சதுப்பு நிலம் என்றால் என்ன

sathuppu nilam in tamil

உலகம் முழுவதும் சதுப்பு நிலக்காடுகளை வெப்ப மண்டலம் மற்றும் மித வெப்ப மண்டலப் பகுதிகளில் காணலாம்.

சதுப்பு நிலங்கள் உவர்ப்புத் தன்மை கூடிய சதுப்பு நிலங்கள் என்றும் நன்னீர் சதுப்பு நிலங்கள் என இரண்டு வகையாக உள்ளது. தற்போது சதுப்பு நிலக்காடுகள் ஆபத்தில் உள்ளன.

கடந்த 50 ஆண்டுகளில் 30 – 50% சதுப்பு நிலங்கள் இழக்கப்பட்டுள்ளன. எப்போதும் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளும் சதுப்பு நிலங்களில் ஏராளமான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பறவைகள் முகாமிடுவது வழக்கம்.

மழைக் காடுகளை எப்படி உலகின் நுரையீரல் என்று சொல்கின்றோமோ அதைப் போல் சதுப்பு நிலங்களைப் “பூமியின் சிறுநீரகம்” என்று அழைக்கின்றனர்.

உலகின் மிகவும் முக்கிய சதுப்பு நிலங்கள்

  • பாண்டனாஸ் (பிரேசில்)
  • ஒகவாங்கோ (பொட்ஸ்வானா)
  • கக்காடு (ஆஸ்திரியா)
  • மெகாங் (வியட்நாம்)
  • கேமார்க்யூ (பிரான்ஸ்)
  • பள்ளிக்கரணை (இந்தியா)

சதுப்பு நிலம் என்றால் என்ன

சதுப்பு நிலங்கள் ஈர நிலங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. சேறு நிறைந்த பகுதிகள்தான் சதுப்புநிலம் ஆகும். அதாவது ஆண்டு முழுவதும் ஈரப்பதத்துடன் கூடிய நிலங்களில் சிறு தாவரங்களும், நீர் வாழ் விலங்குகள் மற்றும் பறவைகளுடன் கூடிய பகுதியாகும்.

ஒரு ஏரியின் உபரி நீரோ அல்லது ஒரு ஆற்றின் உபரி நீரோ நீண்டகாலமாக ஒரே இடத்தில் சேர்வதால்கூட சதுப்பு நிலம் உருவாகலாம்.

சதுப்பு நில காடுகள் பயன்கள்

பல்வேறு வகையான உயிரினங்களுக்கு இயற்கை இருப்பிடங்களை சதுப்பு நிலங்கள் வழங்குகின்றன.

அதாவது சதுப்பு நிலக் காடுகளிலுள்ள மரங்களின் வேர்கள் மற்றும் கிளைகளின் தனித்துவமான அமைப்பு பல்வேறு வகையான பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள், பாலூட்டிகள் எனப் பல உயிரினங்களுக்கு இயற்கையான வாழ்விடத்தை வழங்குகின்றது.

சதுப்பு நிலமானது விலங்குகள் பறவைகளுக்கு மட்டுமன்றி மனிதனுக்கும் பயனுள்ள காடுகளாக உள்ளன.

அதாவது சுற்றுச்சூழல் அமைப்பியல் ஆர்வலர்கள் சதுப்பு நில காடுகள் வளிமண்டலத்தில் உள்ள அதிகப்படியான கார்பனை அகற்றுவதன் மூலம் காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவதற்கான முக்கிய வேலையை செய்கின்றது என்கின்றனர்.

சதுப்பு நிலத்தின் தன்மைகள்

சதுப்பு நிலங்கள் அடிப்படையில் ஒரு ஸ்பாஞ்ச்(Sponge) போன்று செயற்படும் தன்மையுடையவையாகக் காணப்படுகின்றன. அதாவது தன்னிடம் நீர் பாயும் நேரங்களில் அதை நிலத்தடியில் சேமித்து வைத்து வறட்சிக் காலங்களில் அந்தத் தண்ணீரை வெளிப்படுத்தும் தன்மை கொண்டவை.

எப்போதும் நீரை தக்கவைத்துக் கொண்டிருப்பதனால் உறுதியான பல்லுயிர் சூழலைக் கொண்டதாக சதுப்பு நிலங்கள் உள்ளன.

சதுப்பு நிலங்கள் கடலின் அருகில் அமைந்திருப்பதனால் கடல் நீரையும், கடல் பொங்கும் நேரத்தில் நிலத்துக்குள் வரும் நீரையும் தேக்கி வைக்கும் தன்மை சதுப்பு நிலங்களுக்கு மட்டுமே உண்டு. சதுப்பு நிலங்களானவை உப்பு நீரைக் கொண்டமைந்து காணப்படுகின்றன.

இன்றைய சூழலில் சதுப்பு நிலங்கள் மிகக் குறைவாகவே உள்ளன. எனவே அவற்றைப் பாதுகாக்க வேண்டிய சூழலில் அனைவரும் இருக்கின்றோம் என்பதனை மறந்துவிடலாகாது.

Read more: நஞ்சை நிலம் என்றால் என்ன

இயற்கை வளங்கள் என்றால் என்ன