சான்றோர் வளர்த்த தமிழ் கட்டுரை

Sandror Valartha Tamil Katturai In Tamil

இந்த பதிவில் உலகின் மூத்த மொழி செம்மொழியான எம் மொழி “சான்றோர் வளர்த்த தமிழ் கட்டுரை” பற்றி பார்க்கலாம்.

தமிழை வளர்க்க எண்ணிய அனைத்து சான்றோர்களையும் தமிழ் வளர்த்தது என்பதே உண்மையாகும்.

  • சான்றோர் வளர்த்த தமிழ் கட்டுரை
  • Sandror Valartha Tamil Katturai In Tamil

தமிழர் பண்பாடும் கலாச்சாரமும் கட்டுரை இங்கே காணலாம்.

சான்றோர் வளர்த்த தமிழ் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. சங்ககாலமும் தமிழ் வளர்ச்சியும்
  3. சங்கமருவிய காலமும் தமிழ் வளர்ச்சியும்
  4. பல்லவர் கால தமிழ் வளர்ச்சியும்
  5. சோழர் கால தமிழ் வளர்ச்சி
  6. 18ம் நுற்றாண்டில் தமிழ் வளர்ச்சி
  7. முடிவுரை

முன்னுரை

“தமிழுக்கு அமுதென்று பெயர் இன்பத்தமிழ் எங்கள் உயிரிற்கு நேர்” என்று பாடிய பாவேந்தர் பாரதிதாசன்

தமிழ் எமக்கு வெறும் மொழியல்ல எமது உணர்வு எம் தாய்க்கு நிகராக அதனை போற்றுதல் வேண்டும்.

எமது முன்னோர்கள் “உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கென” வாழ்ந்தவர்கள் தாம் மடிந்தாலும் தமிழை வாழவைக்க வேண்டும் என்பது அவர்களின் பேரவா தமிழனாய் பிறந்ததையிட்டு அவர்கள் பெருமைப்பட்டார்கள்.

அதனால் தமிழ் அன்னையை அழகுபடுத்த அழகிய தமிழிலக்கியங்களை படைத்து தமிழ் வளர்த்தார்கள் இதனால் தான் தமிழ் என்றும் மங்கா புகழுடைய மொழியாக உள்ளது.

இதனை பாரதிதாசன் பாடுகையில் “சாவிலும் தமிழ் படித்து சாக வேண்டும் என் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்” என்று உணர்ச்சி பொங்க பாடுகிறார்.

தமிழிலக்கிய வரலாற்று காலங்களில் எம் சான்றோர்கள் வளர்த்த தமிழ் பற்றி இக்கட்டுரையில் நோக்கலாம்.

சங்ககாலமும் தமிழ்வளர்ச்சியும்

தமிழ் வரலாற்றில் முதல் காலமாக பார்க்கப்படும் சங்ககாலத்தில் தமிழ் கோலோச்சியிருந்தது சங்கம் வைத்து தமிழ் வளர்த்த காலம் ஆகையால் தான் சங்ககாலம் என்றழைக்கப்படுகிறது.

இக்காலத்து மன்னர்கள் முச்சங்கங்கள் அமைத்து தமிழை வளர்தனர். இக்காலத்தில் தமிழில் எட்டுத்தொகை பத்துப்பாட்டு ஆகிய நூல்களும் தொல்காப்பியம் எனும் தமிழ் இலக்கண நூலும் தோன்றியிருந்தன.

இக்காலத்தில் கபிலர், பரணர், ஒளவையார், கணியன்பூங்குன்றனார், தொல்காப்பியர் போன்ற புலவர்கள் பல இலக்கியங்களை படைத்து தமிழ் வளர்த்தனர்.

இக்காலத்தில் அதியமான் தமிழ் வாழ வேண்டுமென நெல்லிக்கனியை ஒளவையாருக்கு கொடுத்து தமிழை வளர்த்த விதம் புலவர்களை காத்து தமிழ் வளர்த்தனர் என வரலாறுகள் கூறும்.

என்றைக்கும் தமிழ் வளர்ச்சியின் முன்னோடி சங்ககாலமே ஆகும்.

சங்கமருவியகாலமும் தமிழ் வளர்ச்சியும்

சங்கமருவிய காலம் தமிழ் வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றிய காலம் என்றே கூறலாம்.

இக்காலத்தில் மக்களுக்கு அறம், நீதி என்பவற்றை புகட்டும் படியாக புலவர்கள் தமிழில் தோன்றிய ஆக சிறந்த நீதி கருத்துக்களையும் தர்ம நூல்களையும் படைத்து தமிழை வாழ வைத்தனர்.

இக்காலத்திலேயே உலகப்பொதுமறை என்று கூறப்படும் திருக்குறள் தோன்றியிருந்தது.

