இந்த பதிவில் “கணையம் என்றால் என்ன” பற்றி விரிவாக காணலாம்.
Table of Contents
கணையம் என்றால் என்ன
கணையம் என்பது உடலின் உட்பகுதியில் காணப்படும் மிகப்பெரிய கலப்படச்சுரப்பி ஆகும். இது இரைப்பைக்கு கீழே சிறிது பின்புறமாக, முன்சிறுகுடலுக்கு இடதும் பக்கமாக கரட், முள்ளங்கி வடிவத்தில் ஊதாவும், மஞ்சளும் கலந்த நிறத்தில் தட்டையான ஓர் உறுப்பாக காணப்படுகிறது.
கணையத்தை முதன்முதலில் கண்டுபிடித்தது கிரேக்க நாட்டவர் ஆவார். அதனால் இதனை ‘Pancreas’ என கிரேக்க மொழியில் அழைக்கின்றனர்.
கணையத்தின் அமைப்பு முறை
கணையம் அதிகபட்சமாக 20 சென்டிமீட்டர் நீளமும் 100 கிராம் எடையை உடையதாகவும் காணப்படும். இது EXOCRINE மற்றும் ENDOCRINE எனும் இருபெரும் சுரப்பிகளிலானது. இது ஒரு கலப்படச்சுரப்பி (Dual Gland) ஆகும்.
இதில் நாளமுள்ள சுரப்பிகளும் நாளமில்லாத சுரப்பிகளும் உள்ளன. கணையத்தில் ‘லாங்கர்ஹான்ஸ் திட்டுகள்’ (Islets of Langerhans) எனும் சிறப்பு திசுக்கள் ஆங்காங்கே பரவிக் கிடக்கின்றன.
ஆரோக்கியமாக உள்ள ஒரு நபரிடம் 10 இலட்சம் திட்டுக்களும் ஒவ்வொரு திட்டுலும் 3000 தொடக்கம் 4000 வரை செல்களும் உள்ளன. இந்த செல்கள் ஆல்பா, பீட்டா, டெல்டா என்று மூன்று வகைப்படும்.
இவற்றில் பீட்டா செல்கள் இன்சுலினையும் (Insulin) , ஆல்பா செல்கள் குளுக்கோகனையும்(Glucagon), டெல்டா செல்கள் Somatostatin ஹார்மோனையும் சுரக்கின்றன.
இவை நாளமில்லாத சுரப்பிகள் என்பதனால், தாம் சுரக்கின்ற ஹார்மோன்களை ரத்தத்தில் நேரடியாகவே சேர்ந்து விடும் அமைப்பில் அமைந்துள்ளது.Tryspin, Chymotrypsin, Amylase, Lipase எனும் சுரப்பிகளும் கணையத்தில் காணப்படுகிறது.
கணையத்தின் தொழில்கள்
கணையத்தில் உள்ள இருபெரும் சுரப்பிகளுள் EXOCRINE சுரப்பியே 95 சதவீதம் காணப்படுகிறது. இது ஜீரணத்திற்கு தேவையான நொதியங்களை உற்பத்தி செய்கிறது. ENDOCRINE சுரப்பி 5 சதவீதம் பரவி காணப்படுகிறது.
இது Insulin, Glycogon, Somatostatin போன்ற ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. இவற்றின் மூலம் நாம் சாப்பிடக்கூடிய உணவை சமிபாடடையச் செய்ய தேவையான நொதியங்களை சுரந்து அனுப்பி உணவை சமிபாடடைய செய்வதை பிரதான தொழிலாக கொண்டுள்ளது.
அதாவது, கணைய நாளம் வழியாக டிரிப்ரின் (Tryspin), ஹைமோடிரிப்சின் (Chymotrypsin) இரண்டும் உணவில் உள்ள புரதத்தை உடைத்து பெப்டைடுகளாக (Peptides) மாற்றுகிறது. அமிலேஸ் (Amylose) உணவில் உள்ள காபோவைதரேட்டுகளை குளுக்கோஸாக (Glucose) மாற்றுகிறது.
