துதி என்றால் என்ன

thuthi meaning in tamil

இந்த பதிவில் துதி என்றால் என்ன என்பது பற்றி விரிவாக காணலாம்.

துதி என்றால் என்ன

ஒருவரின் தன்மையை அவர் நமக்கு செய்தவற்றை சொல்லி புகழ்வது துதி ஆகும். இது ஒருவரால் இன்னொருவருக்கு பாடப்படுகிறது.

துதி எனும் சொல் பெயர்ச்சொல்லாக, வினைச்சொல்லாக பயன்படுத்தப்படுகிறது.

துதி பெயர்ச்சொல்லாக பயன்படும் சந்தர்ப்பங்கள்

துதி எனும் சொல் பெயர்ச்சொல்லாக புகழ்ச்சி, போற்றுதல், கீர்த்தி, வாழ்த்துதல், வணங்குதல் என்று பொருள்படும்.

அத்துடன் ஒரு நிகழ்ச்சி, வழிபாடு, படைப்பு ஆகியவற்றின் தொடக்கத்தில் இறைவன் அருளை வேண்டிப் பாடும் பாடலிலும் பெயர்ச்சொல்லாக அமைகிறது. உதாரணமாக கலைமகளுக்கும் விநாயகருக்கும் முதலில் துதி செய்வோம்.

துதி வினைச்சொல்லாக அமையும் சந்தர்ப்பங்கள்

தமிழ் வேதாகமத்தில் துதி, துதியுங்கள், துதிப்பேன், துதித்து போன்றவை மொத்தம் 252 முறை வருகிறது. அவை மூல பாஷையில் வரும் போது வேறு சில வார்த்தைகளை கொண்டு கொஞ்சம் ஆழமாக உணர்த்தப்பட்டுள்ளது. துதி என்ற சொல் தமிழ் வேதாகமத்தில் Glory, Praising, Bless, Pray, thanks என்றும் அர்த்த வித்தியாசங்களுடன் காணப்படுகிறது.

துதி எனும் சொல் துதிக்க, துதித்து போன்ற வினைச்சொல்லாக வருகிறது. அதாவது ஒரு நிகழ்ச்சி, வழிபாடு, படைப்பு ஆகியவற்றின் தொடக்கத்தில் இறைவன் அருளை வேண்டிப் பாடுதல், வழிபடுதல் ஆகும்.

அக்காலத்தில் புலவர்கள் கலைமகளைத் துதித்து ஒரு பாடல் இயற்றுவது வழக்கம். கர்த்தரின் மகிமையைத் துதித்து ஜெபம் செய்தார். இவையெல்லாம் துதி வினைச்சொல்லாக அமையும் சந்தர்ப்பங்களாகும்.

You May Also Like:
துதி வேறு சொல்
காபந்து அரசு என்றால் என்ன