மனித குலத்தைக் காலம் காலமாகப் பல நோய்கள் தாக்கி வருகின்றது. இதில் சில நோய்கள் தோன்றி பல தாக்கத்தை ஏற்படுத்தி மறைந்ததாகவும், சில நோய்கள் நெடுங்காலமாக மனித வரலாற்றுடன் இணைந்ததாகவும், சில வகை நோய்கள் மிக அரிய வகையில் மனிதனைத் தாக்கி வரும் நோய்களாகவும் உள்ளன.
மயோசிடிஸ் என்ற நோய் கேட்பதற்கு புதியதுபோல் தோன்றினாலும் இது பன்னெடுங்காலமாக நம் மக்களிடையே உள்ள நோயாகவே உள்ளது. உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியும் இருக்கிறது.
தசை அழச்சி நோயான இந்நோய் ஆண்கள், பெண்கள் என இரு தரப்பினருக்கும் வரும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மயோசிடிஸ் தோலில் பாதிப்பை ஏற்படுத்தும் தசை அழற்சி நோய், தோலில் பாதிப்பை ஏற்படுத்தாத தசை அழற்சி நோய் என இரண்டு வகைப்படுகின்றது.
மயோசிடிஸ் நோய் ஏற்பட உறுதியான காரணம் என்ன என்பது குறித்து விஞ்ஞானிகளால் இதுவரை அறிவிக்கப்படவில்லை எனினும் சுற்றுச்சூழல் மற்றும் மரபணு, அதிகரித்த உடற்பயிற்சி இந்நோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
அதிகமானோருக்கு வரக்கூடியது இல்லை என்பதினால் அரிதான நோய்களில் ஒன்றாக இந்நோய் உள்ளது.
வைரஸ் தொற்றுக்களால் பாதிக்கப்பட்டவர்கள், புற்றுநோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் போன்ற தொற்றுக்குள்ளானவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடு உள்ளவர்கள் போன்றோரை இந்நோய் எளிதில் தாக்கலாம்.
இதனை ஆரம்பத்தில் இருந்து கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் இதிலிருந்து மீண்டு வரலாம். இதனைக் கண்டு கொள்ளாமல் விட்டால் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
Table of Contents
மயோசிடிஸ் என்றால் என்ன
மயோசிடிஸ் என்பது தசைகளைப் பலவீனமாக்கி வலியையும், சோர்வையும் கொடுக்கும் நோயாகும்.
மயோசிடிஸ் நோயினால் ஏற்படும் பாதிப்புக்கள்
இந்நோய் ஏற்பட்டால் தோள்பட்டை இடுப்பு மற்றும் தொடைகளைச் சுற்றியுள்ள தசைகள் பாதிக்கப்படும்.
நுரையீரல் மற்றும் உடலில் பிற பகுதிகளில் வலி ஏற்படும். இதனால் சுவாசம் மற்றும் விழுங்குதல் போன்ற செயல்களைச் செய்வதற்கு கூடப் பெரும் சிரமம் ஏற்படும்.
தசைகளின் பலவீனம் மற்றும் அவற்றினால் ஏற்படும் சோர்வு காரணமாக நோயாளிகள் சமநிலையை இழந்து கீழே விழ நேரிடும். தசைகளில் மிகுந்த சோர்வு ஏற்படுவதால் தலை சீவுதல், படிக்கட்டு ஏறுதல் போன்ற அன்றாட வேலைகளை கூட செய்ய சிரமாக இருக்கும்.
நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அனைத்து வகையான நோய்கள் மற்றும் கிருமிகளின் பாதிப்பில் இருந்து நம்மை இயற்கையாக காத்துக் கொள்வதற்கான வழிமுறையாக உள்ளது.
ஆனால் மாயோசிட்டிஸ் நோய் ஏற்பட்டால் நமது நோய் எதிர்ப்பு சக்தியை மற்றும் நமது உடலின் ஆரோக்கியமான திசுக்களைத் தாக்கத் தொடங்கும். இதனாலேயே உடலில் வலி வீக்கம் ஏற்படுகின்றது.
நோய் அறிகுறிகள்
கண்களைச் சுற்றி வீக்கம் ஏற்படுவது மயோசிடிஸின் பொதுவான அறிகுறிகளில் ஒன்றாகும். படுக்கையிலிருந்தும் அமர்ந்தும் எழுவதில் சிரமம், நடப்பதில் சிரமம் இருக்கும், மார்பில் சிவப்பு தடிப்புகள், இருமல், குரல் மாற்றம் போன்ற அறிகுறிகள் தென்படலாம்.
Read more: வேப்பம் பூ மருத்துவ பயன்கள்