லைப்பேஸ் (Lipase) உணவில் உள்ள கொழுப்பை கொழுப்பமிலமாக மாற்றுகிறது. இவை அனைத்தும் குடலினால் உறிஞ்சப்பட்டு நேரடியாக இரத்தத்தில் கலக்கிறது.
கணையத்தில் உள்ள இன்சுலின், குளுக்கோகன் ஹார்மோன்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சமமான நிலையில் பேணுகிறது. அதிகளவான குளுக்கோசு இரத்தத்தில் காணப்படும் போது அதனை கல்லீரலில் Glycogen ஆக சேமித்து வைக்கிறது.
பின் இரத்தத்தில் குளுக்கோசின் அளவு குறையும்போது இன்சுலின் ஹார்மோன் Glycogen ஐ உடைத்து இரத்தத்தில் குளுக்கோசாக சேர்க்கிறது. கணையத்தில் காணப்படும் இன்னொரு ஹார்மோனான Somatostatin ஆனது இன்சுலின், குளுக்கோகன் இரண்டும் அதிகமாக அல்லது தேவையற்ற நேரத்தில் சுரப்பதை தடுக்கிறது.
கணையம் சார் நோய்கள்
- கணைய வீக்கம் அல்லது கணைய அழற்சி
- கணையப் புற்றுநோய்
நோய்க்கான காரணங்கள்
- அதிகப்படியான மதுப்பாவனையின் காரணமாக கணையச் சுரப்பிகள் தடைப்படும்.
- பித்தப்பையில் ஏற்படும் கற்கள் கணைய சுரப்பிகள் வெளிவரும் பாதையை அடைத்தல்.
- பரம்பரை பரம்பரையாக வரும் கணையப் பிரச்சினைகள்.
- விபத்துக்களின் போது வயிற்றுப்பகுதியில் ஏற்பட்ட காயங்கள்.
கணையம் பாதிப்பு அறிகுறிகள்
- தீவிரமான மேல், அடிவயிறு வலி மற்றும் முதுகுவலி.
- வயிற்றுப் பகுதியில் வீக்கம் ஏற்படல்.
- குமட்டல்.
- வேகமான இதயத்துடிப்பு.
- வாந்தி.
- காய்ச்சல்.
- எடை இழப்பு.
- மூச்சு திணறல்.
- அதிகப்படியான வியர்வை வெளியேறல்.
- தளர்வாக காணப்படுதல்.
- சமிபாடடைதல் குறைதல்.
நோய் ஏற்படாமல் தடுக்கும் முறைகள்
கணையத்தில் நோய்கள் ஏற்படுமாயின் அவற்றை சரிசெய்வது கடினமான விடயமாக காணப்படுவதனால், அவை ஏற்படாமல் கவனித்து கொள்ளவேண்டும். உதாரணமாக, கணையத்தின் தலைப்பகுதியில் ஏற்படும் புற்றுநோய் விரைவாக ஏனைய பகுதிகளுக்கு பரவி உயிர் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது.
- தினமும் உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்தல். இதன் மூலம் உடல் உறுப்புகள் சுறுசுறுப்பாக தொழிற்படும்.
- கொழும்பு குறைந்த உணவுகளை உட்கொள்ளல்.
- மதுபாவனையையும், புகைப்பிடித்தலையும் விட்டொழித்தல்.
- ஒரு நாளைக்கு தேவையான புரத, காபோவைதரேட்டு உணவுகளை உட்கொள்ளல்.
- வேகவைத்த காய்கறிகள், தேன், முழுதானியம், பசளிக் கீரை, தக்காளி, முட்டைக்கோஸ், ப்ராகொலி, மாட்டுப் பால், தயிர் என்பவற்றை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளல்.
- உடல் ஆரோக்கியத்தை சரிவர கவனித்தல்.
- வைத்திய ஆலோசனைகளை பெற்று செயற்படல்.
You May Also Like: |
---|
வசந்த பஞ்சமி என்றால் என்ன |
ராம நவமி என்றால் என்ன |