எனது கனவு பள்ளி கட்டுரை

Enathu Kanavu Palli Katturai In Tamil

எனது கனவு பள்ளி கட்டுரை (Enathu Kanavu Palli Katturai In Tamil) : செல்வங்களில் அழியாத செல்வமான கல்வி செல்வதை கொடுக்கும் இடமான பள்ளி பற்றிய என் கனவினை கட்டுரையாக காணலாம்.

பள்ளிக்கூடங்கள் ஒரு நாட்டிற்கு மிக அவசியம். இங்கிருந்து தான் ஒரு நாட்டின் வளர்ச்சியை தீர்மானிக்க முடியும்.

அது மட்டுமின்றி ஒரு மனிதனை மனிதனாக உருவாக்கவும் கல்வி மிக அவசியம்.

எனது கனவு பள்ளி கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. பள்ளிகளின் கட்டமைப்பு
  3. பள்ளிகளும் நாளைய சமுதாயமும்
  4. ஆசிரியர்களின் பங்கு
  5. தாய்மொழி கல்வி
  6. முடிவுரை

முன்னுரை

“எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்” அதாவது எமது அறிவு கண்களை திறந்த கடவுள்கள் வாழுமிடமே பாடசாலைகளாகும். ஒவ்வொரு மனிதனுடைய வாழ்விலும் பாடசாலைகள் மறக்க முடியாதவையாகும்.

பெற்றோர்களிடம் இருந்து பாடசாலைகளுக்கு செல்லும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் வேண்டிய கல்வியறிவையும் பழக்கவழக்கங்களையும் ஒழுக்கங்களையும் நட்பையும் சகோதரத்தையும் ஒருங்கே போதிக்கும் இடமே பாடசாலைகளாகும்.

வெறுமனே புத்தக அறிவை மட்டும் புகட்டாது தலைமைத்துவம் விளையாட்டு இணைபாடவிதான செயற்பாடுகளை வளர்ப்பதுடன் நல்ல பழக்கவழக்கங்கள் சமூக பற்று சூழல் அக்கறை போன்ற விடயங்களையும் மாணவர்களை சமூகத்தின் சவால்களை சமாளிக்ககூடிய பிரஜைகளாக மாற்றுவதே எனது கனவு பள்ளியாகும்.

பள்ளிகளின் அமைப்பு

தரமான கல்வியினையும் மகிழ்ச்சியான சூழலையும் சிறந்த வளவாய்ப்புக்களையும் பெறவேண்டும் என்பதே ஒவ்வொரு மாணவர்களின் அடிப்படையான அபிலாசையாகும்.

ஆனால் வசதி குறைந்த பின் தங்கிய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் கல்விகற்கின்ற மாணவர்களுக்கு தரமான பள்ளிகள் எட்டாக் கனியாகவே உள்ளன.

ஒரு தரமான பள்ளி சிறந்த வசதியான வகுப்பறைகள், பௌதீக வளங்கள், தளபாடவசதிகள், தொழில்நுட்டப விஞ்ஞான ஆய்வு கூடங்கள், விளையாட்டு மைதான வசதிகள் மற்றும் தேர்ச்சி பெற்ற சிறந்த ஆசிரியர்கள் போன்றனவற்றை கொண்டவையாக காணப்படும்.

பள்ளிகளும் நாளைய சமுதாயமும்

“குழந்தைகளே நாட்டின் நாளைய எதிர்காலம்” என்று Dr Dj Abdul Kalam குறிப்பிடுகிறார். அவர் குழந்தைகளுக்க கல்வி கற்பிப்பதையே தனக்கு பிடித்த விடயமாக கொண்டு இந்தியாவின் இளம் சமுதாயத்தை பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் உள்ள வகுப்பறைகளிலுமே தனது கனவு இந்தியா உள்ளது என்றார்.

அந்தவகையில் ஒரு நல்ல மனிதன் அவனது பள்ளிக்காலத்திலேயே நல்வழிப்படுத்த பட வேண்டும் இதனையே மூதாதையர்கள் “ஜந்தில் வளையாதது ஜம்பதில் வளையாது” என்று குறிப்பிடுவார்கள்.

அந்தவகையில் நாட்டின் வளமான எதிர்காலமானது பள்ளிகளிலேயே தங்கியுள்ளது. அந்த வகையில் சிறந்த மாணவர்களை சமூகத்திற்கு வழங்கும் பள்ளியே எனது கனவாகும்.

ஆசிரியர்களின் பங்கு

ஒவ்வொரு மாணவர்களின் வெற்றிக்கு ஏணியாகவுத் கரைசேர்க்கும் படகாககவும் நம் வாழ்க்கையின் வழிகாட்டியாக ஆசிரியர்கள் இருப்பார்கள் மாணவர்களை பாரபட்சமின்றி கல்வியை போதிக்கும் ஆசிரியர்களின் பணி போற்றுதலுக்குரியது.

தம்மை தேடி வருகின்ற மாணவர்களை பெரிய உயரங்களை தொட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் உடையவர்களாக எனது கனவு பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.

மாணவர்கள் தவறு விடுகின்ற போது அவர்களை கடிந்து அவர்களை நல்வழிப்படுத்துவதோடு மாணவர்களுக்கு கல்வியை தவிர அவர்களுடைய எதிர்கால தொழில் திறன்களையும் பல்வேறு துறைகளிலும் மாணவர்களால் சாதிக்க முடியும் என்ற மன தைரியத்தை மாணவர்களுக்கு வழங்குவது எனது கனவு ஆசிரியர்களின் பங்காகும்.

தாய்மொழி கல்வி

இன்றைக்கு எமது கல்வி சமுதாயத்தில் மாணவர்கள் கல்வி துறையில் இருந்து பெரிதும் எதிர்கொள்ளும் பெரிய பிரச்சனையாக பிறமொழிமூலமான கல்வியினை பெருமையாக கருதுகின்ற சமுதாயம் உருவாகியுள்ளது. ஆங்கில மொழி மூலமான கல்வியை பெற அதிகமான மாணவர்கள் திணிக்கபடுகின்றனர்.

இதனால் ஆங்கிலத்தை சரியாக கற்று கொள்ள முடியாத மாணவர்கள் பாதிப்படைகின்றனர்.

ஆங்கிலம் என்பது மொழி அறிவல்ல ஆகவே எமது தாய்மொழியான தமிழில் கல்வி கற்பதோடு ஆங்கிலத்தையும் முறையாக கற்றுகொடுப்பதே எனது கனவு பள்ளியாகும்.

முடிவுரை

கண்ணுடையர் என்போர் கற்றோர் கல்லாதோர்
முகத்திரண்டு புண்ணுடையோர்” என்கிறார் தெய்வபாவலர் அதற்கிணங்க கற்பதன் மூலம் நல்ல பிரஜைகளாக மாறுவோம்.

வாழ்க்கைக்கு தேவையான விடயங்களை நமக்கு கற்பிக்கும் நம்மை முழமையான மனிதர்களாக மாற்றும் பாடசாலைகளே கனவாகும்.

இதனையே “வாழ கல்மின்” என்ற பொன்மொழி உணர்த்துகிறது. ஆகவே கல்வியினால் எமது சமுதாயத்தை வளர செய்வோம்.

இந்த "எனது கனவு பள்ளி கட்டுரை" பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து பயன் பெற செய்யுங்கள்.

You May Also Like :

கொரோனா கால கதா நாயகர்கள் கட்டுரை

எனது கனவு நூலகம் கட்டுரை