மக்கா வேர் பயன்கள்

மக்கா வேர்

தாவரவியல் ரீதியாக லெபிடியம் மெய்னி என வகைப்படுத்தப்பட்ட மக்கா, அதன் சத்தான வேருக்காக வளர்க்கப்படும் ஒரு குடலிறக்க தாவரமாகும்.

மக்கா வேரின் பூர்வீகமாக பெருவில் உள்ள ஆண்டிஸ் மலைகள் காணப்படுகின்றன. இது பெருவியன் ஜின்ஸெங் என்றும் அழைக்கப்படும்.

மக்கா வேர் ஓர் முக்கிய ஆரோக்கியப் பொருளாகும். உடலுக்குத் தேவையான வைட்டமின் மற்றும் இதர ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றது.

மக்கா வேர் பயன்கள்

1. பாலியல் செயல்திறனை அதிகரிக்கக் கூடியது. இதனால் தான் இயற்கை வயகரா என்று பொதுவாக அழைக்கின்றார்கள். மக்கா வேரை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஆண் மற்றும் பெண் இருவரின் பாலியல் ஆசையையும், செயல்திறனையும் அதிகரிக்கச் செய்யலாம்.

2. விந்தணுக்களின் உற்பத்தி எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதுடன் விந்தணுக்களின் இயக்கத்தையும் மேம்படுத்த உதவுகின்றது.

3. விரைவில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

4. பெண்களுக்கு கருவுறும் தன்மை அதிகரிக்கும். ஆண் விந்தணுக்களின் எண்ணிக்கையையும் கருவுறுதலையும் மேம்படுத்தி இருவருக்குமே கருவுறுவதில் சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.

5. எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு உதவுகின்றது. எலும்பின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் முக்கிய பங்களிப்பினைச் செய்கின்றது. இதில் கால்சியம் அதிகமுள்ளதால் ஆரோக்கியமான எலும்புகளை மேம்படுத்துவதற்கு சிறந்ததாகும். உணவில் மக்காவைச் சேர்ப்பதால் எலும்பு அடர்த்தியை அதிகரிக்கும். அதேவேளையில் எலும்புகளின் வலிமையையும் அதிகரிக்கும்.

6. மன அழுத்தத்தைக் குறைக்கிறது. இதில் அதிகளவு வைட்டமின் ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இது ஒருவரின் மன அழுத்தத்திற்கு சாதகமான பங்களிப்பைச் செய்கின்றது.

7. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தினசரி உணவில் இதைச் சேர்ப்பதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். மக்காவின் உள்ள உயர் புரதமானது நோயெதிர்ப்பு அமைப்பு, திசு சரிசெய்தல் மற்றும் ஆற்றல் மட்டங்களை அதிகரிக்க செய்யும். நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றது.

8. இயற்கை வைத்தியத்திற்கு மக்கா வேர் பயன்படுத்தப்படுகின்றது.

9. உடலின் செயற்திறனை அதிகரிக்கின்றது. விளையாட்டு வீரர்களுக்கும் மற்றும் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க விரும்புபவர்களுக்கும் நல்ல பலன் தரும்.

10. ஒழுங்கற்ற மாதவிடாய்ப் பிரச்சினையைச் சீர்செய்யும். உடலில் ஈஸ்டரோஜனின் அளவைச் சமநிலைப்படுத்தும்.

You May Also Like:
நொச்சி இலையின் பயன்கள்
மங்குஸ்தான் பழம் நன்மைகள்