மனிதன் தோன்றி வளர்ந்த காலம் முதலே குற்றம் என்பதுவும் தோன்றி விட்டது. குற்றம் என்பது ஒரு செயலாகவும் இருக்கலாம் அல்லது செயலை செய்யத் தவறியதாகவும் இருக்கலாம். இரண்டும் பொதுச் சட்ட திட்டங்களுக்கு எதிரானதாக இருக்கும்.
இதனை நேரடியாக செய்வதும் செய்யச் சொல்லுவதும் குற்றம் எனப்படும். இந்தக் குற்றங்களை சட்டத்தில் குற்றம் என்று குறிப்பிட்டு தண்டனை வழங்க வேண்டும் என்ற நியதி உண்டாக்கப்பட்டுள்ளது.
தண்டனை என்பது தவறுகள் இழைப்பவருக்கும், குற்றங்கள் புரிந்தவருக்கும் கொடுக்கப்படும் ஒன்று. தண்டனை தவறை பொறுத்து பல விதங்களில் அமையலாம்.
தண்டனை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் இருக்கலாம். சட்ட திட்டங்களுக்கு கட்டுப்படாமல் இருப்போரை சிறையில் அடைப்பது, அபராதம் கட்டச் சொல்வது, ஆயுள் தண்டனை, என்று பல வகையாக அமையும்.
ஆயுள் தண்டனை, தூக்கு தண்டனை போன்ற தண்டனைகள் தீவிர, ஆழ்ந்த விசாரணைகளுக்குப் பின்னரே வழங்கப்படுகிறது.
ஒரு குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் ஆயுள் தண்டனை அல்லது 14 ஆண்டுகள் ஆயுள் தண்டனை எனும் தீர்ப்பாகுமாயின் குறித்த வருடம் கழித்து அந்த குற்றவாளி விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற அவசியமில்லை.
அவர் மேல்முறையீடு செய்து (குறித்த வருடம் கழித்து) விடுதலை பெறவும் குற்றவாளிக்கு உரிமை கிடையாது. எனினும் ஒரு சில விதிவிலக்குகள் உள்ளன.
ஆயுள் தண்டனை கைதியின் ஆயுள் தண்டனைக் காலம் முடிவடைந்ததும் அவர் எந்த மாநிலத்தில் குற்றம் செய்தாரோ, எந்த மாநிலத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டதோ அந்த மாநில அரசு நினைத்தால் மாத்திரமே குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையிலிருந்து விடுதலை கொடுக்க முடியும்.
(அந்த மாநில அரசு தண்டனை காலம் கழித்தே விடுதலை கொடுக்க முடியும். அதற்கு முன்பான காலத்தில் விடுதலை கொடுக்க முடியாது)
மேலும், ஆயுள் தண்டனைக் கைதி குறைந்தது கட்டாயம் 14 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும். அதற்கு மேல் அவரது நன்னடத்தை, உடல் ஆரோக்கியம், குடும்ப சூழல் ஆகியவற்றை வைத்து மாநில அரசு முடிவு எடுக்கலாம்.
ஒரு குற்றவாளி தனது ஆயுள் முழுவதும் சிறையில் இருக்கவேண்டும் என்பதை 2012ல் உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இந்திய சட்டத்தின்படி 46 குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்படுகின்றது.
Table of Contents
ஆயுள் தண்டனை என்றால் என்ன
ஒரு மனிதனுடைய எஞ்சிய காலங்கள் எல்லாம் சிறையில் கழிக்க கூடிய மிகப்பெரும் தண்டனை ஆயுள் தண்டனையாகும்.
அதாவது ஆயுள் தண்டனை என்பது குற்றவாளியின் ஆயுள் நாட்கள் முழுவதும் சிறையில் கழிக்க வேண்டும் அதுவே ஆயுள் தண்டனை எனப்படும்.
ஒரு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டால், பெரும்பாலான நேரங்களில், 25 ஆண்டுகள் தண்டனைக்குப் பிறகு, குற்றவாளி பரோலுக்கு வருவார்.
இரட்டை ஆயுள் தண்டனை என்றால் என்ன
இரட்டை ஆயுள் தண்டனை என்பது, முதல் ஆயுள் தண்டனை அனுபவித்து 25 ஆண்டுகளுக்குப் பிறகும், குற்றவாளி தனது இரண்டாவது தண்டனைக்காக மீண்டும் பரோலுக்குத் தகுதி பெறுவதற்கு முன்பு கூடுதலாக 25 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பதை உறுதி செய்கிறது. (அவர் முதல் தண்டனையில் பரோலைப் பெற்றாலும் கூட).
எனவே, குறைந்தபட்சம் 50 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்கிறது.
Read more: பல்லி சொல்லும் பலன்