இந்த பதிவில் நல்ல ஊட்ட சத்துக்கள் நிறைந்த உணவான “கூகை கிழங்கு பயன்கள்” பற்றி பார்க்கலாம்.
கூகைக் கிழங்கு மலைப் பகுதிகளிலும், மலை அடிவாரங்களிலும் மழைக் காலங்களிலும் தானே வளரும் செடி இனத்தைச் சேர்ந்தது ஆகும். இதைக் கிழங்காகப் பயிரிட்டும் வருகின்றனர்.
வெள்ளை நிறமுடைய இதற்கு அர்ரூட் கிழங்கு, மாக்கிழங்கு, கூகைக் கிழங்கு என்ற பெயர்களும் உண்டு. கிழங்கிலிருந்து தயாரிக்கப்படுகிறது. மண்ணுக்கு அடியில் விளையும் இக்கிழங்கில் மருத்துவப் பயன்கள் பல உண்டு.
கூகை கிழங்கு பயன்கள் (arrowroot benefits in tamil)
1.உணவை ஜீரணிக்கச் செய்கின்றது.
2. சிறுநீர் நோய்கள் தீர்க்கும். சிறுநீர்க் கோளாறுகளைப் போக்க இந்த மாவை கஞ்சி போல காய்ச்சிக் குடிக்கலாம். இதனால் சிறுநீர் தாராளமாக பிரியும். சிறுநீர் தொடர்புடைய நோய்களும் தீரும்.
3. உடல் சூட்டைக் குணமாக்கும். உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் மூலச்சூடு இருந்தாலும், இதனால் சரியாகும்.
4. இருமல், ஜுரம், நீர் வேட்கை போன்றவற்றைக் குணமாக்கும்.
5. உடலுக்கு தேவையான வலிமையைப் பெற்றுத் தரும்.
6. வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்தும். வயிற்றுப் போக்கு அதிகமாக இருப்பவர்கள் இந்த மாவினை கஞ்சிபோல காய்ச்சி குடிக்கலாம். பேதி, சீதபேதி ஆகும் நிலையில் இந்த மாவை கஞ்சி காய்ச்சிக் குடிக்க குணமாகும்.
7. இதன் கிழங்குகள் அதிகம் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றது. ஆரோக்கியம் கிடைக்கும் பல நோயாளிகளுக்கு நல்ல ஆகாரமாக பயன்படுகின்றது.
8. கூகை நீற்றினால் காசநோய் மாந்தம் போன்றன குணமாகின்றன.
9. பிஸ்கட், கேக் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றது. முகப்பவுடர், ஒட்டும் பசை, பிசின் தயாரிப்பு போன்றவற்றிலும் பயன்படுத்தப்படுகின்றது.
10. பால் புளியுடன் சேர்த்த கூகை கிழங்கு பொடி, மஞ்சள் காமாலைக்கு மருந்தாகப் பயன்படுகின்றது. மஞ்சள் காமாலையை குணப்படுத்த ஆதிவாசிகள் இதனை பெரிதும் பயன்படுத்துகின்றனர்.
11. ஆயுர்வேத மருந்துகளான சென்ட்ராஸ், அஸ்வகந்தா மருந்தில் சேர்க்கப்படுகின்றது.
12. நோய் குணமானவர்கள் மற்றும் ஓய்வெடுக்கும் நோயாளிகளுக்கு நல்ல ஊட்டச் சத்துள்ள உணவாகும்.
You May Also Like: |
---|
ஆவாரம் இலை பயன்கள் |
கொய்யா இலையின் பயன்கள் |