மரம் வளர்ப்போம் பயன் பெறுவோம் கட்டுரை

maram valarpom katturai in tamil

இந்த பதிவில் “மரம் வளர்ப்போம் பயன் பெறுவோம் கட்டுரை” பதிவை காணலாம்.

மரங்களின் அழிவு மனிதர்களின் அழிவு என்பதை உணர்ந்து, மரங்களை வளர்க்க வேண்டும்.

மரம் வளர்ப்போம் பயன் பெறுவோம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. மரங்கள் வளர்ப்போம் மழை பெறுவோம்
  3. மரங்களின் நன்மைகள்
  4. மரங்களின் அழிப்பு
  5. மரங்களின் அழிப்பால் ஏற்படும் பாதிப்புக்கள்
  6. முடிவுரை

முன்னுரை

மரங்களே இயற்கை நிலத்தோற்றத்தின் மிக முக்கிய அம்சங்களாகும். அவற்றை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம்முடையதாகும். ஆனால் நாம் நம் சுயநலத்திற்காக மரங்களை வெட்டியும் காடுகளை அழித்தும் நம்மை நாமே அழித்து வருகின்றோம்.

அடுத்த தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைத்தால் மட்டும் போதாது அவர்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு நல்ல காற்று தேவை அது மரங்களின் மூலம் தான் கிடைக்கும்.

எனவே அதற்கு செய்ய வேண்டியது மரம் வளர்ப்பதுதான். இக்கட்டுரையில் மரம் வளர்ப்போம் பயன் பெறுவோம் பற்றி நோக்கலாம்.

மரங்கள் வளர்ப்போம் மழை பெறுவோம்

“விசும்பின் துளிவிழின் அல்லால் மற் றாங்கே பசும்புல் தலை காண்பது அரிது” என்கின்றது உலகப்பொதுமறை. உலகில் உயிர்கள் உய்வதற்கு மழை நீரே ஆதாரமாய் இருக்கின்றது.

பூமிப்பந்து உயிர் கோலமாய் தொடர்வதற்கு மழை பெய்வதே அடிப்படைக் காரணமாகும். இயற்கையில் கிடைக்கும் தூய்மையான நீர் மழை நீரே. அதனை சேமித்து வைப்பது ஒவ்வொருவரின் கடமையாகும்.

தண்ணீரைச் சிக்கனமாக பயன்படுத்துவதோடு மழை நீரையும் சிக்கனமாக பயன்படுத்துவது அவசியமாகும்.

மரங்களின் நன்மைகள்

மரங்கள் பூமிக்கும், மனிதனுக்கும் பல நன்மைகளைத் தருகின்றன. மரங்கள் மனித உயிர் வாழ்க்கைக்கு ஆதாரமாக விளங்குகின்றன. மனிதன் சுவாசிக்க காற்றைத் தருபவை மரங்களே.

மனிதன் இளைப்பார மரங்கள் நிழல் தருகின்றன. மேலும் மரங்கள் வளிமண்டலத்திற்கு நீரை அனுப்பி மழையைப் பொழியச் செய்கின்றன. சூரிய கதிர்வீச்சு, வேகமான காற்று போன்றவற்றில் இருந்து மனிதனை பாதுகாக்கின்றன.

மரங்கள் மண்ணைப் பசுமையாக்குகின்றன. விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் வாழ்விடமாகத் திகழ்கின்றன. நாம் பயன்படுத்தும் மேசை, கதிரை, கட்டில் முதலான பல பொருட்களை உருவாக்கப் பயன்படுகின்றன.

காய்கறிகள், தானியங்கள், பழங்கள் முதலானவற்றை தருகின்றன. காய்ந்த மரங்கள் கூட எரிபொருளாகப் பயன்படுகின்றன.

மரங்களின் அழிப்பு

மரங்கள் மனித செயற்பாடுகளால் அளிக்கப்பட்டு வருகின்றன. சேனைப் பயிர் செய்தல், கட்டுமானம், குடியிருப்பு அமைத்தல், தொழிற்சாலைகளை அமைத்தல், சாலை விரிவாக்கம், சாலைகள் அமைத்தல், விமான நிலையங்கள் அமைப்பது, சுரங்கப் பணிகள் உள்ளிட்ட பல நடவடிக்கைகளுக்காக மரங்கள் அழிக்கப்பட்டுகின்றன.

இதனால் மனிதகுலம் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றது. காட்டுத்தீ, நிலச்சரிவு, நிலநடுக்கம், சூறாவளி, வெள்ளப்பெருக்கு முதலான இயற்கைக் காரணங்களாலும் மரங்கள் அழிக்கப்படுகின்றன.

மரங்களின் அழிப்பால் ஏற்படும் பாதிப்புக்கள்

முற்காலத்தைப் போல் இல்லாமல் மனித வாழ்க்கை மிகவும் மோசமான பாதையில் சென்று கொண்டிருக்கின்றது. மரங்களை வெட்டுவதே இன்றைய காலநிலை மாற்றத்திற்கு மிக முக்கிய காரணமாகும்.

பயிர் செய்யும் நேரத்தில் வறட்சியும், அறுவடை நேரத்தில் புயலும் வருகின்றன. வெப்பம் நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது.

பயிர் நிலங்கள் தரிசு நிலங்களாகவும், பெருக்கெடுத்து ஓடும் ஆறுகள் வறண்டும் கிடக்கின்றன. இதனால் விலங்குகளும், பறவைகளும் பாதிக்கப்படுகின்றன.

முடிவுரை

மரங்களின் அழிவு மனிதர்களின் அழிவு என்பதை உணர்ந்து, மரங்களை வளர்க்க வேண்டும். குறைந்தபட்சம் நாம் மருந்துச் செடிகளையாவது வளர்க்க வேண்டும்.

துளசி போன்ற மூலிகைச் செடிகளை வளர்க்கலாம். அவை கொசுக்களை விரட்டும், காற்றைத் தூய்மையாக்கும்.

எதிர்காலத்தில் தண்ணீரைப் போல் காற்றையும் காசு கொடுத்து வாங்க வேண்டியேற்படும். எனவே மரம் இல்லையேல் மனித இனம் இல்லை என்பதை உணர்ந்து, மரம் வளர்ப்போம் பயன் பெறுவோம்‼

You May Also Like :
மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் கட்டுரை
மரம் இயற்கையின் வரம் கட்டுரை