பாத சனி என்றால் என்ன

padha sani endral enna

நவக்கிரகங்களில் ஒருவராக காணப்படும் சனிபகவான். 1 தொடக்கம் 12 நிலைகளில் ஒருவரது ஜாதகத்தில் பயணிக்கின்றார். அவ்வாறு சனிபகவான் பயணிக்கும் ஒவ்வொரு நிலைகளும் ஒவ்வொரு பெயரால் அழைக்கப்படுகின்றது.

அந்த ஒவ்வொரு நிலைகளிலும் சனி பகவான் பல நன்மைகளையும் படிப்பினைகளையும் ஒவ்வொருவருக்கும்  வழங்குகின்றார். அந்த வகையில் பாத சனி பற்றி நோக்குவோம்.

பாத சனி என்றால் என்ன

ஒருவரது ஜாதகத்தில் சனிக்கிரகமானது, அவரது ராசிக்கு ‘2 ஆம் ‘ வீட்டில் பெயர்ச்சியடைந்து அந்த வீட்டில்  இரண்டரை ஆண்டு காலம் சஞ்சாரம் செய்வதை ‘பாத சனி’ என அழைக்கின்றனர்.

பாத சனி ஏற்படுத்தும் தாக்கங்கள்

பாதசனியானது அஷ்டம சனி, ஜென்ம சனி என்பவை போன்று பாரிய பல தாக்கங்களை ஏற்படுத்தாது. எனினும் இது ஒருவருடைய வாழ்வில் சிறிய சில சிக்கல்களையும் தாக்கங்களையும் ஏற்படுத்துகிறது. அவையாவன,

  • கல்வியிலும், பதவிகளும் எந்தவித முன்னேற்றமும் இன்றி மந்தநிலையிலே  காணப்படுவர்.
  • வீடு கட்டுபவர்களுக்கு சரியான வேலை ஆட்கள் அமையாமல் வீட்டு வேலை பாதைகள் நிற்கும் நிலை ஏற்படலாம்.
  • கால்நடைகள் மற்றும் வாகனங்களால் இலாபம் இல்லாமல் போகலாம்.
  • தேவையில்லாத செயல்களால் பொருள் இழப்பு ஏற்பட்டு பண நெருக்கடியான சூழல் அமையலாம்.
  • வாக்கு ஸ்தானத்தில் சனி தேவர் இருப்பதால் தன் பேச்சினாலேயே பிரச்சனைகளை தேடிக்கொள்வார்கள். பயன் இல்லாத பல அலைச்சல்களை ஏற்படுத்துவார்கள்.
  • பாத சனி நடைபெறும் காலங்களில் காலில் அடி, சுளுக்கு, புண், வாதம் போன்ற நோய்களை ஏற்பட வாய்ப்புகள் காணப்படும்.
  • ஒரு சிலருக்கு வாழ்க்கையில் ஊக்கமும், உற்சாகமும் இல்லாமல் வாழ்க்கையில் இதுவரை விரும்பி வாழ்ந்த அனைத்தையும் வெறுத்து தத்துவங்கள் பேசும் விரக்தி நிலைக்கு கொண்டு செல்லும்.
  • சென்ற ஜென்மங்களில் செய்த செயல்பாடுகளுக்கு ஏற்ப சனி பகவான் செயற்படுவார்.

பாத சனியின் தாக்கத்தை குறைப்பதற்கான பரிகாரங்கள்

  • பாத சனி காலத்தில் பாதகமான பலன்கள் ஏற்படாமல் இருப்பதற்கு சனிக்கிழமை தோறும் கோவிலில் இருக்கும்  நவகிரக சந்நிதிக்கு சென்று சனி பகவானுக்கு நெய் தீபங்கள் ஏற்றி, எள் சாதம் செய்து நைவேத்தியமாக வைத்து வழிபட்டு வரவேண்டும்.
  • வழிபாடு முடிந்த பிறகு அந்த எள் சாதத்தை யாசகர்களுக்கு உண்ணக்கொடுத்து, சிறிது  பணத்தையும் சேர்த்து தானமாக கொடுத்தல் வேண்டும்.
  • தினந்தோறும்  காலையில் காகங்கள் மற்றும் இதர பறவைகளுக்கு உணவளித்து பின்னரே சாப்பிடுதல் வேண்டும்.
  • வீட்டில் நவகிரக ஹோமம் செய்தால் சனி கிரகத்தின் பாதகமான நிலையால் ஏற்படக்கூடிய கடுமையான  பலன்கள் நீங்கி, நன்மைகள் உண்டாகும்.
  • சனிக்கிழமைகளில் ஆஞ்சேநேயர் கோவிலுக்கு சென்று ஆஞ்சநேயரை  வழிபட்ட பின்பு “ஹனுமன் சாலிசா” படித்தல் வேண்டும்.
  • சனிக்கிழமைகளில் அடர் நீல நிற ஆடைகள் அணிந்து வந்தால் சனி பகவானின் பரிபூரண ஆசிகள் கிடைக்கும்.

Read more: சனி பகவான் வழிபடும் முறை

கண்டக சனி என்றால் என்ன