வ.உ.சிதம்பரனார் கட்டுரை

va u chidambaranar katturai in tamil

இந்த பதிவில் “வ.உ.சிதம்பரனார் கட்டுரை” பதிவை காணலாம்.

தமிழ்நாட்டில் இவரது பெயர் இல்லாத இடங்களை பார்க்க முடியாது. அந்த அளவிற்கு ஒரு சிறந்த திறமையும் தலமைத்துவமும் கொண்ட ஒரு மாமனிதராவர்.

வ.உ.சிதம்பரனார் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. பிறப்பு
  3. வாழ்க்கை பயணம்
  4. தேசவிடுதலை பணிகள்
  5. கப்பலோட்டிய தமிழன்
  6. இவரது சேவைகள்
  7. முடிவுரை

முன்னுரை

இந்திய சுதந்திர போராட்டத்திலே தனது அளப்பரிய தியாகத்தினால் மக்கள் மத்தியில் அதிகம் பிரபல்யமானவர் வ.உ சிதம்பரனார் ஆவார். இவரது வாழ்க்கை இவரது சேவை இவரது போராட்டங்கள் இன்றும் தமிழக மக்களால் நினைவுகொள்ளப்படுகிறது.

ஆங்கில அரசின் பிடிக்குள் சிக்கி கிடந்த பாரத தேசத்தை சுதந்திரமடைய செய்ய அரும்பாடு பட்டவர்களுள் இவரும் ஒருவராவார்.

வசதியான குடும்பத்தில் பிறந்தாலும் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் தனது எல்லா செல்வங்களையும் செலவு செய்த பெரிய தியாகி என வரலாற்றில் இவர் போற்றப்படுகிறார். அந்நியரின் அகந்தைக்கு சிம்ம சொப்பனமாக இவர் விளங்கினார்.

இக்கட்டுரையில் அவரது வாழ்க்கை, அவரது மகத்தான பணிகள் என்பன நோக்கப்படுகின்றது.

பிறப்பு

இவர் தமிழ்நாட்டின் தூத்துக்குடியிலுள்ள “ஒட்டப்பிடாரம்” எனும் இடத்தில் 05 செப்டம்பர் 1872 ஆம் ஆண்டு பிறந்தார்.

இவரது இயற்பெயர் வள்ளிநாயகம் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை ஆனால் இவர் தனது பெயரை இந்தியாவின் மீது கொண்ட பற்றினால் “வந்தே மாதரம் உலகநாதன் சிதம்பரபிள்ளை” என்று மாற்றி கொண்டார்.

இவரது தந்தை ஒரு பணக்கார வழக்கறிஞர் ஆவார். இவர் பிறந்த காலம் இந்தியாவில் ஆங்கிலேயர்களின் அடிமை ஆட்சி இடம்பெற்ற காலப்பகுதியாகும்.

வாழ்க்கை பயணம்

இவர் தனது இளமை பராயம் முதலே சிறந்த கல்வி அறிவும் பிற நல்ல குணங்களை உடைய மனிதராக விளங்கினார். தனது தந்தையை போலவே வழக்கறிஞராக பணிபுரிந்தார். ஆனால் இவர் பணம் எதுவும் இன்றி ஏழைகளுக்காக வாதாடினார்.

வலியவர்களால் எளியவர்களுக்கு பாதிப்பு வரும் போதெல்லாம் இவர் மனம் கலங்கி அவர்களுக்கு உதவும் குணம் உடையவர்.

திலகர் போன்ற தேசவிடுதலை போராளிகளை கண்டு ஈர்க்கப்பட்டு 1905 இல் இந்திய காங்கிரஸ்ல் தன்னை இணைத்து கொண்ட இவர் ஆங்கிலேயர்களுக்க எதிராக போராட துவங்கினார்.

மிகச்சிறந்த தனது அறிவாற்றலால் ஆங்கிலேயர்களுக்கு நெருக்கடி கொடுத்தார். இவரது வாழ்க்கை பயணம் முழுவதும் சுந்திர போராட்டமாகவே விளங்கியது.

