செவ்வியல் நடனம் என்றால் என்ன

sevviyal nadanam

ஒவ்வொரு நாட்டிலும் கிராமங்களிலும் தங்களை அறிமுகப்படுத்தவும் உறுதிப்படுத்தவும் வாழ்க்கை முறைறையை பிரதிபலிக்கவும் தேவைப்படுவது கலைகளே என்றால் அதுமிகையல்ல.

நடனத்துக்குரிய பேசு பொருள் ஒரு இறைவனாகவும் பாடல் இறைவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, ஒரு இறைவியோ இறைவன் மேற் காமுற்ற ஒரு பெண்ணோ ஏங்குவதாகப் பல இடங்களிலும் அமைவது தென்னிந்தியச் செவ்வியல் ஆடல் பாடற் கலைகளின் முக்கியமான ஒரு பண்பாக உள்ளது.

இது பிற பண்பாடுகளிலிருந்து இந்திய நடன மரபை அதாவது சிறப்பாகத் தென்னிந்திய நடன மரபை வேறுபடுத்துவதாகும்.

சங்கீத நாடக அகாடமி தற்போது எட்டு இந்திய பாரம்பரிய நடன பாணிகளில் பாரம்பரிய அந்தஸ்தை அளிக்கிறது.

  • பரதநாட்டியம் (தமிழ்நாடு)
  • கதக் (வடக்கு, மேற்கு மற்றும் மத்திய இந்தியா)
  • கதகளி (கேரளம்)
  • குச்சிப்புடி (ஆந்திரா)
  • ஒடிசி (ஒடிசா)
  • மணிப்புரி (மணிப்பூர்)
  • மோகினியாட்டம் (கேரளா)
  • சத்ரியா (அசாம்)

இந்திய செவ்வியல் நடனங்கள்

பரதநாட்டியம்

இந்தியாவின் அனைத்து பாரம்பரிய நடனங்களும் இந்து கலைகள் மற்றும் மத நடைமுறைகளில் வேர்களைக் கொண்டுள்ளன. கிமு 1000க்கு முற்பட்ட, நடனமான பரதநாட்டியம் இந்திய செவ்வியல் நடனம் ஆகும்.

சதிராட்டம் என்றும், சதிர் என்றும், தாசியாட்டம் என்றும், கூத்து என்றும் கூறப்பட்ட ஆட்டம் பரதநாட்டியமாயிற்று.

மேலும் பரதநாட்டியமானது தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் ஒரு பாரம்பரிய நடனமாகும்.

இது தமிழ்நாட்டில் தோன்றியது. நாடகக் கலையாக மறுவடிவமைக்கப்பட்டு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பரவலாகக் காட்சிப்படுத்தப்படுகின்றது.

குச்சிபுடி

எட்டு இந்திய செவ்வியல் நடனங்களில் குச்சிபுடி ஒன்றாகும். குச்சிபுடி என்பது இந்தியாவின் ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தோன்றிய ஒரு நடன-நாடக நிகழ்த்துக்கலை. இது ஒரு நடனம் மட்டுமல்ல, நடனம், சைகைகள், பேச்சு மற்றும் பாடல் ஆகியவற்றின் சிறந்த கலவையாகும்.

ஒடிஸி

இது ஒடிசாவின் செவ்வியல் நடன வடிவம். இது இரண்டு முக்கிய தோரணைகளை உள்ளடக்கியது அதாவது திரிபங்கா மற்றும் சவுக் என்பனவாகும்.

கதகளி நடனம்

தமிழகத்தை அடுத்துள்ள கேரள நாட்டின் ஆடற்கலைகளாக கதகளியும் மோகின ஆட்டமும் உள்ளன. இதில் ஆண்கள் ஆடும் ஆட்டம் கதகளி என்றும் பெண்கள் ஆடும் ஆட்டம் மோகினி ஆட்டம் என்றும் அழைக்கப்படுகின்றது.

பாகவத மேளம்

பாகவத மேளா பழம் மரபு வழி வந்த ஒரு நாட்டிய நாடகமாகும். தமிழ்நாட்டின், குறிப்பாக தஞ்சாவூர் பகுதியில் நிகழ்த்தப்படும் ஒரு பாரம்பரிய இந்திய நடனமாகும்.

இது ஆந்திரப் பிரதேசத்தில் காணப்படும் குச்சிப்புடி என்ற பண்டைய பாரம்பரிய இந்திய நடனத்திலிருந்து பாகவத மேளா தோன்றியது. அதாவது, குச்சுப்பிடி நடனத்தின் பலகூறுகள் பாகவத மேள நாட்டிய நாடகத்தில் இடம் பெற்றுள்ளன.

பரத நாட்டியத்தில் காணப்படும் சப்தம், வர்ணம், பதம் என்னும் கூறுகள் குச்சுப்பிடியில் தெலுங்கில் அமைந்துள்ளன. இத்தகைய ஒற்றுமைக் கூறுகளான பாகவத மேள நாட்டிய நாடகம் ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு வந்துள்ளதாகக் கருதப்படுகின்றது.

மணிப்புரி

மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த, புகழ் பெற்ற செவ்வியல் நடனம் மணிப்புரி ஆகும். இது பலர் சேர்ந்து ஆடும் ஆடலாகும். இந்நடனம் தாண்டவம், இலாசியம் ஆகிய இரு கூறுகளையும் கொண்டு திகழ்கிறது. மணிப்புரி நடனத்திற்கு டோல்கி, குழல், மஞ்சிரா, (தாளம்) போன்ற வாத்தியங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

Read more: தமிழ்நாட்டின் பெருமைகள் கட்டுரை

தமிழர் பண்பாடும் கலாச்சாரமும் கட்டுரை