ஞாயிற்று தொகுதியில் நீலக்கோள் என சிறப்பிக்கப்படும் கோலே பூமியாகும். இப்பூமியில் பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் மற்றும் மனிதர்கள் வாழ்கின்றனர் இக்காரணத்தால் ஏனைய கோள்களைப் போல் அல்லாமல் உயிரினங்கள் வாழக்கூடிய சிறப்பு கொண்ட கோள் என பூமி சிறப்பிக்கப்படுகின்றது.
இதனால் பூமி உயிர் கோலமாக உயர்த்தப்படுகின்றது. இவ்வாறு எண்ணற்ற சிறப்புக்கள் உடைய பூமிக்கு பல பெயர்கள் தமிழில் வழங்கப்படுகின்றன.
Table of Contents
பூமியின் வேறு பெயர்கள்
- பிதுருவி
- பார்
- அகலிடம்
- தரணி
- அளக்கர்
- அசலை
- அகிலம்
- குவலயம்
- காசினி
- அவனி
- தாரணி
- வசுந்தரை
- உலகு
- வையகம்
- பொழில்
- இகம்
- பவனி
- மேதினி
- புவனம்
- ஞால்
- ஞாலம்
- நீலக்கோள்
பூமியின் வேறு பெயர்களும் அதன் பொருள் விளக்கமும்
அண்டம்:- அண்டம் என்பதால் உயிர்ப் பொருள்கள் தோன்ற ஆதாரமானது என்பது அர்த்தமாகும்.
ஞால்:- ஞால் என்றால் தொங்குவது என்று பொருள்படும். பூமி பேரண்டத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு சிறு வடிவம் என்பது இதன் அர்த்தமாகும்.
வையகம்:- இது தொங்கிக் கொண்டிருந்தாலும் இதில் வைக்கப்படும் பொருள்கள் பாதுகாப்பாக உள்ளன. அவை விழாது என்பதால் இது வையகம் என அழைக்கப்படுகிறது.
பூமியின் முக்கியத்துவம்
- மனிதனும், மற்ற அனைத்து வகை உயிரினங்களும், தாவரங்களும் பூமி என்ற இந்த சிறப்பு உயிரியின் பாகங்கள். சுற்றுச்சூழலும், உயிரினங்களும் பூமி என்ற சிறப்பு உயிரியின் பிரிக்க முடியாத அம்சங்கள். அவை ஒன்றோடு மற்றொன்று நெருங்கிய உறவு கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் இணைந்த ஓர் அமைப்பு தான் பூமி.
- ஏனைய கோள்களில் இல்லாத காற்று, நீர், வளிமண்டலம் போன்றவற்றை கொண்டது.
- பல ஆண்டுகள் பழமையானது.
- காலநிலை மாற்றம் கொண்டது.
- வண்ணமயமான அழகினைக் கொண்டது.
இவ்வாறான பல சிறப்புக்களைக் கொண்டதே பூமியாகும்.
Read more: பசுமை புரட்சி என்றால் என்ன