மொழி என்றால் என்ன

mozhi enral enna in tamil

அறிமுகம்

உலகில் சுமார் ஆறாயிரத்திற்கும் அதிகமான மொழிகள் காணப்படுகிறது. ஆரம்பத்தில் ஒரு மொழியே தோற்றம் பெற்று அவை மாற்றம் பல கண்டு பல கிளைமொழிகளாக பிரிந்து காணப்படுகிறது.

மனிதன் தனது எண்ணங்களை சரியான முறையில் விளங்கப்படுத்த முயற்சித்ததன் விளைவாகவே மொழிகள் தோற்றம் பெற்றன.

ஐந்தறிவு படைத்த விலங்குகளிலிருந்து ஆறறிவு படைக்கப்பெற்ற மனிதர்களை வேறுபடுத்தி காட்டும் விடயம் மொழி ஆகும். இம்மொழி என்பது உருவாக்கப்பட்டதன் பயனாகவே மனித நாகரிகம் தோன்றி வளர்ச்சி கண்டது.

மொழி என்றால் என்ன

மனிதன் தனது எண்ணங்கள், சிந்தனைகள், உணர்ச்சிகள், தீர்வுகள் என்பவற்றை உருவாக்கவும் , பிறருக்கு விளக்கவும் பரிமாற்றுவதற்கும் உபயோகிக்கப்படுகின்ற ஓர் ஊடகமே மொழி ஆகும்.

மொழி என்பது ஒலி வடிவத்தையே குறிக்கும் லத்தின்மொழிச் சொல்லாகிய Lingua என்பதற்கு ‘நா’ என்பது பொருளும் உண்டு. எனவே, நாவின் செயலால் உருவாகிய ஒன்றே என்பதை உணர்த்துவதே ‘Language’ என்னும் சொல்லாகும்.

தமிழிலும் மொழியப்படுவது மொழி என்பர். ஒவ்வொரு மொழியிலும் ஒலி வடிவம் அதிக மாறுதலுக்கு உட்படுவதில்லை. ஆனால் அதன் வரி வடிவம், ஒலி வடிவைக் காட்டிலும் கொஞ்சம் அதிகம் மாறுதலுக்கு உட்படுகிறது.

“ஒரு சமூக வகுப்பினர் அல்லது நாட்டார் தம்முடைய கருத்துக்களை பிறருக்கு புலப்படுத்துவதற்கு ஒரு கருவியாகக் கொள்ளும் ஒலித்தொகுதியே மொழி” என பாவணார் எனும் அறிஞர் கூறுகின்றார்.

கொலம்பியா பல்கலைக்கழக ஆங்கில மொழி மற்றும் ஒப்பிட்டு இலக்கிய இணைப்பு போராசிரியரான ஜான் மாக்வோர்கடர், “மனித மொழியென்பது மனிதர்கள் பிறர் புரிந்து கொள்ள முடிகிற வகையில் வாய் வார்த்தைகளையும் குரலோசைகளையும் அமைத்துக் கொள்ள ஏதுவாக்கும் இலக்கணம், விதிகள் மற்றும் தரநிர்ணயம் ஆகியவற்றின் தொகுப்பே ஆகும்.” என கூறுகிறார்.

மொழியின் தோற்றம்

உலகில் தோன்றிய முதல் மொழி கிரேக்கம் என பல வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இருப்பினும் ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரம், வரலாறு என்பவற்றை கொண்டு இவை ஒவ்வொரு நாட்டிலும் வேறுபடுகின்றன.

ஆரம்பத்தில் சைகைகளின் மூலம் தொடர்பாடலை மேற்கொண்ட ஆதிமனிதன், சிறிது காலத்தின் பின் சிறு ஒலிகளை எழுப்பி தமது கருத்துக்களை வெளிப்படுத்தினான்.

பின்னர், காலங்கள் செல்லச் செல்ல ஒலிகளை ஒன்றிணைத்து வார்த்தைகளாக கோர்த்து மொழியினை உருவாக்கினான் என கூறப்படுகிறது. இது இயற்கையாக அமைவு பெற்ற விடயமல்ல மொழியை உருவாகியவன் மனிதனே ஆவான்.

தொடக்கத்தில் வார்த்தையாக வெளியிட்டு பின்னர் அவற்றை சொற்றொடராக கோர்த்து வெளியிட்டான். இருப்பினும், மொழி என்பது தோற்றம் பெற்ற காலம் எது என்பதனை சரியாக கூற இயலாது.

மொழியின் முக்கியத்துவம்

பல்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு விதமான ஒலிகளின் மூலம் அச்சம், ஆசை போன்ற பல உணர்ச்சிகளை மனிதன் வெளியிடுகின்றான்.

பூமியில் வாழும் உயிரிங்களில் மனித இனம் மாத்திரமே தனது உணர்வையும், கருத்தையும் பிறருக்கு உணர்த்தக் கூடிய நிலையில் இருக்கிறான்.

மனித சமூகத்திற்கு இடையே தொடர்பு உண்டாவதற்கு மொழியே அடிப்படைக் கருவியாக உள்ளது.

மொழியின் இரு வடிவங்கள்

எழுத்து வழக்குமொழி

அனைத்து மொழிகளிலும் எழுத்துவழக்கு மொழி என்பது அவ்வவ்மொழிகளுக்குரிய இலக்கண அமைப்புகளுடன் கற்றலுக்காக, பொதுத்தேவைகளுக்காக என அமையப்பெறுவது ஆகும்.

பேச்சுவழக்கு மொழி

அனைத்து மொழிகளிலும் பேச்சுவழக்கு மொழி என்பது உரையாடல்களின் அமைப்பில் அன்றாடம் நாம் சாதாரணமாக உரையாடும் மொழி ஆகும். இவை தத்தம் மொழிக்குரிய இலக்கண அமைப்புகளில் காணப்படுவதில்லை.

கிளை மொழிகள்

கிளைமொழியை வழங்கும் இடம் சார்ந்து வட்டாரக்கிளைமொழி என்றும் பேசுகின்ற மக்களின் சமூக நிலையைக்கொண்டு சமூகக் கிளைமொழி என்றும் வகைப்படுத்தப்படுகிறது. இது பேச்சு மொழியின் வகையைக் குறிப்பதாகும்.

மனிதன் பேச்சாலும் எழுத்தாலும் தனது கருத்தைப் பிறருக்குத் தெரியப்படுத்தும் கருவியாக மொழியில் பேச்சு வழக்கில் மட்டும் ஏற்படும் மாற்றங்களைக் கிளைமொழியாக கொள்ளலாம்.

ஒரு மொழி பரந்த பரப்பில் பேசப்படும்பொழுது அம்மொழியில் ஏற்படும் மாற்றங்களாக இது காணப்படுகிறது. இதனை தனி மனித பேச்சு வழக்கு எனவும் அழைக்கப்படுகிறது.

இந்த தனி மனித பேச்சு வழக்குகள் பல நபர்களால் பேசப்படும்போது ஒரு கிளை மொழியாகவும் பல கிளைமொழிகள் சேர்ந்து ஒரு பொதுமொழியையும் தோற்றுவிக்கிறது.

You May Also Like :
மூவகை மொழிகள் யாவை
பேச்சு மொழி என்றால் என்ன