இந்த பதிவில் வஜ்ரவல்லி எனவும் அழைக்கப்படும் “பிரண்டை பயன்கள்” பற்றி காணலாம்.
பிரண்டைத் தாவரமானது புட்கள், காடுகள், வேலிகளில் அதிகம் வளரும் தாவரமாகும். பொதுவாக பிரண்டையில் இனிப்புப் பிரண்டை, புளிப்பிரண்டை, சிவப்புப் பிரண்டை, உருட் பிரண்டை, ஓலைப் பிரண்டை, முப்பிரண்டை எனப் பலவகை உண்டு.
தண்டானது நீர் பற்றதாகவும் நான்கு பக்கமும் விளிம்பு கொண்டதாகவும் இருக்கும். இதன் பூக்கள் வெள்ளை நிறமாகவும், பழங்கள் கறுப்பு நிறமாகவும் இருக்கும். இதற்கு வஜ்ஜிரவல்லி என்ற பெயரும் உண்டு.
பிரண்டை பயன்கள் (Pirandai Benefits In Tamil)
1.இதை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் சுறுசுறுப்பு அதிகப்படுத்தும்.
2. ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்து நினைவாற்றலை அதிகரிக்க செய்கின்றது. மூளை நரம்பை பலப்படுத்துவதன் மூலம் நினைவாற்றல் அதிகரிக்கின்றது.
3. நரம்பு தளர்ச்சியை போக்குகிறது. ஆண்மையைப் பெருக்கக் கூடியது.
4. பசியைத் தூண்டுவதில் பிரண்டை பெரிதும் உதவுகின்றது. பிரண்டை துவையல் சாப்பிட்டால் அதிகம் பசியைத் தூண்டும்.
5. வயிற்று பிரச்சனைகளை போக்கும். குறிப்பாக வயிற்றுப் பொருமல், சிறுகுடல் புண் நீங்க உதவுகின்றது. இதற்கு நெய்விட்டு பிரண்டைத்தண்டை அரைத்து உண்ண வேண்டும்.
6. காச பிரச்சினை, ஆஸ்துமா போன்ற நோய்களைக் குணப்படுத்தக் கூடியது. பிரண்டையை வதக்கி அதனுடன் சிறிது மிளகாய் சேர்த்து அரைத்து தினமும் இரண்டு வேளை சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
7. மூலநோயைக் குணப்படுத்தும். பிரண்டையை நறுக்கி நெய்விட்டு வதக்கி நன்கு அரைத்து காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைகளிலும் நெல்லிக்காய் அளவிற்கு உண்டு வர வேண்டும்.
8. பிரண்டைத் துவையலை சாப்பிட்டால் செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.
9. பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் முதுகு வலி, இடுப்பு வலியைப் போக்கும். மாதவிடாய் காலங்களில் பிரண்டை துவையல் எடுத்துக்கொண்டால் சிறந்த நிவாரணி மருந்தாக செயல்படும்.
10. எலும்பு வளர்ச்சிக்கும் பலத்திற்கும் பிரண்டை சிறந்ததாகும். பிரண்டையை ரசம் வைத்து சாப்பிட்டால் நல்லது. இரண்டு துண்டுகளாக நறுக்கி ரசத்தில் சேர்த்துப் பருகி வருதல் வேண்டும்.
11. இதய வால்வுப் பாதிப்பைத் தடுக்கும். இரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிவதால் இரத்த ஓட்டத்தின் வேகம் குறைவடையும். இதனால் இதயத்துக்குத் தேவையான இரத்தம் தடைப்படும். இதனால் இதய வால்பு பாதிப்படையும். இப்பாதிப்பினைத் தடுக்க அடிக்கடி பிரண்டைத் துவையல் சாப்பிட்டு வந்தால் நல்ல பயன் கிடைக்கும்.
You May Also Like: