கணப் பொருத்தம் என்றால் என்ன

gana porutham endral enna in tamil

திருமணம் என்பது வெறும் இரு தனிப்பட்ட நபர்களுடைய உறவு மட்டுமல்ல. இந்த இரு நபர்களுக்கூடாக இரு வேறுபட்ட குடும்பங்கள், சமூகங்கள், அவற்றின் கலாசாரங்கள், மத நம்பிக்கைகளால் பின்னப்படுகின்றதொரு சட்டரீதியான ஒப்பந்தம் ஆகும்.

திருமணம் என்பது ஓர் சமூகத்தின் அடிப்படை அலகான குடும்பத்தினை உருவாக்குவதற்கான வழிமுறை என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை. இத்தகைய திருமணத்தில் பொருத்தம் என்பது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகின்றது.

பத்து பொருத்தமும் பொருந்தியிருந்தால் அது உத்தமமான ஜாதகம் என்றெல்லாம் கூட கூறுவார்கள். பத்தில் குறைந்தது எட்டு பொருத்தமாவது எதிர்பார்ப்பது வழக்கம்.

அத்தகைய பத்துப் பொருத்தங்கள்

  1. தினப்பொருத்தம்
  2. கணப்பொருத்தம்
  3. மகேந்திரப்பொருத்தம்
  4. ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம்
  5. யோனிப் பொருத்தம்
  6. ராசிப் பொருத்தம்
  7. ராசி அதிபதிப் பொருத்தம்
  8. வசியப் பொருத்தம்
  9. ரஜ்ஜு (அ) ரச்சுப் பொருத்தம்
  10. வேதைப் பொருத்தம்

அந்தவகையில் திருமண பொருத்தத்தில் முக்கிய பொருத்தமாக பார்க்கப்படுவது கணப்பொருத்தமும் ஒன்று ஆகும். இந்த பொருத்தம் திருமணம் செய்யும் தம்பதியரின் ஒற்றுமையும், அவர்களின் தாம்பத்திய சுகம் எப்படி இருக்கும் என்பதை தீர்மானிக்கும்.

கணப் பொருத்தம் என்றால் என்ன

கணப் பொருத்தம் என்றால் இனப் பொருத்தம் என்று பொருளாகும். இப்பொருத்தத்தின் மூலமே இருவரின் இல்லற ஒற்றுமையும் தீர்மானிக்கப்படும்.

அதாவது கணப் பொருத்தம் என்றால் தம்பதியர் சண்டை சச்சரவு இன்றி ஒற்றுமையுடன் வாழ்வார்களா என்பதற்கான பொருத்தமாகும்.

மூன்று கணங்கள்

மொத்தமுள்ள 27 நட்சத்திரங்களை மூன்று கணங்களாக பிடித்துள்ளனர்.

  1. தேவ கணம்
  2. மனுஷ கணம்
  3. ராட்சஸ கணம்

என்பனவே அவை மூன்றும் ஆகும். இந்த மூன்று கணங்களுக்கும் தலா 9 நட்சத்திரங்கள் உள்ளன.

தேவக் கணம்அசுவினி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், அஸ்தம், சுவாதி, அனுசம், திருவோணம், ரேவதி.
மனித கணம்பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி.
இராட்சத கணம்கார்த்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம்.

பெண்ணும், மணமகனும் ஒரே கணமாக இருந்தால் நலம். அதாவது, பெண் மனித கணமும், மாப்பிள்ளை மனித கணமானால் நலம். பெண் தேவ கணமும், மாப்பிள்ளை தேவ கணமானால் நலம். பெண் ராட்சஸ கணமும், மாப்பிள்ளை ராட்சஸ கணமானால் நலம்.

மணமகன் தேவ கணமாக இருந்து பெண் ராட்சஸ கணமாக இருந்தால் இந்த பொருத்தம் அவர்களுக்கு இல்லை, ஆனால் பெண் தேவ கணமாக இருந்து, ஆண் ராட்சஸ கணமாக இருந்தால் பொருத்தம் உண்டு.

பெண்ணுக்கு ராட்சஸ கணமாக இருந்து ஆணின் நட்சத்திரம் 14 நட்சத்திரத்திற்கு பிறகு இருந்தாலும் பொருத்தம் உண்டு.

பெண் தேவ கணமும், மாப்பிள்ளை மனித கணமானால் மத்திமம். பெண் மனித கணமும், மாப்பிள்ளை ராட்சஷ கணமானால் பொருந்தவே பொருந்தாது. பெண் ராட்சஷ கணமும், ஆண் மனித கணமானால் பொருந்தாது.

கணப் பொருத்தம் பார்ப்பது எப்படி

ஆண் பெண் பொருத்தம்
தேவ கணம் தேவ கணம்பொருந்துகிறது
மனுத கணம்தேவ கணம்பொருந்துகிறது
ராட்சத கணம்தேவ கணம்நடுநிலை
மனுத கணம்மனுத கணம்பொருந்துகிறது
தேவ கணம்மனுத கணம்பொருந்துகிறது
ராட்சத கணம்மனுத கணம்நடுநிலை
தேவ கணம் ராட்சத கணம்பொருந்தவில்லை
மனுத கணம்ராட்சத கணம்பொருந்தவில்லை
ராட்சத கணம்ராட்சத கணம்பொருந்தவில்லை

இந்த பொருத்தம் இருந்தால் தான் இருவருக்கும் மண ஒற்றுமை ஏற்படும். இந்த பொருத்தம் இல்லாதவர்களுக்கு தின பொருத்தம் அவசியம் இருக்க வேண்டும்.

Read more: திருமண பொருத்தம் எத்தனை இருக்க வேண்டும்

இளம் வயது திருமணம் கட்டுரை