வணிகம் என்றால் என்ன

vanigam enral enna

வணிகம் என்றால் என்ன

மனித வரலாற்றில் பண்டைய காலம் தொடக்கம் தற்காலம் வரை சமூகமயமாக்கமானது படிப்படியாகவே அதிகரித்து வந்துள்ளது. இதன் விளைவாக மனிதனுடைய தேவைகளும், விருப்பங்களும் அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது.

ஆரம்பகால மனிதன் தனக்குத் தேவையான பொருட்களை தாமே உற்பத்தி செய்து பயன்படுத்திக்கொண்டான். இதுவே சுயதேவை உற்பத்தியாகக் கருதப்பட்டது.

இந்த சுயதேவை உற்பத்தி முறையில் மனிதன் பல்வேறுபட்ட பிரச்சினைகளை எதிர்கொண்டான். இதன் விளைவே மனிதன் தமக்கு எதில் அதிக ஈடுபாடும் அதனை செய்வதற்கான ஆற்றலும் காணப்பட்டதோ அந்த குறிப்பிட்ட பொருளில் சிறப்புத் தேர்ச்சிபெற்று அந்தப் பொருளினை அதிகமாக உற்பத்தி செய்தான். இதன் விளைவாக மிகை உற்பத்தி ஏற்பட்டது.

இந்த மிகை உற்பத்தி காரணமாகப் பல்வேறு பிரச்சினைகளை மனிதன் எதிர்கொண்டான். இதற்குத் தீர்வு காண்பதற்காக தமக்கிடையே பொருட்களை பரிமாற்றம் செய்து கொண்டான். இதன் விளைவாகப் பண்டமாற்று முறை தோற்றம் பெற்றது.

இந்தப் பண்டமாற்று மறையின் மூலம் பல்வேறுபட்ட பிரச்சினைகளை எதிர்கொண்ட மனிதன் இதற்குத் தீர்வாக ஒரு பொதுவான ஊடகத்தினைப் பயன்படுத்தத் தொடங்கினான். அதன் விளைவாகவே பணம் என்ற பொதுவான ஊடகம் உருவானது.

தற்போது பணம் பலவிதமான வழிகளில் பயன்படுத்தப்படுகின்றது. இதுவே வணிகத்தின் பரிணாம வளர்ச்சிக்கு காரணமானது எனலாம்.

மனிதனானவன் தமது தேவைகளையும், விருப்புக்களையும் நிறைவேற்றிக் கொள்வதற்கு வழிமுறைகளைத் தேடிக்கொள்ளும் சந்தர்ப்பத்தில் தோற்றம் பெற்றதே வணிகமாகும். இன்று ஒரு நாட்டின் பொருளியல் வளர்ச்சி வணிகத்தைப் பொறுத்தே அமைகின்றது.

வணிகம் என்றால் என்ன

வணிகம் என்பது தொழில்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஒரு அமைப்பு அல்லது தொழில்முனைவோர் நிறுவனம் என வரையறுக்கலாம்.

அதாவது வணிகம் அல்லது வர்த்தகம் என்பது மனிதனது தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றும் இலாப நோக்குடைய அல்லது இலாப நோக்கற்ற ஒரு பொருளாதாரச் செயற்பாடு ஆகும்.

வணிகத்தின் நோக்கம்

நுகர்வோருடைய தேவைகளையும், விருப்பங்களையும் சரியான முறையில் நிறைவேற்றுதல்.

தம்மீது அக்கறை கொள்ளும் தரப்பினருக்கு இலாபத்தை உழைத்துக் கொடுத்தல், வேலைவாய்ப்புக்களை உருவாக்கிக் கொள்ளுதல் போன்ற பல நோக்கங்களைக் கொண்டுள்ளது.

வணிகத்தின் வகைகள்

வணிகத்தின் நோக்கத்தின் அடிப்படையில் பிரதானமாக 2 வகைப்படுத்தலாம். அதாவது,

1. இலாப நோக்கமுடைய வணிகம் – இலாப நோக்கமுடைய வணிகம் என்றால் உற்பத்தி விநியோகங்களை ஒரு பொருளாதார நோக்கத்தின் அடிப்படையில் செயற்படுத்துவதாகும்.

2. இலாப நோக்கமற்ற வணிகம் – இலாப நோக்கமற்ற வணிகம் என்பது உற்பத்தி விநியோகம் பொதுவாக இலாப நோக்கமின்றியே காணப்படும். இது சமூக நலன் அடிப்படையாகக் கொண்டது. இத்தகைய வணிகங்களுக்கு உதாரணமாக அரச துறைகள், NGO போன்றவற்றைக் கூறலாம்.

உற்பத்தி அடிப்படையில் வணிகம் சேவைப் பொருள் வணிகம், சேவை வணிகம் என இரண்டு வகைப்படுகின்றது.

இது தவிர வணிகமானது உள்நாட்டு வணிகம், வெளிநாட்டு வணிகம் எனவும் வகைப்படுத்தப்படுகின்றது.

உள்நாட்டு வணிகம்– என்பது ஒரு பகுதியிலிருந்து பற்றாக்குறை உற்பத்தியுள்ள வேறொரு பகுதிக்குப் பொருட்கள் விற்பதையும், தேவையானவற்றை வாங்குவதையும் உள்நாட்டு வணிகம் என்பர்.

வணிகத்தால் வளம் பெற்று விளங்கும் நாடு எதுவோ, அதுவே செல்வத்தால் சிறந்து விளங்கும். பண்டமாற்று முறையில் இருந்து வணிகம் வளர்ச்சி பெற்று இன்று மின்வணிகம் வரை வெகுவாக வளர்ந்துள்ளது.

பாரம்பரிய முறையில் நம்மால் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட பல்வேறு பொருட்களுக்கான சந்தையை மின்வணிகம் தற்போது ஏற்படுத்திக் கொண்டுள்ளது வணிகத்தின் சிறப்பேயாகும்.

Read more: வியாபாரம் என்றால் என்ன

சில்லறை – மொத்த வியாபாரம் என்றால் என்ன