நவீன மருத்துவ உலகில் இன்று பாவிக்கப்படும் சொற்களில் டயாலிசிஸ் (Dialysis) என்ற சொல்லும் ஒன்றாகும்.
ரத்தத்தில் நீர் மற்றும் தாது உப்புகள் அதிகரித்தால் அதைப் பிரித்தெடுப்பது சிறுநீரகம்தான். நாளொன்றுக்கு 1000 லீட்டர் ரத்தத்தை நமது சிறுநீரகங்கள் பிரித்தெடுக்கின்றன.
இத்தகைய சிறுநீரகங்களானவை பல காரணங்களால் பாதிப்படைகின்றன. சிறிநீரகங்களின் பாதிப்பில் உடற்பருமன் அதிகரிப்பு பெரும் செல்வாக்குச் செய்கிறது.
குறிப்பாக அது இரத்த அழுத்தத்தை அதிகரிப்பதால் சிறுநீரகங்கள் உயர் இரத்த அழுத்தத்தில் வடிகட்டலை செய்ய வேண்டி ஏற்படுவதால் அவற்றின் நுண் வடிகட்டல் திறனில் பாதிப்பு ஏற்படுகிறது.
சிறுநீரகத்தின் திறன் மிகவும் குறைந்து இரத்தத்தில் உள்ள நச்சுக்களைப் பிரித்து வெளியேற்றும் திறனும் பாதிக்கப்படும்போது டயாலிசிஸ் செய்யவேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
குறிப்பாக, சிறுநீரகங்களின் செயல்பாடு 85 இலிருந்து 90 சதவீதம் குறைந்து, (End Stage Kidney Disease ESKD) ஒரு முடிவாகும் நிலையைத் தொடும்பொழுது டயாலிசிஸை நாடியாக வேண்டும்.
டயாலிசிஸ் பொறிமுறை என்பது சிறுநீரகங்களின் செயலை செய்தாலும் சிறுநீரகங்கள் போலவே அச்சொட்டாக செயற்படுகின்றன என்று சொல்ல முடியாது.
அதாவது, கடுமையான சிறுநீரக செயலிழப்புள்ள சில நோயாளிகளுக்கு சிறுநீரகம் சாதாரணமாக செயல்படத் தொடங்கும் வரை குறுகிய காலத்திற்கு டயாலிசிஸ் சிகிச்சை கொடுக்கப்படுகின்றது.
இருப்பினும், நாள்பட்ட அல்லது இறுதி கட்டத்தில் சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும் வரை உங்கள் வாழ்நாள் முழுவதும் டயாலிசிஸ் செய்ய வேண்டும்.
Table of Contents
டயாலிசிஸ் என்றால் என்ன
சிறுநீரகங்கள் செய்யும் துப்பரவுப் பணியை உடலுக்கு வெளியே செயற்கை சிறுநீரக இயந்திரக் கருவியில் இருக்கும் செயற்கைச் சிறுநீரகச் சவ்வு வழியாகப் பிரித்தெடுத்து ரத்தத்தைச் சுத்தம் செய்து மீண்டும் உடலுக்குள் செலுத்துவதே டயாலிசிஸ் ஆகும்.
அதாவது சிறுநீர் பிரித்தல் (dialysis) என்பது இரத்தத்திலிருந்து கழிவுகளையும் கூடுதல் நீரையும் பிரித்தெடுக்கும் ஓர் செயல்பாடாகும்.
டயாலிசிஸ் வகைகள்
டயாலிசிஸ் செய்வதில் இரண்டு வகைகள் இருக்கின்றன. “பெரிட்டோனியல் டயாலிசிஸ்” மற்றும் “ஹகிமோ டயாலிசிஸ்” என்பவையே அவை இரண்டும் ஆகும்.
நம் வயிற்றில் உள்ள பெரிட்டோனியம் எனும் சவ்வைப் பயன்படுத்தி கழிவுகளை அகற்றும் முறை பெரிட்டோனியல் டயாலிசிஸ் எனப்படும். இது குருதியின் அளவை மற்றும் குருதி வெளியேற்ற உட்புகு வேகத்தைப் பொறுத்தது. அத்தோடு தேவைக்கு ஏற்ப வாரத்துக்கு நான்கு தொடக்கம் இரண்டு தடவைகள் என்று இதனைச் செய்ய நேரிடலாம்.
இரத்தத்தை வெளியே ஒரு கருவிக்குள் செலுத்தி இரத்தத்தைச் சுத்திகரிக்கும் முறை ஹகிமோ டயாலிசிஸ் ஆகும். வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்தால் போதும்.
ஹகிமோ டயாலிசிஸ் என்பதை செயற்கை சிறுநீரகம் என்று கூறலாம். ஒன்றுக்கு 3 தொடக்கம் 4 தடவைகள் செய்வார்கள். அல்லது இரவு முழுவதும் செய்யக் கூடியதாக இருக்கலாம்.
Read more: தூக்கம் வர எளிய வழிகள்