இந்த பதிவில் மரபுத்தொடர்கள் என்றால் என்ன மற்றும் அதன் பொருள் என்பவற்றை விரிவாக பார்க்கலாம்.
- மரபுத்தொடர்கள்
- Marabu Thodargal Tamil
Table of Contents
மரபுத்தொடர் என்றால் என்ன
ஒரு சொல் அல்லது சொற்தொடர் அதன் நேரான பொருளைக் உணர்த்தாமல் வழி வழியாக வழங்கி வரும் பொருளை உணர்த்துவது மரபுத்தொடர் எனப்படும்.
அதாவது ஒரு சொல் அல்லது சொற்தொடர் அதன் நேரான பொருளைக் குறிக்காமல் வேறு பொருளை குறிக்க மரபாகத் தொன்று தொட்டு வழக்கில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒன்றாகும்.
இந்த மரபுத்தொடர்கள் கருத்தழகும் நடையழகும் கொண்டவை.
மரபுத்தொடர்கள்
மரபுத்தொடர்கள் | பொருள் |
---|---|
ஆழம் பார்த்தல் | ஒருவரது அறிவு செல்வம் முதலியவற்றை அளவிடுவது |
ஆறப்போடுதல் | பிற்போடுதல், காலம் தாழ்த்துதல் |
கண் திறத்தல் | அறிவு உண்டாதல் |
கங்கணங்கட்டுதல் | ஒரு செயலை முடிக்க முனைந்து நிற்றல் |
கதை வளர்த்தல் | பேச்சை விரித்தல் |
கை தூக்குதல் | துன்பத்திலிருந்து காப்பாற்றுதல் |
தலை கவிழ்தல் | வெட்கமடைதல் |
தட்டிக் கழித்தல் | சாக்கு போக்கு சொல்லுதல் |
தாளம் போடுதல் | பிறரை மகிழ்விக்க அவர் கருத்துப்படி நடத்தல் |
நாக்கு புரளுதல் | சொன்ன சொல் தவறுதல் |
நட்டாற்றில் விடல் | ஆபத்து வேளையில் கைவிடல் |
பூசி மெழுகுதல் | குற்றத்தை மறைக்கப் பார்த்தல் |
முன்னுக்கு வருதல் | உயர்ச்சி அடைதல் |
வாயூறுதல் | ஆசைப்படுத்தல் |
தட்டிக்கொடுத்தல் | உற்சாகப்படுத்துதல் |
கானல் நீர் | கிடைக்காத ஒன்று |
கரையேறுதல் | துன்பத்திலிருந்து மீளுதல் |
பஞ்சாகப் பறத்தல் | அலைந்து திரிதல் |
அவசரக் குடுக்கை | ஆராயாமல் செயல்படுதல், பதற்றக்காரன் |
ஆகாயத் தாமரை | இல்லாத ஒன்று |
பித்தலாட்டம் | ஏமாற்று வேலை |
முதலைக் கண்ணீர் | பொய் அழுகை |
குரங்குப் பிடி | விடாப்பிடி |
இமாலயத் தவறு | பெரிய தவறு |
அடியடியாக | தலைமுறை தலைமுறையாக |
அக்கரைப் பச்சை | பொய்த் தோற்றம் |
அடங்காப் பிடாரி | எவர்க்கும் அடங்காதவன் (ள்) |
அடாபிடி | கொடுஞ்செயல் |
அடிதடி, அடிபிடி | சண்டை |
அண்டப் புரட்டன் | பெருந்தீயன் |
அரைகுறை | முற்றுப்பெறாமை |
அரை மனிதன் | மதிப்புக் குறைந்தவன் |
அல்லும் பகலும் | இரவும் பகலும் |
அளவளாவுதல் | கலந்து பேசுதல் |
அள்ளியிறைத்தல் | அளவுக்கு மிஞ்சி செலவிடுதல் |
அறக்கப்பறக்க | விரைந்து செயல்படுதல் |
அறிமுகம் | தெரிந்த முகம் |
அறை கூவுதல் | போருக்கு அழைத்தல் |
இடங்கெட்ட பாவி | சீரழிந்தவன் |
இடை விடாமல் | எப்போதும் |
இலைமறைகாய் | மறைபொருள் |
எள்ளளவும் | சிறிதளவும் |
ஏட்டுக்குப்போட்டி | விதண்டாவாதம் |
ஏட்டுச் சுரைக்காய் | அனுபவத்தோடு கூடாத கல்வியறிவு |
ஏட்டுப் படிப்பு | உலகப் பழக்கமில்லாத கல்வியறிவு |
ஒரு காலில் நிற்றல் | விடாப் பிடியாய் நிற்றல் |
ஒரு கை பார்த்தல் | வெல்ல முயலுதல் |
ஓட்டை கை | பெருஞ் செலவாளி |
கண்மூடித்தனம் | கவனமின்மை |
செவி சாய்த்தல் | உடன்படுத்தல், இணங்குதல் |
கண் வளர்த்தல் | தூங்குதல் |
கயிறு திரிதல் | பொய் செய்தியை உண்டாக்கி விடுதல் |
கருவறுதல் | நிர் மூலமாக்குதல் |
கரை கண்டவன் | நன்கு பழகி அறிந்தவன் |
கரைத்துக் குடித்தல் | முற்றும் கற்றறிதல் |
குழையடித்தல் | ஒருவரை வசப்படுதல் |
கை கொடுத்தல் | உதவி செய்தல் |
திண்டாட்டம் | மனக்கலக்கம் |
தோள் கொடுத்தல் | உதவி செய்தல் |
எள்ளி நகையாடுத்தல் | இகழ்ந்து பேசுதல், ஏளனம் செய்தல் |
நாக்கு நீளுதல் | அளவு கடந்து பேசுதல் |
பருவம் பார்த்தல் | தக்க சமயம் பார்த்தல் |
வெட்டிப் பேச்சு | வீண் பேச்சு |
மரபுத்தொடர் வாக்கியங்கள்
- அந்த செல்வந்தர் ஏழைக் குடும்பத்தை கைதூக்கி விட்டார்.
- கண்ணன் தனது நண்பனுடைய செயலைக் கண்டு தலை கவிழ்ந்தான்.
- அவர் தனது குற்றத்தை பூசி மெழுகினார்.
- ஆசிரியர் மாணவர்களை தட்டிக் கொடுத்தார்.
- பாரதிதாசன் கவிதை உலகில் கொடிகட்டி பறந்தார்.
- நாங்கள் வாழையடி வாழையாக உழவுத்தொழில் செய்து வருகிறோம்.
- அவனுக்கு நடைமுறை அறிவு எதுவும் கிடையாது. அவன் ஒரு புத்தகப்பூச்சி.
- கண்ணன் வகுப்பறையில் முதலைக்கண்ணீர் வடித்தான்.
- உழைப்பை மதிக்காதவன் சாப்பாட்டுக்கு தாளம் போடுவான்.
- என் கனவு கானல் நீராகவே இருக்கின்றது.
You May Also Like :