உற்பத்தி என்றால் என்ன

உற்பத்தி

மனித வரலாற்றில் இருந்து பார்க்கும்போது மனித வாழ்வின் முன்னேற்றத்திற்கு பொருளுற்பத்தி இன்றியமையாததாகும்.

பொருள் உற்பத்தி முறையானது வரலாற்று நெடுகிலும் ஒரே மாதிரியாக இருக்கவில்லை. அதில் ஒவ்வொரு காலப்பகுதியிலும் பொருள் உற்பத்தி செய்கின்ற கருவிகளின் வளர்ச்சிக்கேற்ப மாறுதலடைந்து கொண்டிருக்கின்றது.

ஆரம்ப காலங்களில் மனிதன் காடுகளில் கிடைக்கக் கூடிய பழங்களையும், விலங்குகளையும் வேட்டையாடியும் தமது உணவுத் தேவையை பூர்த்தி செய்து வந்ததால் உற்பத்தியென்பது தேவைப்படவில்லை.

இரண்டு கற்களை உரசியதன் மூலமாய் நெருப்பை கண்டுபிடித்த மனிதன் அதனை பயன்படுத்தி காடுகளை விளை நிலங்களாகவும், மேய்ச்சல் நிலங்களாகவும் மாற்றி தனக்குத் தேவையான உணவை தானே உற்பத்தி செய்ய ஆரம்பித்தான்.

உற்பத்தி என்றால் என்ன

உற்பத்தி என்பது நுகர்வோரின் பயன்பாட்டுக்காக மூலப் பொருட்களையும், மூலப் பொருட்கள் அல்லாதவற்றையும் ஒன்றிணைத்து ஒரு பொருளை உருவாக்கும் செயலே உற்பத்தி ஆகும்.

உற்பத்தியின் ஆரம்பகாலம்

பெரும் காடுகளில் வாழ்ந்து கொண்டிருந்த மனிதர்கள் சமவெளிகளில் வாழத் தொடங்கினர்.

இதனால் விலங்குகளைப் பழக்கப்படுத்திக் கொண்டு தமக்கு தேவையான இறைச்சி, பால், தோல் போன்ற பொருட்களை விலங்குகளிடமிருந்து பெற ஆரம்பித்தனர்.

நாடோடி சமூகமாக வாழ்ந்த மனிதர்கள் முதன் முறையாக ஒரு சமூகமாய் கூட்டாக வாழ ஆரம்பித்தனர். இங்கிருந்து தான் உற்பத்தி கருவிகளுக்கான தேவைகளும் எழுந்தன.

விலங்குகளை இறைச்சிக்காக மட்டுமன்றி விவசாயத்திலும் ஈடுபடுத்த ஆரம்பித்தனர். அந்த விவசாயத்தை வலிமையாக்குவதற்காக உழைப்பு கருவிகளை (ஏர், கலப்பை, அரிவாள், கத்தி, மண்வெட்டி) உற்பத்தி செய்ய ஆரம்பித்தனர். இதுவே கைவினைத் தொழிற்துறையின் ஆரம்பமாகும்.

கைவினைத் தொழில் துறையில் சிறிய தொழில் கூடங்களை ஆரம்பித்தனர். தன் கூட்டத்தை தாக்கவரும் வேறு கூட்டத்திடமிருந்து தன்னுடைய கூட்டத்தைக் காப்பதற்கு தேவையான ஆயுதங்களை தொழிற்கூடங்களில் உருவாக்க ஆரம்பித்தனர்.

இங்கு பொருள் உற்பத்தி என்பது குறைந்த எண்ணிக்கையின் ஊடாக குறைந்த வேகத்திலேயே நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாகப் பட்டறைத் தொழில் துறையில் சேர்ந்து உற்பத்தியில் ஈடுபட்டனர். உழைப்பு பிரிவினை கோட்பாடும் இங்குதான் முதன்முதலாக அமலாக்கப்பட்டது.

ஒவ்வொரு தொழிலாளியும் ஒரு பொருளின் ஒரு பகுதியை மட்டும் செய்தனர். அது அடுத்த தொழிலாளர் கைகளில் சென்ற பின்புதான் அந்தப் பொருள் முழுமை பெறுகின்றது.

மனித குல வரலாற்றில் மிக முக்கியமான கண்டுபிடிப்பாக சக்கரதெருவிற்கு பின்பு அறிவியல் கண்டுபிடிப்பான நீராவி இயந்திரங்களும், ஏனைய பல இயந்திரங்களாலும் பட்டறைத்துறை நவீன தொழில் துறையாக முன்னேற்றமடைந்தது. உற்பத்தித் துறையும் விரிவடைந்தது. இயந்திர சாதனங்களின் மூலம் பெரும் உற்பத்தி செய்யப்பட்டது.

தொழிலாளர்களின் வேலை என்பதை இயந்திரங்களின் செயற்பாட்டை மேற்பார்வை செய்வது மற்றும் சரிசெய்தல் என்பதற்காக அமைந்தது.

மேலும் படிநிலை அடுக்குகளாக உழைப்புப் பிரிவு மிகவும் நுட்பமாக ஒழுங்கமைக்கப்பட்டு உற்பத்தித் திறன் கூடுதலாக இருக்கும். இதுவே முதலாளித்துவ உற்பத்தி திறன் முறையாகும்.

அதாவது பெரிய தொழிற்சாலைகள் முதலாளிகளின் உடமையாக இருக்கும். உற்பத்திக் கருவிகள் உடமையற்ற பல கூலித்தொழிலாளர்கள் உழைப்பைச் செலுத்தி பொருட்களை உற்பத்தி செய்தனர்.

பின் கூலித்தொழிலாளர்கள் தான்பெற்ற கூலியை சந்தையில் பொருட்களின் நுகர்வுக்கும், கடன், வீட்டு வாடகை மற்றும் இதர செலவினங்களுக்காக முதலாளித்துவ வர்க்கத்தினரிடமே அதனை செலவழிக்கின்றனர்.

ஆக முதலாளித்துவ உற்பத்தி முறை என்பது முதலாளிகளின் உடமையாக உற்பத்தி கருவிகளுக்கும், உடமையற்ற தொழிலாளியின் கூலி உழைப்பிற்கும் சொத்துரிமை காரணமாக முதலாளிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் மேற்கொள்ளும் சமூகநிலைகளுக்குமான உறவே ஆகும்.

Read more: திறனாய்வு என்றால் என்ன

தமிழில் பிழையின்றி எழுதுவது எப்படி