இந்த பதிவில் “காசநோய் விழிப்புணர்வு கட்டுரை” பதிவை காணலாம்.
ஒரு காலத்தில் உலகமே அச்சம் கொண்ட உயிர் கொல்லி நோயாக இருந்த இந்த நோயானது இன்றுவரை உலகை அச்சுறுத்திக்கொண்டே இருக்கின்றது.
Table of Contents
காசநோய் விழிப்புணர்வு கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- காசநோய் ஏற்படக் காரணங்கள்
- நோய்க்கான அறிகுறிகள்
- காசநோய்த் தடுப்பு முறை
- இயற்கை மருத்துவம்
- முடிவுரை
முன்னுரை
உலகில் பல உயிர்கொல்லி நோய்கள் காலத்துக்குக் காலம் தோன்றி மனித குலத்தைப் பழிவாங்கிக் கொண்டே இருக்கின்றன. அவ்வகையில் ஒரு காலத்தில் உயிர் கொல்லி நோயாக இருந்த நோய் தான் காசநோய் ஆகும்.
இன்றும் கூட அச்சுறுத்தக்கூடிய நோயாகவே உள்ளது. இந்தியாவில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாகும். இந்நோயானது என்புருக்கு நோய் என்றும் அழைக்கப்படுகின்றது.
பொதுவாக இது TB என அழைக்கப்படுகின்றது. உலக சுகாதார அமைப்பு 1996 ஆம் ஆண்டில் இருந்து காசநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாளாக மார்ச் 24ஆம் திகதியை அறிவித்தது.
இந்நோய் பற்றிய விழிப்புணர்வு என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை இக்கட்டுரையில் காண்போம்.
காசநோய் ஏற்படக் காரணங்கள்
இந்நோயானது காற்றின் மூலமாகவே பரவுகின்றது. இருமும் போதும்⸴ சளியை வெளியே துப்பும் போதும் காற்றின் ஊடாகப் பரவுகின்றது. ஒரு சிறிய காற்று துளியே வேறு ஒருவருக்கு ஒரு புதிய தொற்றை ஏற்படுத்த போதுமானது.
- நோயுள்ள ஒருவருடன் தொடர்ந்து அல்லது அதிகப்படியான பழக்கம் இருப்பவர்கள்
- காசநோய் அதிகமாக இருக்கும் இடத்தில் உள்ளவர்கள்
- நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள்
- காச நோயாளிகளுக்கு உதவும் மருத்துவர்கள்⸴ பணியாளர்கள்
போன்றோருக்கும் நோய் ஏற்பட அதிக வாய்ப்புண்டு.
நோய்க்கான அறிகுறிகள்
சாதாரண தடிமனைப் போன்றே காசநோயும் காற்றினால் தொற்றுதலை ஏற்படுத்திப் பரவுகின்றது.
- காசநோய் தொற்றுக்குட்பட்ட ஒருவருக்குத் தொடர் இருமல் ஏற்படும்.
- சளியுடன் ரத்தம் வரும்.
- காய்ச்சல் ஏற்படும்.
- நெஞ்சு வலி⸴ இரவில் குளிர் நடுக்கம்
- இரவில் அதிக வியர்வை ஆகியனவும் ஏற்படும்.
இவ் அறிகுறி உள்ளவர்கள் சளியைப் பரிசோதித்துப் பார்ப்பது சிறந்ததாகும்.
காசநோய்த் தடுப்பு முறை
காசநோயாளிகள் காற்றோட்டம் உள்ள அறையில் இருப்பது நன்று. காசநோயாளிகள் பயன்படுத்தும் பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்த்தல் வேண்டும்.
இந்நோயை முழுமையாக தடுப்பதற்கு ஊசி எதுவும் இல்லை. ஆனால் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பிசிஜி தடுப்பூசி போட வேண்டும்.
இயற்கை மருத்துவம்
இயற்கை மருத்துவமே நம் முன்னோர்கள் நமக்குத் தந்த ஆரோக்கிய வரப்பிரசாதமாகும். இத்தகைய இயற்கை மருத்துவத்தின் மூலம் காச நோயைக் கட்டுப்படுத்தலாம்.
ஆவாரம்பூ⸴ சுக்குத் துண்டு⸴ ஏலக்காய்⸴ இவைகளை மருந்தாக மாற்றி பருகி வந்தால் காச நோய் குணமாகும்.
ஆவாரம் பூ, ஏலக்காய், சுக்குத் துண்டு இவை அனைத்தையும் இடித்து கொதித்த நீரில் சேர்த்து பருகுதல் வேண்டும்.
முடிவுரை
காச நோயைத் தடுக்கும் வகையிலான தடுப்பூசிகளை கண்டு பிடிக்கும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இது மக்கள் பாவனைக்கு வரும் வரை நாம் அனைவரும் விழிப்பாக இருத்தல் வேண்டும்.
இந்தியாவில் 22 லட்சம் பேர் ஆண்டு தோறும் இந்நோயால் பாதிப்படைகின்றனர். எனவே இந்நிலை மாற வேண்டும். அனைவரும் விழிப்போடு இருப்போம்! காச நோயை ஒழிப்போம்!
You May Also Like: