இலக்கிய வகைச் சொற்களிலே இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்று நான்கு வகை உண்டு. இந்த நான்கு வகையான சொற்களில் வடசொல் என்பது வடமொழியில் இருந்து தமிழில் வந்து கலந்து விட்ட சொற்களையே வடசொல் என்கின்றோம்.
வடமொழி என்று குறிப்பிடப்படும் சொற்கள் யாதெனில் சமஸ்கிருத மொழியில் இருந்து தமிழ் மொழியில் வரும் சொற்கள் வட சொற்கள் எனப்படும்.
“பொது எழுத்தானும், சிறப்பு எழுத்தானும்
ஈர் எழுத்தானும் இயவன வடசொல்”
என்று நன்னூல் கூறுகின்றது. அதாவது வடமொழிக்கும் தமிழ் மொழிக்கும் பொதுவாக உள்ள எழுத்துக்களாலும், வடமொழிக்குச் சிறப்பாக உள்ள எழுத்துக்களாலும் வடமொழியில் இருந்து தமிழ்மொழியில் வந்து வழங்கும் சொற்கள் வட சொற்கள் என்பது இதன் பொருளாகும்.
தொல்காப்பிய காலத்திலிருந்தே தமிழோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்ட மொழி சமஸ்கிருதம் எனப்படும். தொல்காப்பியர் வடக்கிலுள்ள மொழியைப் பற்றிப் பொதுவாக வடசொல் எனக் குறிப்பிடுகின்றார்.
மேலும் தொல்காப்பியர் வட சொல்லைத் தமிழில் எடுத்தியம்புவது பற்றியும் சிந்தித்துள்ளார். அதாவது,
“வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே”
(தொல். சொல் 395)
“சிதைந்தன வரினும் இயைந்தன
வரையார்”
(தொல். சொல் 396)
என்று விளக்கியள்ளார். அதாவது, தமிழ்மொழி மரபுக்கேற்ப மாற்றி எழுத வேண்டும் என்றும், சிதைந்து வருவனவற்றையும் ஏற்றுக் கொள்ளலாம் என்றும் தொல்காப்பியர் தொல்காப்பியத்தில் குறிப்பிட்டுள்ளமையினை இப்பாடல் வரிகளினூடாகக் காண முடிகின்றது. இந்த வட சொல்லானது தற்சமம், தற்பவம் என இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
Table of Contents
தற்சமம் என்றால் என்ன
தமிழ்மொழியில் தமிழ்ச் சொற்கள் போன்றே மாற்றமின்றி வரும் வட சொற்கள் தற்சமம் என அழைக்கப்படுகின்றன.
உதாரணமாக – கமலம், சூரியன், பௌர்ணமி, வேதம், தியானம், தைரியம் இவற்றில் வடமொழிக்குரிய சிறப்பு எழுத்துக்கள் எதுவும் இல்லை.
இதில் தமிழ் எழுத்துக்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. உச்சரிப்பு கெடாமல் மூலத்தில் உள்ளபடியே கலந்த வடசொல் தற்சமம் எனப்படும். தற்சமச் சொற்கள் வடமொழிக்கும், தமிழ் மொழிக்கும் பொதுவான எழுத்துக்களால் ஆனது.
தற்பவம் என்றால் என்ன
வடமொழிக்குரிய சிறப்பு எழுத்துக்கள் தமிழ் தன்மைக்கு ஏற்ப மாறி வருவது தற்பவம் என்று அழைக்கப்படுகின்றது. தமிழ் நடைக்கேற்ப மூல உச்சரிப்பு திரிந்து வழங்குவது தற்பவம் எனப்படும்.
எடுத்துக்காட்டு:
பங்கஐம் – பட்சி
சரஸ்வதி – சரசுவதி
ஹரி – அரி
வருஷம் – வருடம்
லஷ்சுமண் – இலக்குவனன்
விபீஷணன் – வீடனன்
இவ்வாறாக நம் மொழியின் அமைப்பிற்கு ஏற்ற வகையில் மாற்றிப் பயன்படுத்தி வருகின்றோம்.
வட எழுத்தைத் தமிழில் எழுதுவதற்குரிய முறை
ஜ – ச (அல்லது) ய
ஜயம் – சயம்
பங்கஜம் – பங்கம்
ஷ – ச (அல்லது) ட
ஷண்முகம் – சண்முகம்
விஷம் – விசம்
ர – அ (அல்லது) இ
ரங்கம் – அரங்கம்
ராமன் – இராமன்
ல – இ (அல்லது) உ
லாபம் – இலாபம்
லோகம் – உலோகம்
Read more: தர்பூசணி பழம் பயன்கள்