இந்த பதிவில் இன்று சூழலுக்கு பெரும் பாதகமாக இருக்கும் “பிளாஸ்டிக் வரமா சாபமா கட்டுரை” பதிவை காணலாம்.
இன்று உலகம் எதிர்நோக்கிவரும் முக்கியமான பிரச்சினையாகக் காணப்படுவது பிளாஸ்டிக் பாவனை ஆகும்.
Table of Contents
பிளாஸ்டிக் வரமா சாபமா கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- பிளாஸ்டிக் அறிமுகம்
- பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகள்
- பிளாஸ்டிக் ஏற்படுத்தும் நோய்கள்
- பிளாஸ்டிக் பாவனையை கட்டுப்படுத்தல்
- முடிவுரை
முன்னுரை
இன்று உலகம் எதிர்நோக்கி வரும் முக்கியமான பிரச்சினையாகக் காணப்படுவது பிளாஸ்டிக் பாவனை ஆகும்.
இலகுவான வாழ்க்கைக்கு பழக்கப்பட்ட மக்கள் பிளாஸ்டிக் பொருட்களையே அதிகளவில் பயன்படுத்துவதை விருப்புகின்றனர். இதனால் எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் பொருட்களே மிகுந்து காணப்படுகின்றன.
உலகை அச்சுறுத்தும் பல்வேறு அபாயங்களிற்கு காரணமாகக் காணப்படும் பிளாஸ்டிக் பாவனையைக் கட்டுப்படுத்துவதும் அவற்றிற்கான மாற்றீடுகளை அறிமுகப்படுத்துவதும் காலத்தின் கட்டாயமாகும்.
பிளாஸ்டிக் அறிமுகம்
பிளாஸ்டிக் எனப்படுவது கார்பன் மற்றும் பல்வேறு வேதியல் பொருட்களை கொண்டு தயாரிக்கபடும் ஒரு கலவையாகும்.
கடதாசி மற்றும் துணியினால் செய்யப்படும் பொருட்களை போலல்லாது பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்ட பொருட்கள் பலமானவையாகவும் பாவனைக்கு உகந்தவையாகவும் காணப்படுகின்றன.
அதனைத் தவிர பிளாஸ்டிக்கினால் உருவாக்கப்பட்ட பொருட்கள் பாரம் குறைந்தவை. அதனால் அவை பயன்பாட்டிற்கும் இடம் மாற்றிக் கொள்ளவும் இலகுவானவை.
இரும்பு மற்றும் பித்தளை போன்ற உலோகங்களால் ஆன பொருட்கள் விலை கூடியவையாகக் காணப்படுவதுடன் அவற்றை பராமரிப்பது மிகவும் கடினம். அதிக சிரத்தையும் நேரமும் எடுத்துக்கொள்ளும்.
அதற்கு நேர்மாறாக பிளாஸ்டிக்கினால் ஆன பொருட்கள் விலை குறைவாகவும், இலகுவாக மாற்றிக் கொள்ளக் கூடியதாகவும் காணப்படுகின்றன.
பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகள்
எந்தளவு நன்மைகள் காணப்படினும் பிளாஸ்டிக் பயன்பாடானது இந்த உலகிற்கு ஒரு சாபக்கேடே ஆகும். அவற்றின் பயன்பாட்டை தவிர்பதற்கு அவற்றினால் ஏற்படும் தீமைகள் பற்றி அறிந்திருப்பது அவசியமாகும்.
இவை சூழலை மாசடைதலிற்கு உட்படுத்துவதில் பிரதானமான இடத்தை வகிக்கின்றன.
கடதாசி துணிவகைகளைப் போல் பிளாஸ்டிக்குகள் எளிதில் உக்குவதில்லை. அவை கிட்டத்தட்ட பல நூறு வருடங்கள் உக்குதலிற்கு உட்படாமல் மண்ணில் புதைந்து இருக்கக் கூடியன. இதனால் மண்ணின் வளத்தை அழித்து மண்ணில் இரசாயனத்தை கலக்கின்றன.
இதனைத்தவிர பிளாஸ்டிக்குகளை எரிப்பதனால் அதிலிருந்து உருவாகும் நச்சுவாயுக்கள் ஓசோன் மண்டலத்தில் துவராங்களை ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
பிளாஸ்டிக் ஏற்படுத்தும் நோய்கள்
பிளாஸ்டிக் பொருட்கள் மனித உடலிற்கும் தீமை விளைவிக்க கூடியன. பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களில் உணவை சேகரிக்கும் போது உணவில் நச்சுத்தன்மை உடைய பொருட்கள் கலந்து உடலை பாதிக்கின்றன.
பொதுவாக பிளாஸ்டிக் பொருட்களில் உள்ள நச்சுப் பொருட்களானவை சுவாசம் மூலமும் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு மற்றும் நீர் மூலமும் நம்முடைய உடலில் சேர்கின்றன.
இதனால் சிறுநீரகம், கல்லீரல், மற்றும் சுவாச உறுப்புக்களில் பல்வேறு நோய்கள் உருவாகின்றன. புற்றுநோய், தோல் சம்பந்தமான பிரச்சினைகள், கல்லீரல் அலர்ச்சி, சிறுநீரக செயலிழப்பு போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.
பிளாஸ்டிக் பாவனையைக் கட்டுப்படுத்தல்
பிளாஸ்டிக் பாவனையை கட்டுப்படுத்துவதற்கு அதற்கான மாற்றீட்டை அறிமுகப்படுத்துவதே முதல் வழியாகும். பிளாஸ்டிக்கிற்கு மாற்றீடாக பல்வேறு பொருட்கள் காணப்படுகின்றன.
வீட்டு மற்றும் பொது நிகழ்வுகளில் பிளாஸ்டிக் தட்டுக்களையும் குவளைகளையும் பயன்படுத்துகின்றோம். அவற்கு பதிலீடாக வாழை இலை, உலோகத்தட்டுகள் மற்றும் குவளைகளைப் பயன்படுத்தலாம்.
தற்போது கடதாசியினால் உருவாக்கப்பட்ட உணவுத்தட்டுக்களும் குவளைகளும் சந்தையில் கிடைக்கப்படுகின்றன.
பொருட்களை வாங்குவதற்கு பிளாஸ்டிக் கூடைகளை மற்றும் பைகளை எடுத்துச் செல்வதனைத் தவிர்த்து பிரம்பு மற்று மூங்கிலால் தயாரிக்கப்பட்ட கூடைகளைப் பயன்படுத்தலாம்.
முடிவுரை
முழு உலகிற்கும் ஒரு சாபக்கேடாய் மாறிவரும் பிளாஸ்ரிக் பாவனையை ஒழிப்பது வளமான உலகை கட்டியெழுப்ப உதவும்.
பிளாஸ்டிக் பாவனையை ஒழித்து எதிர்கால சந்ததியினரும் பயன்படுத்தும் வகையில் ஆரோக்கியமான உலகை கட்டியெழுப்புவோமாக.
You May Also Like : |
---|
திடக்கழிவு மேலாண்மை கட்டுரை |
நெகிழி இல்லா உலகம் கட்டுரை |