இந்த பதிவில் மாசிக்காய் பயன்கள் பற்றி காணலாம். (Masikai Benefits In Tamil)
மாசிக்காய் மரங்களின் காயைப் போல் பூவிலிருந்து காய்ப்பதில்லை. குறிப்பிட்ட சில மரங்களின் கிளைகளில் வளரும் ஒருவகை பூச்சிகள் துளையிடும் போது கிளையிலிருந்து பால் வடிந்து அது உறைந்து திரண்டு கெட்டிபடும். இதுவே மாசிக்காயாகும்.
மாசிக்காய் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன மகத்துவமான மருந்தாக உள்ளது. இதில் ஏராளமான மருத்துவ பயன்கள் அடங்கியுள்ளன.
Table of Contents
Masikai Benefits In Tamil
1.வாயில் ஏற்படுகின்ற வாய்ப்புண் குணமாக மாசிக்காயைப் பொடியாக்கி அரைத்து ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து அதனை வெந்நீரில் போட்டு 10 நிமிடம் ஊற வைத்து பின் வடிகட்டி வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குணமாகும்.
2. இதயப் படபடப்புத் தன்மையைக் கட்டுப்படுத்தும். மனப்பதட்டத்தாலும், அதிகம் உடலை வருத்திக் கொள்வதாலும் இதய படபடப்பு ஏற்படுகின்றது. இக்குறைபாட்டை நீக்க மாசிப்பொடியைச் சிறிதளவு பசும்பாலில் விட்டு குழைத்து நாக்கில் தடவினால் சிறிது நேரத்திலேயே இதயப்படபடப்பு நீங்கிவிடும்.
3. பெண்களுக்கு ஏற்படுகின்ற வெள்ளைப்போக்கை நீக்கும். மாசிக்காய் பொடியுடன் சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பின் சிறிதளவு பால் சேர்த்து குடித்து வந்தால் வெள்ளைப்போக்கு பிரச்சனை நீங்கும்.
4. மூல நோயைக் குணப்படுத்தும். 250 கிராம் விளக்கெண்ணையில் அகத்திக் கீரையை வதக்கி பின் அதனுடன் மாசிக்காய் பொடி இரண்டு டீஸ்பூன் சேர்த்துக் கொள்ளவும். இத்தைலத்தை வடிகட்டி எடுத்து வைத்துக் கொண்டு பின்னர் மேல்பூச்சாக ஆசனவாயில் பயன்படுத்தி வந்தால் மூலநோய் குணமாகும்.
5. மாதவிடாய் சம்பந்தமான பிரச்சனைகளை நீக்கும். மாசிக்காய் பொடியை தேன் அல்லது நெய்யில் கலந்து சாப்பிட்டு வந்தால் நன்மை கிடைக்கும். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு நீங்கும். கருப்பையில் காணப்படும் அழுக்குகள் நீங்கி கருப்பை பலம் பெறும்.
6. தேமல், சிரங்கு, படை, சொறி, ஆசனவாயில் ஏற்படும் புண்கள், கட்டிகள் போன்ற பிரச்சினைகளைத் தீர்க்க கூடியது. மாசிக்காய் பொடியை நீரில் குழைத்து தினமும் தடவி வந்தால் குணம் அடையலாம்.
7. குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்குக்கு மாசிக்காய் சிறந்த மருந்தாகும். மாசிக்காய் பொடி ஒரு சிட்டிகையைத் தேனில் கலந்து ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு குணமாகும்.
8. இரத்தப்போக்கை கட்டுப்படுத்துகின்றது. ஏதேனும் அடிபட்ட இடத்தில் அல்லது காயத்தில் இரத்தம் அதிகம் வெளியேறும் போது மாசிக்காய்களை நெருப்பில் சுட்டு அந்த சாம்பலை இரத்த காயத்தின் மீது வைத்து அழுத்தினால் இரத்தம் வெளியேறுவது கட்டுப்படும்.
9. விஷ முறிவுக்கு மாசிக்காய் பயன்படுத்தப்படுகின்றது. குறிப்பாக இரசாயன பொருட்கள் மற்றும் போதைப் பொருட்களின் விஷத்தன்மைகளை முறியடிக்கக் கூடியது. உடலில் இருக்கும் இந்த விசத்தை நீக்குவதற்கு மாசிக்காய் பொடி 5 கிராம் அளவில் ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் கஞ்சா, மது போன்ற விஷத்தன்மை கொண்ட நச்சுக்களை குறைக்கலாம்.
10. சுவாசப்பாதையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நிவாரணம் கொடுக்கின்றது. இருமல் தொண்டைக் கட்டு மற்றும் தொண்டை வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும் போது மாசிக்காய் பொடியை கற்பூரவல்லி இலைச் சாற்றுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் சுவாச பிரச்சினைகள் தீரும்.
மாசிக்காய் ஆண்மை
11. ஆண்மைக் குறைபாட்டை நீக்கும். ஆண்களுக்கு ஏற்படும் ஆண்மை குறைபாடுகளை போக்க மாசிக்காய், ஜாதிக்காய், ஏலக்காய் இவை அனைத்தையும் நன்கு பொடித்து அதனுடன் வல்லாரை இலை பொடியையும் சேர்த்து நெய்யில் வதக்கி சாப்பிட்டால் நரம்புகள் வலுப்பெற்று ஆண்மைக் குறைபாடு நீங்கும்.
You May Also Like :