இந்த கட்டுரையில் “சிலப்பதிகாரம் பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.
வாழ்வில் மக்கள் எவ்வாறு வாழ வேண்டும் என அழகாக இந்த காப்பியம் நன்கு எடுத்து காட்டுகிறது.
Table of Contents
சிலப்பதிகாரம் பற்றிய கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- உருவான வரலாறு
- அமைப்பு
- தமிழ் பெருங்காப்பியம்
- பாத்திரங்கள்
- தத்துவங்கள்
- முடிவுரை
முன்னுரை
தமிழ் காப்பிய மரபில் தனித்துவமான அடையாளமாக விளங்கும் முத்தமிழ் காப்பியம் சிலப்பதிகாரம் ஆகும். “நெஞ்சை அள்ளுகின்ற காப்பியம்” என்ற பெருமைக்குரியதாகும்.
இது சிலம்பு + அதிகாரம் என்பது சேர்ந்து சிலப்பதிகாரம் என்றானது. சிலம்பு என்கின்ற அணியே இந்த கதையை அலங்கரிக்க காரணமானதனால் இப்பெயர் உண்டாயிற்று.
காப்பிய மரபுகளுக்கு உட்பட்டு இளங்கோவடிகளால் பாடப்பட்ட இந்த காப்பியம் தமிழ் இலக்கிய வரலாற்றில் தனிசிறப்புக்களை உடையதாகும்.
தமிழில் உள்ள ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
உருவான வரலாறு
சேர நாட்டின் மன்னன் சேரன் செங்குட்டுவன் கற்பில் சிறந்த கண்ணகியினுடைய கதையினை கேள்வியுற்று அந்த மெய்சிலிர்க்கும் வரலாற்றினை ஒரு பெரும் காப்பியமாக படைக்குமாறு தனது சகோதரனான இளங்கோவடிகளை வேண்டுகிறான்.
கண்ணகி கோவலன் மீது கொண்ட உண்மையான காதல் இதனால் மதுரையை எரித்து நீதியை நிலைநாட்டி விண்ணுலகம் சென்ற அந்த அற்புத கதையினால் கண்ணகியின் மீது மரியாதை கொண்டு இந்த ஒப்பற் காப்பியத்தை இளங்கோவடிகள் இயற்றினார்.
சேர சோழ பாண்டிய நாடுகளினை அடிப்படையாக கொண்ட கதைக்களம் இக்காப்பியத்தில் அழகாக வெளிப்படுகிறது.
அமைப்பு
இது சங்கமருவிய காலத்துக்குரிய இலக்கியமாக அறியப்படுகின்றது. சிலப்பதிகாரத்தில் பிரதானமாக மூன்று காண்டங்கள் காணப்படுகின்றன. அவையாவன புகார்காண்டம், மதுரை காண்டம், வஞ்சிகாண்டம் என்பனவாகும்.
இந்த மூன்று காண்டங்கள் சேர சோழ பாண்டிய நாடுகளின் தலைநகரங்களை குறிப்பதாக ஆசிரியர் அமைத்திருக்கின்றார். மற்றும் முப்பது உட்பிரிவுகள் காணப்படுகின்றன. அவை கதைகளாக பிரிக்கப்பட்டிருப்பது சிறப்பான அம்சமாகும்.
தமிழ் பெருங்காப்பியம்
சிலப்பதிகாரம் தமிழின் தலைகாப்பியம் என்று போற்றப்படும் சிறப்புடையது. அது மாத்திரமன்றி அந்தக்கால தமிழ் மக்களின் வாழ்வியலை மிக அழகாக சித்தரிப்பதனால் இதனை குடிமக்கள் காப்பியம் எனவும் அழைக்கின்றனர்.
இந்த காப்பியத்தில் மத சார்புகளோ எந்த மன்னர்கள் சார்புகளோ இருக்கவில்லை என்பது தனி சிறப்பாகும். ஆசிரியப்பா எனும் பாவகை இங்கு கையாளப்பட்டிருக்கின்றது.
இதனால் இதனை உரைநடையிட்ட பாட்டுடை செய்யுள் என்று வர்ணிக்கப்படுகின்றது. இவ்வாறு பலவகையான பெருமைகளை உடைய தமிழின் தலைசிறந்த காப்பியமாக இது திகழ்கின்றது.
பாத்திரங்கள்
இந்த காப்பியத்தில் பிரதானமான பாத்திரங்களாக மாநாயகனுடைய மகளான கண்ணகி இந்த காப்பியத்தின் பிரதான கதாபாத்திரமாகும். இவர் சோழநாட்டை சேர்ந்தவர். கண்ணகியின் கணவன் கோவலன் இவன் மாசாத்துவன் என்ற வணிகனின் மகனாவான்.
இவர்களுக்கிடையான திருமணம் வாழ்வு அதனிடையே மாதவி என்ற நடனமாதுவுடன் கோவலின் வாழ்வு என இவர்களிக்கிடையேயான வாழ்வியல் இந்த காப்பியத்தில் நீண்டிருக்கின்றன.
பாண்டிய மன்னன் மற்றும் கோப்பெருந்தேவி என பலவகையான பாத்திரங்களை உள்ளடக்கிய காப்பியமாக இது திகழ்கின்றது.
தத்துவங்கள்
இந்த காப்பியம் துறவியாக இருந்த இளங்கோவடிகளால் இயற்றப்பட்மையால் வாழ்வின் அனைத்து விழுமியங்களும் தத்துவங்களும் இங்கே புலப்படுகின்றன அதாவது
“அரசியல் பிழைத்தோர்க்கும் அறம் கூற்றாவதூஉம்
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவது
ஊழ்வினை உறுத்து வந்தூட்டும்”
என்பது சிலப்பதிகாரம் கூறுகின்ற வாழ்க்கை தத்துவத்தில் மிகவும் சிறந்ததாகும் வாழ்வில் மக்கள் எவ்வாறு வாழவேண்டுமென அழகாக இந்த காப்பியம் நன்கு எடுத்து காட்டுகிறது.
முடிவுரை
கண்ணகி தனது கற்பு நெறியில் வழுவாமல் நின்றதனால் அவளது கற்பு தீயினால் மதுரையே எரிந்தது என்பது வரலாறு இதனால் தான் சேர மன்னன் செங்குட்டுவன் கண்ணகிக்கு கோயில் எழுப்பி கண்ணகியின் பெருமையை உலகுக்கு காட்டினான்.
பின் நாளில் கண்ணகி பத்தினி தெய்வமாகவும் நாட்டார் பெண் தெய்வமாக இன்று வழிபடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாமும் சிலப்பதிகாரம் எனும் காப்பியத்தை படித்து வாழ்வில் நல்ல வண்ணம் வாழ்வோமாக.
You May Also Like :