கும். மெய்யெழுத்துக்கள் அளபெடுக்கும் போது இரண்டு மெய்யெழுத்துக்கள் வருவதால் இரண்டும் சேர்ந்து ஒரு மாத்திரை நேரம் ஒலிக்கும்.
எடுத்துக்காட்டு – வணங்ங்கினான்
Read more: வெண்பாவின் வகைகள்