இது தமிழர்கள் மட்டுமன்றி உலகமே வியக்கும் நூலாக தமிழுக்கு பெருமை சேர்த்திருக்கிறது.

இக்காலத்தில் பதினெண்கீழ்கணக்கு நூல்கள் தோன்றி தமிழுக்கு பெருமை சேர்த்தன.

மேலும் காரைக்காலம்மையாருடைய அற்புத திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலை போன்ற இலக்கியங்கள் தோன்றின.

மேலும் தமிழின் ஜம்பெரும் காப்பியங்களில் இரண்டான சிலப்பதிகாரம் இளங்கோவடிகளாலும் மணிமேகலை சீழ்த்தலை சாத்தனாராலும் படைக்கப்பட்டது.

இக்காலத்தில் தமிழ் பெருமை மிக்க இலக்கிய படைப்பினால் வளர்ச்சியடைய செய்யப்பட்டது.

பல்லவர்கால தமிழ் வளர்ச்சி

பல்லவர் காலம் தமிழ் வளர்ச்சியில் பக்தி இலக்கியங்களின் வளர்ச்சி அதிகம் தோன்றிய காலமாகும்.

இக்காலத்தில் நாயன்மார்கள் தோன்றி சைவத்தையும் ஆழ்வார்கள் தோன்றி வைணவத்தையும் வளர்க்க பக்தி இலக்கியங்களால் தமிழன்னையை அழகு செய்திருந்தனர்.

இக்காலத்தில் தான் தேவாரங்களை திருஞான சம்பந்தர், சுந்தரர், திருநாவுக்கரசர் போன்றவர்கள் பாடினார்கள். மேலும் திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு போன்ற இலக்கியங்கள் படைக்கப்பட்டன.

மேலும் ஆழ்வார்கள் பல பக்தி இலக்கியங்களை பாடி தமிழை ஆலயங்களை அடிப்படையாக கொண்டு அக்காலத்தில் வளர்ச்சியடைய செய்திருந்தனர்.

சோழர் காலம்

இக்காலம் தமிழ் மொழியின் பொற்காலம் என்று கூறும் அளவுக்கு தமிழும் அதன் இலக்கிய வளர்ச்சியும் தமிழர் வாழ்வியலும் உச்சம் தொட்ட காலமாகும்.

இக்கால சோழ மன்னர்கள் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டனர்.

இவர்கள் நாடெங்கும் கல்விச்சாலைகளை அமைத்தல், ஆலயங்கள் வாயிலாக தமிழ் வளர்த்தல், புலவர்களை கொண்டு தமிழை வளர்த்தனர்.

இம் மன்னர்களின் வீரத்தையும் காதலையும் கொண்டு உலாக்கள் பரணிகள் போன்ற இலக்கிய வடிவங்கள் தமிழில் வளர்ந்தன.

இக்காலத்தில் கம்பன் எனும் பெருங்கவிஞன் இராமாயணத்தை தமிழில் கம்பராமாணம் என தந்து தமிழை பெருமையடைய செய்தார்.

ஒட்டக்கூத்தர் கலிங்கம் வென்ற சோழன் மீது கலிங்கத்து பரணி பாடினார்.

பல நாடுகளையும் வென்று தமிழின் பெருமை சொன்ன சோழர் காலம் தமிழை வாழ்வித்த பொற்காலம் என்றால் அது மிகையல்ல.

முடிவுரை

இன்றைக்கு பலபேருடைய மனவேதனை தமிழ் அழிவடைகின்றது என்பதாகும்.

உண்மை தான் எம் சொந்த மொழியின் பெருமையறியாது பிற மொழி மோகம் கொண்டு அதனை பெருமையாக நினைக்கும் மடமை மிகுந்தோர் அதிகமே

இருப்பினும் இன்றைக்கும் உலகின் எல்லா மொழிக்கும் மூத்த மொழியாக தமிழ் தான் உள்ளது செம்மொழி என்ற பெருமைக்குரியது எம் தாய்மொழியாகிய தமிழ் மொழி.

இணையத்திலும் இன்று தனக்கான இடத்தை தமிழ் கொண்டுள்ளது எமது தேவைக்காக பிறமொழிகளை கற்றாலும் கூட தமிழை போற்றுவோம்.

அதனை வளர்ச்சியடைய செய்ய நாம் ஒன்று படுவோம் தமிழராய் பெருமை கொள்வோம்.

சான்றோர் வளர்த்த தமிழை நாமும் வளர்த்து பெருமையடைய செய்வோம் இனி ஒரு விதி செய்வோம்.

You May Also Like :

தமிழர் திருநாள் கட்டுரை

பாரதியார் பற்றிய கட்டுரை தமிழ்