தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு நிரப்பப்பட்டு வருகின்றன.
சில பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு இன்றியும் சில தேர்வுகளுக்கு நேர்முகத் தேர்வுகளுடனும் குரூப் 2 தேர்வு நடத்தப்படுகிறது. இந்த இரண்டு தேர்வுகளுக்கும் தனித் தனியே தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
அரசுத் துறைகளில் அதிகாரி பதவிகளுக்காக நடத்தப்படும் குரூப் 2 தேர்வை பொறுத்தவரை நேர்காணல் உள்ள தேர்வு, நேர்காணல் அற்ற தேர்வு என இரு வகையான தேர்வுகள் உண்டு.
நேர்முகத் தேர்வு கொண்ட குரூப் 2 தேர்வின் கீழ் நகராட்சி ஆணையர், துணை வணிகவரி அலுவலகர், சார் பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவிதொழிலாளர் அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்,
தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவுச் சங்கங்களின் முதல்நிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூர் செயல் அலுவலர் உள்ளிட்ட பதவிகள் நிரப்பப்படுவதனைக் காண முடியும்.
நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளில் அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளர், நேர்முக எழுத்தாளர், தலைமைச் செயலகம் மற்றும் TNPSCயில் தனிப்பட்ட எழுத்தாளர் போன்ற பணியிடங்கள் நிரப்பப்படுவதனையும் காணமுடியும்.
Table of Contents
குரூப் 2 தேர்வு என்றால் என்ன
தமிழ்நாட்டு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் மேற்கொள்ளப்படும் ஒரு வகைத் தகுதித் தேர்வே குரூப் 2 தேர்வாகும்.
தகுதிகள்
குரூப் 2 தேர்வை எழுத விரும்புவோர், ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். எனினும் ஒரு சில பதவிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பினை முடித்திருக்க வேண்டும்.
கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம்.
முதல்நிலை தேர்வு, இறுதித் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானோர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்வில் பங்கேற்பதற்கான குறைந்தபட்ச வயது 18 ஆகும்.
குரூப் 2 தேர்வில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள்
தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் நேர்மறையாக அல்லது எதிர்மறையாகக் கேட்கப்பட்டதா என நன்கு கவனமாக படித்த பின் பதில் அளிக்க வேண்டும்.
தமிழக அரசின் சமச்சீர் கல்வி புத்தகத்தின் அறிவியல், சமூக அறிவியல், கணிதம் என 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள புத்தகங்களை ஆகக்குறைந்தது படிக்க வேண்டும்.
மொழிப்பாடத்தில் தமிழ் அல்லது ஆங்கிலம் என 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையும் நன்கு படித்தாலே 70 சதவீத கேள்விகளுக்கு பதில் அளித்துவிடலாம்.
+1, +2 வகுப்பு வரலாறு, அரசியல், பொருளாதாரம், புவியியல் மற்றும் அறிவியல் சார்ந்த பாடங்களிலிருந்தும் +1 மற்றும் +2 மொழிப்பாடங்களிலிருந்தும் கேள்விகள் 20 சதவீதம் கேட்கப்படும். மீதமுள்ள 10 சதவீத கேள்விகள் மட்டுமே வெளியிலிருந்து கேட்கப்படும். எனவே பள்ளி நூல்களைப் படித்தாலே சித்தி பெற போதுமானதாகும்.
குறிப்பிட்ட நேரத்துக்கு 1 மணி நேரத்துக்கு முன்பாகவே தேர்வு நடக்கும் இடத்துக்குச் சென்றுவிடுவது நல்லது. முன்பே தேர்வு நடக்கும் அறையைத் தெரிந்து வைத்துக்கொள்வது கடைசி நேர படபடப்பைக் குறைக்கும். ஹால் டிக்கெட்டை மறக்காமல் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
Read more: தேர்ச்சி என்றால் என்ன