தேசவிடுதலை பணிகள்

ஆங்கில அரசு இந்தியர்களை எல்லா வகையிலும் அடிமைப்படுத்துவதை கண்டு கொதித்த இவர். ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பனிக்கு எதிராக 1906 இல் “சுதேசி ஸ்டீம் நேவிகேஷன்” நிறுவனத்தை இவர் துவங்கினார்.

“எஸ். எஸ் கார்னியோ” “எஸ். ஏஸ் காவோ” என்ற இரு கப்பல்களை வாங்கி ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்தியர்களின் எதிர்ப்பை காட்டினார்.

இவரது போராட்டங்களை கண்டு கோபமடைந்த ஆங்கில அரசு இவர் மீது தேச துரோக குற்றம் சுமத்தி இவரை சிறையில் அடைத்தது. சிறையில் இருந்தபடியே இவர் தனது எழுத்து பணியை தொடர்ந்தார்.

தனது சுயசரிதையினை இவர் சிறையில் இருந்தே எழுதினார். இந்த நாட்டை மீட்பதற்காக அவர் தன்னையே அர்ப்பணித்து கொண்டவராவார்.

கப்பலோட்டிய தமிழன்

தமிழ்நாட்டில் இவரது பெயர் இல்லாத இடங்களை பார்க்க முடியாது. அந்த அளவிற்கு ஒரு சிறந்த திறமையும் தலமைத்துவமும் கொண்ட ஒரு மாமனிதராவர்.

இந்தியாவில் இருந்து பிரான்ஸ் வரை சென்று சொந்தமாக கப்பல் வாங்கி “கப்பலோட்டிய தமிழன்” என்று அனைவராலும் பெருமையோடு அழைக்கப்படலானார்.

இந்த செயலினால் ஆங்கிலேயர்களுக்கு இந்தியர்கள் எந்த வகையிலும் சளைத்தவர்கள் இல்லை எனும் விடயத்தை அவர் புலப்படுத்தினார்.

இவரது சேவைகள்

இவரது சேவைகள் காலம் கடந்தும் வாழ்கின்றது அடிமைப்பட்டு கிடந்த தேசத்துக்காக இவர் போராடினார். மற்றும் தமிழ் அன்னைக்கு இவர் சிவஞானபோதம், திருக்குறள் போன்ற நூல்களுக்கு உரைநடை எழுதி தமிழ்பணி ஆற்றினார்.

தனது சுயசரிதை வாயிலாக தேசத்து மக்களை உத்வேகப்படுத்தினார். நாட்டுக்காக சிறை சென்று செக்கிழுத்து துன்புறுத்தப்பட்டார்.

இவர் தனது மன நிலைப்பாட்டை

“என் மனமும் என் உடம்பும் என் சுகமும் என் அறம் என் மனையும் என் மகவும் என் பொருளும்- என் மதியும் குன்றிடினும் யான் குன்றேன். கூற்றுவனே வந்தாலும் வென்றிடுவேன் காலால் மிதித்து”

என்று மிகுந்த மனவைராக்கியம் உடைய மனிதராக வாழ்ந்து காட்டியவர் இவராவார்.

இவரது சேவைகளால் இன்றும் இவர் மங்காத புகழுடன் நிலைத்திருக்கிறார் என்றால் மிகையல்ல.

முடிவுரை

வ.உ.சி போன்ற பெரும் தலைவர்களுக்கு எம்மால் முடிந்த நன்றி கடன் செய்வதாக இருந்தால் இன்று எமது நாடுகளில் நிலவும் இந்த இடர்நிலையை மாற்றி புதியதொரு சுதந்திரம் உள்ள தேசமாக எமது தேசத்தை மாற்ற போராடுவது தான்.

இன்றும் இவரை பெருமைபடுத்தும் வகையில் பல தொண்டு நிறுவனங்களும் பாடசாலைகளும் நூலகங்களும் காணப்படுவது குறிப்பிடதக்கது.

இவை அனைத்தும் வ.உ சிதம்பரனார் எனும் மாபெரும் மகத்தான தலைவரின் பெரும் புகழ் இன்னும் மங்காமல் இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.

You May Also Like :

சான்றோர் வளர்த்த தமிழ் கட்டுரை

தமிழ் மொழியின் தனித்தன்மை கட்டுரை